காணகுயில்கள் மட்டும் பாடினால்

காணகுயில்கள் மட்டும் பாடினால்
காடே நிசப்தமாகிவிடும் - அதோ அந்த
காக்கைகளும் கரையட்டும் என்றார் கவிஞர் ஆதலால்
காவியக் கவிஞர்களுக்கு மத்தியில் நானும்
கவிபாட வந்தேன்

மன்னர்களை பாடி மானியம் பெற்றான்
அக்கால புலவன் -இந்நாட்டின்
மக்களை பாட வந்தேன் -அவர்களின்
வறுமையை பாடவந்தேன்
வாட்டத்தை போக்க வந்தேன்!
சாதியை சாட வந்தேன் -இந்த
சாமியை சாட வந்தேன்
நிப்பாட்டு என்றான்

"நீஎன்ன வக்காலத்து புலவன்
வருனாசிரமம் தெறியாத வரட்டு புலவன்என்றான்
உண்பதும் உடுப்பதும் நாங்கள் -அதற்க்கு
உழைப்பவன் கீழ்சாதி
எங்கள்கழிவுகளை சுமப்பவன் கீழ்சாதி
சாமியை திட்டாதே -
சகுணத்தை திட்டாதே - அந்த சாமிதானே
உன்னைசமைத்து உலகையும் சமைத்தது"



சாதி இரண்டுதான் - உண்டுபல
சாதிகள் படைத்தது உன் சுயநலப்போக்கு
சாமிதான் என்னை படைத்தான்என்றால்
சமமற்ற சமுதாயத்தை யார் படைத்தார்!

கருணை கடவுளின் ஒரு கண்ணில்
வெண்ணெயும் -மறுகண்ணில்
சுண்ணாம்பும்ஏன்ன்வைத்தார்!
கடவுள் அல்லடா -நமது முன்னோர்
குரங்குதானடாஎன்றேன்!

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post