சங்கே முழங்கு

இல்லாதவன் இருப்பவனிடம்
இருப்பவற்றை எல்லாருக்கும் கொடுஎன
கத்தி கத்தி கேட்டாலும் தரமாட்டான் -எச்சில்
கையால் காக்காய் விரட்டமாட்டான்.

பொல்லாதவன் பிழைக்க தெரியாதவன்
பொடாவில் போடுங்கள் என்பான்-பொதுவாக
சொல்லால் திருத்தமுடியாத போது-பல
சோம்பேறி சாமியார்களை துணைக்கழைத்து

சாமியென்பான் பூதமென்பான்
சதுர்வன வேதமென்பான்
சாதியென்பான் பேதமென்பான் -ஐயகோ
சண்டையை மூட்டிடுவானே!.

சாப்பிட சோறில்லாதவனுக்கு
சாதி எதற்க்கு-அட சாமிதான் எதற்க்கு
சமுதாய பிரிவினைகளும் சண்டைகளும்-தெரியாமல்
சந்துக்கு சந்து சாமிவைத்து கும்பிடும் நண்பா?.


எல்லாரும் சமமென்று -எங்கள்
ஜனநாயகம் முழங்குது என்பான
ஏழை எவனாவது ஆட்சிஏறியதுண்டா-அட ஏழைபெயரை
சொல்லி ஆட்சஏறியவனும்ஏதாவது செய்ததுண்டா?

காசுபார்க்கும் தொழிலாக கட்சிகள்மாறிபல
காலமாட்சி பழங்கதையாட்சி.
சாவு ஒருமுறைதான் வாழ்வும் ஒருமுறைதான்
சாதித்தவனின் வாழ்வே-இத்தனைகால
சமுதாய வரலாறு!

சிந்தனையை கூராக்கி சிதைத்திடுவீர்
சமுதாய பேதங்களை-செதுக்கிடுவீர்
புதிய சமுதாய வாழ்வுதனை!
சங்கே முழங்கு!

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post