நான் கற்ற புத்த தியானம்

நான் கற்ற புத்த தியானம்
மதுரைக்கு நான் சமீபத்தில் சென்றிருந்த பொழுதுபுத்தர் தியான நிலையம்என்ற பெயர் பலகையைதற்செயலாக பார்க்க நேர்ந்தது!.
சரிஎன்னதான் சொல்லுவார்கள் தியாணத்தைபற்றிஎன்ற எண்ணத்துடன் சென்றேன்.
அங்கே ஒரு புத்தபிக்கு இருந்தார் அவருடன் உரையாடியபொழுதுதியானத்தைபற்றி நான் கொண்டிருந்த கருத்துக்களில் இருந்தகுறையை கண்டேன்.
அதாவது ,
1.தியானம்என்பது மனஒருமைபாடுடன் ஒரு உருவத்தை நினைப்பது(ராமகிருஸ்ணர்போதித்து மற்றும் பொதுவாக அனைவரும் செய்வது)
2."நான் யார் "என்ற கேள்வியை விசாரணை செய்வதன் மூலம்மூலத்தை கண்டறிவது(ரமண வழி)

ஆனால் புத்தபிக்கு ,

மேற்க்கண்ட இரண்டு முறைகளிலும் உள்ள நடைமுறை சிக்கல்களைசொன்னார்.
1.மனதை ஒரு உருவத்தில் குவிப்பது அவ்வளவுஎளிதானதல்லஅந்த முயற்சியிலேயே தியானத்தை கைவிட நேரிடலாம்.
2."நான் யார்என்ற கேள்வியை கேட்பது யார்" இந்த பதிலால் இந்தவகை தியானம் மேற்கொண்டு நடக்காது

சரி இதற்க்கு பதில் தாங்கள்எந்த முறையில் தியானம் செய்ய சொல்கிறீர்கள்என்று கேட்டதற்க்குஅவரது பதில்!

முதலில் தியானம் செய்ய அமர்ந்தவுடன்
மூச்சின் இயக்கத்தை கவனிக்க வேண்டும், மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது தலையின்மேற்ப்பக்கம் உள்ள "சக்கரம்"த்தை(மனித உடலில் ஆறு சக்கரங்கள் ஆன்மிக உடலில் உள்ளன) மனதால் நினைக்க வேண்டும்
அதே போல
மூச்சை வெளியே தள்ளும் பொழுது மூலாதார சக்கரத்தை(அதாவதுமுதுகு தண்டின் கீழ் பகுதியை )நினைக்க வேண்டும்என்று சொன்னார்

அவர் கூறிய மாதிரி செய்து பார்த்தேன் மனமானது ஒருமுனைபட்டதுடன்தியானமும் நன்றாக அமைந்தது.

அன்புடன்
தியாகு

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post