முத்த கவிதை ஆறு ( என்னை ஆறு தலைப்பில்எழுத சொன்னார்கள்)
ஒன்று
வாங்கியபின் நாணயமாக
திருப்பி கொடுக்க வேண்டும்
கடன் மட்டுமல்ல
முத்தமும் தான்!
-தியாகு
இரண்டு
இதழ் ஒற்றனை நம்பி
ஏமாந்தது மனம்
முத்த ஓலைக்கு
பின் போர் தொடங்கியது!
-தியாகு
மூன்று
அமைதிக்கான யுத்தத்திலும்
சத்தம்எழுப்புவது
முத்தமே!
-தியாகு
நான்கு
கடும்பஞ்ச
காலத்திலும்
பசியாற்ற உதவுவது
கடையிதழ் முத்தமே
-தியாகு
ஐந்து
தன் உயிரை
மாய்த்துக் கொண்டது
தண்டனை கொடுத்தபின்
நீதிபதி பேனா முள்
தன் கடைசி முத்தத்துடன்
-தியாகு
ஆறு
கம்பனை போல
காவிய மெழுத சொன்னால்
வேறென்ன கேட்பேன் -உன்
கடையிதழ் முத்தம் தவிர
-தியாகு
ஒன்று
வாங்கியபின் நாணயமாக
திருப்பி கொடுக்க வேண்டும்
கடன் மட்டுமல்ல
முத்தமும் தான்!
-தியாகு
இரண்டு
இதழ் ஒற்றனை நம்பி
ஏமாந்தது மனம்
முத்த ஓலைக்கு
பின் போர் தொடங்கியது!
-தியாகு
மூன்று
அமைதிக்கான யுத்தத்திலும்
சத்தம்எழுப்புவது
முத்தமே!
-தியாகு
நான்கு
கடும்பஞ்ச
காலத்திலும்
பசியாற்ற உதவுவது
கடையிதழ் முத்தமே
-தியாகு
ஐந்து
தன் உயிரை
மாய்த்துக் கொண்டது
தண்டனை கொடுத்தபின்
நீதிபதி பேனா முள்
தன் கடைசி முத்தத்துடன்
-தியாகு
ஆறு
கம்பனை போல
காவிய மெழுத சொன்னால்
வேறென்ன கேட்பேன் -உன்
கடையிதழ் முத்தம் தவிர
-தியாகு
Tags
கவிதை