Vladimir Lenin

1.A revolution is impossible without a revolutionary situation; furthermore, not every revolutionary situation leads to revolution.
Vladimir Lenin

2.
Any cook should be able to run the country.
Vladimir Lenin

3.
Crime is a product of social excess.
Vladimir Lenin

தேசிய இனபிரச்சனையில் அருணபாரதியுடன் விவாதம்

தோழர் அருணபாரதி இணையத்தில் அறிமுகமானவர் அவருடன் நடத்திய உரையாடலை விவாதத்துக்காக அவரின் அனுமதி பெற்று இங்கு பதிகிறேன் -தியாகு


me
: எந்த முரண்பாடுகள் முதன்மையானது தோழர் வர்க்க முரண்பாடா இன முரன்பாடா

அருணபாரதி: ஓர் இனம் தன்னைத் தானே ஆளக்கூடிய உரிமையல்லாத எல்லா இடத்திலும், அவர்களை ஒடுக்கக்கூடியவர்களிடத்திலிருந்து பிறக்கும் இன முரண்பாடே முதன்மை முரண்பாடு...
ஓர் இனம் தன்னைத் தானே ஆளக்கூடிய ஒர் தேசிய அரசில், அம்மக்களுக்கும் அவர்களை ஒடுக்கும் தேசிய முதலாளிகளுக்குமான வர்க்க முரண்பாடே முதன்மை முரண்பாடு..
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தொடர்ந்து தில்லியால் ஒடுக்கப்படுவதால் ஆரியப் பார்ப்பனிய இந்து மதவெறி இந்திய அரசுக்கும், தமிழ்த் தேசிய இனத்திற்குமான இன முரண்பாடே முதன்மையானது...
அதே போல், ஈழத்தமிழர்களை ஒடுக்கும் சிங்கள அரசுக்கும் ஈழத்தமிழர்களுக்குமான முதன்மை முரண்பாடும், இனமே ஆகும்..
புரிகின்றதா,..?
me: ம்ம் ஆகவே இனவிடுதலைக்குத்தான் முதலில் போராடனுமா அதற்கு வர்க்க போராட்டம் அடுத்த கட்டமா அப்படியெனில் எப்போ வர்க்க போராட்டம் நடத்துவது
அருணபாரதி: முதலில் உங்களுக்கென ஒரு நாடு, வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதியை உருவாக்குங்கள்.. அந்நாட்டில் உள்ள தேசிய அரசை, அரசு என்ற ஒடுக்குமுறைக் கருவியைக் கைப்பற்றுங்கள்..
அதை விடுத்துவிட்டு, எல்லையே இல்லாத ஓர் பகுதியில், முதலில் யாரை யாரையெல்லாம் திரட்டி புரட்சி நடத்துவீர்கள்..?
கேரளமும், கன்னடமும், ஆந்திரமும் என்றைக்காவது தமிழகத்தைப் போல தில்லி எதிர்ப்புக் கருத்தியலைக் கொண்டிருந்ததா..?
ஆரிய மொழியான சமஸ்கிருதத்துடன் மட்டுமல்லஆரிய இந்தியத் தேசியத்துடனும் சமரசம் கொண்ட அவர்கள் நம்மோடு இணைந்து போராட முதலில் முன் வருவார்களா...?
தமிழ்நாட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டும் என சொல்லும் தமிழரல்லாத ஒரு இந்தியத் தேசியரை எங்காவது நீங்கள் கண்டதுண்டா..?கேரளப் பாட்டாளி வர்க்கமும், தமிழ்த் தேசியப் பாட்டாளி வர்க்கமும், இன்னபிற பாட்டாளி வர்க்கங்களும் இணைந்து இந்திய முதலாளிகளை முறியடிக்க வேண்டும் என்கிற இந்தியப் புரட்சிக்கு, இன்றைய சூழ்நிலையில் ஏதேனும் சாத்தியமிருக்கிறதா...?
கேரளாவில் உள்ளப் பாட்டாளி வர்க்கம் எவ்வளவு புரட்சிகரமானதாக இருந்தாலும், முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமை சரி தான் என்று அறிவிக்குமா..me: ம்ம்
அறிவிக்காது
அருணபாரதி: சேகுவேரா வழிவந்த கியுபா, சாவேஸ், மாவோ வழிவந்த சீனா என வர்க்கப் புரட்சி வெற்றி பெற்ற எல்லா பொதுவுடைமை நாடுகளும் அவரவர் சொந்த நலனில் அக்கறை காட்டி சர்வதேசியத்தை அழித்துவிட்ட பிறகு, புதிய பாட்டாளி வர்க்க சர்வதேசியம் தோற்றம் பெற வேண்டிய அவசியம் உள்ளது..
me: அப்போ பொதுப்படையான் இராணுவமும் பொது அரசாங்கமும் கொண்டிருக்கும் இந்திய அரசை துண்டு துண்டாக இருக்கும் புரட்சிகர சக்திகல் இணைந்து எப்படி எதிர்க்க முடியும்
அருணபாரதி: அதற்கு இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒர் இனமாவது தமக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற தீர்க்கமாக போராடி, மற்ற இனங்களை அத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும்..
me: இந்திய தேசிய புரட்சியின் மூலம் இந்திய அரசை தூக்கி எறிய வேண்டாமா
அருணபாரதி: தமிழ்த் தேசியப் பாட்டாளி வர்க்கம் இதற்குத் தயார்...
ஆனால், மற்ற தேசிய இனங்களில் யார் இதற்கு தயார்..?
அவர்கள் தயராகி வரும் வரை நாம் இந்தியத் தேசிய அரசின் இன ஒடுக்குமுறையை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமா..?
நல்லாயிருக்கிறது ஞாயம்..
தமிழ்நாட்டில் ஓரளவு தற்பொழுது மெல்ல எழுந்துள்ள இந்தியத் தேசிய எதிர்ப்பு நிலை, காசுமீர், மணிப்புர், அசாம், மிசோரம் தவிர வேறு எந்த மாநிலத்திலாவது எழுந்திருக்கிறதா..?
முதலில் அதனை எழச் செய்யுங்கள்..
கேரளாவிலும் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும், மகாராட்டிரத்திலும் முதலில் இந்தியப் புரட்சிக்கான விதையை விதையுங்கள்..
தமிழ்நாட்டில் ஏற்கெனவே புரட்சித் தேவை என்ற உணர்வு எழுந்து விட்டது..
தமிழ்நாடு மட்டுமே விடுதலை பெற வேண்டுமென புரட்சியை முன்னெடுக்கும் பொழுது தான் கேரளம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் புரட்சிக்கான ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் எழும்பி, ஒருவேளை சாத்தியப்பட்டால் அதுவே இந்திய புரட்சிக்கு இட்டு செல்லும்..
me: ம்ம்
அருணபாரதி: ஆனால், வெறும் தமிழ்த் தேசியப் புரட்சியை மட்டுமே குறை கூறிக் கொண்டிருந்தால், நீங்கள் நம்பியிருக்கும், கனவுகாணும், இந்திய புரட்சிக்கும் அது ஆப்பு வைக்கும்..
me: ம்ம்
அருணபாரதி: தமிழ் இனம் மற்றும் அனைத்துப் பிற இனங்களின் சுயநிர்ணய உரிமைகளையும் மதிக்கும், அதற்கு மதிப்பளிக்கும் இந்திய அரசு என்பது சாத்தியமே இல்லை..
அதனை வரலாற்றில் பின்னால் தான் நீங்கள் உணர்வீர்கள்..
தமிழகத்தைத் தவிர வேறு எங்குமே இவ்வாறான புரட்சிகர சக்திகளை வளர்த்தெடுக்காமல் இது சாத்தியப்படாது..
முதலில் அதற்கான முன்முயற்சியை எடுங்கள்..
me: ரச்யா போன்ற நாடுகலில் நடந்த புரட்சி இப்படித்தான் தனிதனியாக நடந்ததா
அருணபாரதி: இந்தியாவில் தற்பொழுது இருக்கும் நிலை ரசியாவில் அன்று இல்லை..
அருணபாரதி: ரசியா மன்னராட்சியின் கீழ் ஒன்றுபட்டிருந்த நேரத்தில், அங்குள்ள பல்வேறு இன மக்களும் இணைந்து போராடுவதற்கான ஒரே இயக்கமாக லெனினின் இயக்கம் வளர்ந்திருந்தது..?
இந்தியாவில் அது போன்ற இயக்கத்தை கட்டி எழுப்புவது சாத்தியமா முதலில்...?
me: அத்தகைய ஒரு இயக்கத்தை நாம் இந்ஹியாவில் கட்ட முடியாமைக்கு என்ன காரணம்
அருணபாரதி: முல்லைப் பெரியாற்றை விட்டு கொடுக்க மறுக்கும் மலையாளிகளும், காவிரியை மறுக்கும் கர்நாடகமும், நமக்கு எதிரிகளல்ல.. அவர்களை தூண்டி விட்டு தேசிய இனங்களின் புரட்சிகர சக்திகளை இணைந்து விடாமல் தடுக்கும் இந்திய ஆரிய இனவெறி அரசே இதற்கு முதல் எதிரி..
மலையாளிகள் உள்ளிட்ட இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களும், தமிழர்களுக்கும் வேறுபாடு உள்ளது..
தமிழர்கள் இத்துணைக் கண்டத்தின் மூத்தக் குடிமக்கள்..
தமிழர் அல்லாத அனைத்து இனங்களும் ஆரிய இனத்துடன் சமரசம் செய்து கொண்ட இனக்குடும்பங்கள்..
இது அடிப்படை..
me: ம்ம்
அருணபாரதி: இந்திய அரசு ஆரியப் பார்ப்பனர்களின் தலைமையிலான அரசு..
ஆரியத்துடன் சமரசம் கொள்ளாத அரசுகள் மட்டுமே இந்தியாவை எதிர்ப்பது ஏன் என்று யோசிசத்துண்டா..?
தமிழர்கள் தமிழர் மரபினம்..
காசுமீரகள் தனித்த மரபினம்..
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மங்கோலிய மரபினம்..
me: தனிதனி இனமாக இருப்பதால் புரட்சி தனிதனியாத்தான் நடத்த முடியும் என்பது எப்படி சாத்தியம் இல்லை ஏனென்றால் தமிழ்நாட்டில் புரச்சி நடக்கும்போது இந்திய் அரசு அப்படியேதான் இருக்கும் அது எளிதாக தமிழ் நாட்டில் நடக்கும் புரட்சியை நசுக்கும் அல்லவா
அருணபாரதி: கண்டிப்பாக நசுக்கும்.. அப்பொழுது, நமக்காக கேரளமும், கர்நாடகமும் இணைந்து குரல் கொடுக்குமா அல்லது இந்திய அரசுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் நம்மை ஒடுக்குவார்களா..?
me: கேரளாவில் புரட்சிகர பாட்டாளிவர்க்கம் இருக்கிறதா?
அருணபாரதி: உருவாக்க வேண்டும்..
me: அவர்கள் தற்போதைய நிலவரப்படியும் தனியாக புரட்சி செய்யும்போதும் ஒடுக்கத்தான் செய்வார்கள்

அருணபாரதி: ஒரு ஒடுக்கும் அரசு, தன்னிடமுள்ள அடிமை விலகிச் செல்ல முற்படும் போது ஒடுக்காமல், கம்யுட்டர் கீபோர்டையா சொடுக்கிக் கொண்டிருப்பான்..?
ஒடுக்குமுறைகளை வென்று தேசம் படைப்பது தானே பாட்டாளி வர்க்கத்தின் லட்சியம்..
me: கண்டிப்பா ஒடுக்குவான்
புரட்சிகர பாட்டாளி வர்க்கம் உருவானாலும் அது தமிழ் பாட்டாளி வர்கத்தை ஆதரிக்காது என்று எப்படி நீங்கள் முன் முடிவுடன் வருகிறீர்கள்?
அகில இந்திய அளவில் ஒரு புரட்சிகர கட்சியை கட்டாமல் இந்த ஒருங்கினைப்பை எப்படி செய்வது
அருணபாரதி: இந்தியா என்ற கட்டமைப்பை, ஆரியப் பார்ப்பனியபப் புனைவை, தேசியத்தை ஏற்றுக் கொண்ட எவரும் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுக்க மாட்டார்கள்..
இந்தியாவின் போலி விடுதலை எப்படி சாத்தியமானது..?
me: உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள் என்ருதான் மார்க்ச் சொன்னார் உலக இனமே ஒன்று சேர் என சொல்லவில்லையே
அருணபாரதி: அய்யோ.. அய்யோ..
Workers of all Countries Unite..
இது தான் மார்க்சின் முழக்கம்..
me: போலி விடுதலையே இந்தியா பூராவும் குறிப்பிட்ட நிபந்தனையுடன் இந்தியவிடுஹலை எனும் ஒர்ரே குறிக்கோளுடன் மட்டுமே செய்யப்பட்டதை பார்க்கும் போது
அருணபாரதி: இதற்கு தமிழாக்கம், அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பது தான்..
me: இதை உணருகிறீர்களா
அருணபாரதி: மார்க்சின் முழக்கப்படி தமக்கான நாடுகள் உள்ள பாட்டாளி வர்க்கங்கள் இணைவது தான் சர்வதேசியம்..
me: மார்க்ஸ் இனபிரச்சனையை பேசி இருக்கிறாரா
அருணபாரதி: அதிகாரம் கொண்ட நாட்டை பெறாத, தமிழினம் உங்கள் சர்வதேசியத்தில் முதலில் இணைய முடியுமா என்று கூறுங்கள்..
me: பாட்டாளி வர்க்கமாக ஏன் இனைய முடியாது
சுரண்டபடுகிற வர்க்கமாக ஏன் ஒன்றிணைய கூடாது
அருணபாரதி: எங்கு இணைந்திருக்கிறது என்ற காட்டுங்கள் முதலில்..
me: ஏன் இனிமேல் ஒன்றினைக்க முடியாதா
அருணபாரதி: முடியும்...
me: நீங்கள் தான் சொன்னீங்க கேரளாவில் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கனுன் என்று
அதையும் நாம்தானே செய்யனும்
அப்படி இல்லவிட்டால் நடுவழியில் நிற்போம் அல்லவாஅருணபாரதி: ஒன்றிணைக்க முடியும்.. அதற்கான முதல் தேவை, அங்கு பாட்டாளி வர்க்கங்களை எழும்ப செய்வது...
கேரளாவில் அதற்கு வேலை செய்யுங்கள் யார் வேண்டாமெனத் தடுத்தது..?
அருணபாரதி: தமிழ்நாட்டில் மட்டும் அமைப்புக் கட்டிக் கொண்டு அதனை சொல்ல வேண்டாம்..
நாம் தான் அதனை செய்ய வேண்டும் என்று யார் சொன்னது..?
me: கேரளாவில் கட்டினால் என்ன அங்குள்ள கட்சியுடன் இணைத்து கொண்டால் என்ன
அருணபாரதி: முதலில் அந்தந்தப் பாட்டாளி வர்க்கம் பக்கத்துப் பாட்டாளி வர்க்கத்துடன் இணைவதற்கான விருப்பத்துடன் இருக்க வேண்டுமே..
கேரளாவில் அது போன்ற பாட்டாளி வர்க்கக் கட்சி, புரட்சிகரமானக் கட்சி எழுந்துவிட்டால், நாம் நிச்சயமாக அவர்களுடன் உறவு வைத்துக் கொள்வோம்..
me: ஒரு விசய்ம் என்னவென்றா ல்ஒரு விவாதம் செய்து ஒரு குறிப்பிட்ட நிபந்தனையில் நீங்களும் நாங்களுமே ஒன்ரினைய முடியவில்லை எனில் எப்படி அவர்களை இணைப்பது
எனக்கு என்னமோ தெளிபடுத்தல் ரொம்ப முக்கியமா படுது
அருணபாரதி: ஆனால், அவர்களும் முல்லைப் பெரியாறு எங்களுக்கெ என்று முழக்கமிட்டால் என்ன செய்வீர்கள் அய்யா..?
21:06 me: முல்லை பெரியாறு முல்லை பெரியாறு மொத்த பாட்டாளி வர்க்க புரட்சிக்கும் இதுஹான் முன் நிபந்தனையாகவும் குறுக்காகவும் நிர்கிறது
அருணபாரதி: தோழரே.. நாம் அதற்கான முயற்சிகளை எடுக்கலாமே தவிர.. இதனை அவர்கள் மீது திணிக்கக் கூடாது.. அவர்கள் தம் சொந்த தேசிய இனத்திற்கு விடுதலை தேவை என்று உணராத நிலையில், இது எப்படி சாத்தியமாகும்..?
21:07 முல்லைப் பெரியார் ஓர் அணை சிக்கலாக குறுக்கிப் பார்க்காதீர்..
ஓர் உரிமை சிக்கல்..
நமக்கான உரிமையை அவர்கள் மறுப்பதற்கான காரணம் தான் என்ன..?
ஏன் எதிர்க்கிறார்கள்..?
me: இன உரிமையை முன்னிலைப்படுஹ்தாமல் வர்க்க நிலையை முன்னிலைபடுத்தினால்
21:08 அருணபாரதி: முல்லைப் பெரியாற்றின் நீரால் பாசனம் செய்வது தமிழ்நாட்டு விவசாயப் பாட்டாளி வர்க்கம் அல்லாமல் டாடாவும், பிர்லாவுமா பாசனம் செய்கிறான்..? முதலில் இதை சொல்லுங்கள்..
me: வர்க்கமாக திரட்டுவதில் என்ன சிக்கல் இருந்தாலும் அதுவே முதலும் முடிவுமான ஒரு புரட்சியை நோக்கி கொண்டு செலுத்துமா இல்லையா
21:09 அருணபாரதி: நிச்சயமாக.. ஆனால், இணைவது என்ற பெயரில் எம தேசிய இனத்தின் உரிமைகளை எக்காரணம் கொண்டும் எம்மால் விட்டுக் கொடுக்க முடியாது..
me: சரிநாளை தொடருகிறேன்
அருணபாரதி: மகிழ்ச்சி..
விவாதம் நன்றாகவே இருந்தது..
நாளை எனக்கு வேலை இருக்குமென நினைக்கிறேன்..
21:10 நானே உங்களை தொடர்பு கொள்கிறேன்..
தொடர்ந்து பேசுவோம்..
me: எப்போ முடியுமோ அப்போ செய்யலாம் அவசரம் இல்லை
சரி
அருணபாரதி: மகிழ்ச்சி..



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

25 Responses so far.

  1. நல்ல சரியான பயனுள்ள கருத்து செறிவுமிக்க விவாதம்
    தொடருங்கள் அண்ணா

    காத்திருக்கிறோம்
    நன்றியுடன்

    கரிசல்காடன்

  2. எல்லாம் சரி மிஸ்டர் அருணபாரதி
    மணியரசன் வெளி நாடு சென்று வந்த போது புலம் பெயர் மக்கள் அளித்த பணத்தை சுருட்டிக்கொண்டு உங்கள் கட்சியின் முன்னணி தலைகளுக்கே சாக்லேட்டை மட்டும் கொடுத்தாரே அப்போது உங்களுக்கும் ஃபாரின் சாக்லேட் கிடைத்ததா ?

    சொந்த வாழ்க்கையில் துளியும் நேர்மையற்ற அழுக்கு படிந்தவர்கள் புரட்சி செய்யப்போகிறார்களாம், தமிழ்தேசிய புரட்சி.

    இன்றைக்கு மிட்டாய்க்காக பணத்தை பதுக்கிய கயவர்கள்
    நாளை பணத்துக்காக புரட்சியை கூட காட்டிக்கொடுக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம் ?

  3. தோழர் சர்வதேசிய வாதி

    அருணபாரதிக்கு சாக்லேட் கிடைத்தால் என்ன குச்சி மிட்டாய் கிடைத்தால் என்ன

    தேசிய இன பிரச்சனையில் அவருடைய கருத்தை அறிந்துகொள்ள அது உதவாது

  4. Partha says:

    சர்வதேசியவியாதியே...
    இங்கே என்னா மாதிரு விவாதம் நடக்குது...அதுல ஒரு கருத்து சொல்லணும்னு அக்கறை இல்ல...துப்பு இல்ல...
    நெற்றிக் கண், சிவப்பு நாடா ரேஞ்சுக்கு அள்ளி விடறியே...
    கோட்பாட்டப் பேசு தம்பி...
    வக்கில்லன்னா...ஒதுங்கு நாங்க பேசிக்கிறோம்...
    மணியரசன் பணம் சுருட்டின கதைய அவுத்து வுடணும்னு மனசு அரிச்சா...
    தில் இருந்தா உன் சொந்தப் பேர் போட்டு பொஸ்தகம் போடு...
    அப்புறம் உனக்குக் கிடைக்கும் சாக்லேட்டு கட்லெட்டு எல்லாம்!

  5. ஆதாரமில்லாத அவதூறுகளை வீசுவதும், வாய்க்கு வந்தபடி ஏசுவதும் தான் ம.க.இ.க.வினருக்கு பிடித்த பொழுது போக்கு என நினைக்கிறேன்.

    பேசுவதற்கு எந்த சரக்குமில்லாத நிலையில், சம்பந்தமில்லாத அவதூறுகளை வீசுவதன் மூலம் உங்கள் அரசியலை உணர்த்தி, தாங்களாகவே அம்பலப்பட்டுள்ளீர். நன்றி!

    தோழர் மணியரசன் அவர்களது நேர்மை குறித்தும், சொந்த வாழ்க்கை குறித்தும், எல்லோரையும் விட எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

    கொள்கை உணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் இன நலனை முன்னிறுத்தி பொது வாழ்வில், ஈடுபடுவோர் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வீசு, சேறடிக்க முயலும், பாசிச கழிசடைகளுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை.

  6. தோழர்களே, சண்டைவேண்டாம்

    விவாதத்தை தொடருவோம்

    தேசிய இனமே பிரதானம் அதன் அடிப்படையில் கட்சி கட்ட வேண்டும் அதன் அடிப்படையில் புரட்சி செய்ய வேண்டும் எனபதே பிரதான கருத்தாக
    உங்கள் பேச்சில் ஒழிக்கிறது


    வர்க்க முரண்பாடே பிரதானமானது என்பது எனது பேச்சில் அடிநாதமாகும்

    எல்லா தேசிய இனங்களையும் ஒடுக்குகிறது ஒரு மைய்யபடுத்தப்பட்ட அமைப்பு
    அதுதான் இந்திய அரசு

    அதை எதிர்க்க அந்தந்த தேசிய இனங்கள் தனிதனியாக திரளவேண்டும் என சொல்லும் நீங்கள்:

    இதுவரை ரஸ்ய புரட்சியிலும் ,சீன புரட்சியிலும் தேசிய இனங்கள் இவ்வாறுதான் திரண்டார்களா என்பதை விளக்க வேண்டும்

    சீனாவில் 56 தேசிய இனங்கள் இருக்கின்றன

    வெளியிருந்து ஜப்பான் தாக்கியது


    ஹன் தேசிய இனம்தான் பெரும்பான்மை இனம் ஆனால்

    தேசிய இனங்களிடையே இருந்த முரண்பாட்டை

    மாவோ ஒற்றுமை -விமர்சனம் -ஒற்றுமை என்ற ரீதியில் அனுகினார்

    அது மட்டுமில்லாமல் பல்வேறு முரண்பாடுகள் அங்கே நிலவியது

    விவசாயி -தொழிலாளர் முரண்பாடு

    தொழிலாளர் -மத்தியதர வர்க்க முரண்பாடு

    முதலாளி -குட்டிமுதலாளி முரண்பாடு இவையெல்லாம் முரண்பாடுகள்

    ஆனால் ஒரு புதிய ஜனநாயக புரட்சிக்கு இவற்றுள் எது தலையாயது

    வர்க்க போராட்டத்தை முதன்மையாக கொள்ளாத ஒரு கட்சி இன முரண்பாட்டின் மூலம் என்ன சாதிக்கும்


    இன முரண்பாடென்பது தீர்க்கப்படவேண்டியதா அல்லது அதிகரிக்கப்பட வேண்டியதா

    இனமுரண்பாட்டின் வாலை தொடர்ந்து பிடித்து கொண்டு இருப்போமா இல்லையே ஆனால் வர்க்க முரண்பாடு அடுத்த கட்டத்துக்கு நகரும் இனமுரண்பாடு

    பகையிலும் சண்டையிலும்தான் முடியும்

    அது இயக்கவியல் சிந்தனை இல்லையே

    இதை விளக்கவேண்டும் தோழர் அருணபாரதி

  7. தோழர்களே, சண்டைவேண்டாம்

    விவாதத்தை தொடருவோம்

    தேசிய இனமே பிரதானம் அதன் அடிப்படையில் கட்சி கட்ட வேண்டும் அதன் அடிப்படையில் புரட்சி செய்ய வேண்டும் எனபதே பிரதான கருத்தாக
    உங்கள் பேச்சில் ஒழிக்கிறது


    வர்க்க முரண்பாடே பிரதானமானது என்பது எனது பேச்சில் அடிநாதமாகும்

    எல்லா தேசிய இனங்களையும் ஒடுக்குகிறது ஒரு மைய்யபடுத்தப்பட்ட அமைப்பு
    அதுதான் இந்திய அரசு

    அதை எதிர்க்க அந்தந்த தேசிய இனங்கள் தனிதனியாக திரளவேண்டும் என சொல்லும் நீங்கள்:

    இதுவரை ரஸ்ய புரட்சியிலும் ,சீன புரட்சியிலும் தேசிய இனங்கள் இவ்வாறுதான் திரண்டார்களா என்பதை விளக்க வேண்டும்

    சீனாவில் 56 தேசிய இனங்கள் இருக்கின்றன

    வெளியிருந்து ஜப்பான் தாக்கியது


    ஹன் தேசிய இனம்தான் பெரும்பான்மை இனம் ஆனால்

    தேசிய இனங்களிடையே இருந்த முரண்பாட்டை

    மாவோ ஒற்றுமை -விமர்சனம் -ஒற்றுமை என்ற ரீதியில் அனுகினார்

    அது மட்டுமில்லாமல் பல்வேறு முரண்பாடுகள் அங்கே நிலவியது

    விவசாயி -தொழிலாளர் முரண்பாடு

    தொழிலாளர் -மத்தியதர வர்க்க முரண்பாடு

    முதலாளி -குட்டிமுதலாளி முரண்பாடு இவையெல்லாம் முரண்பாடுகள்

    ஆனால் ஒரு புதிய ஜனநாயக புரட்சிக்கு இவற்றுள் எது தலையாயது

    வர்க்க போராட்டத்தை முதன்மையாக கொள்ளாத ஒரு கட்சி இன முரண்பாட்டின் மூலம் என்ன சாதிக்கும்


    இன முரண்பாடென்பது தீர்க்கப்படவேண்டியதா அல்லது அதிகரிக்கப்பட வேண்டியதா

    இனமுரண்பாட்டின் வாலை தொடர்ந்து பிடித்து கொண்டு இருப்போமா இல்லையே ஆனால் வர்க்க முரண்பாடு அடுத்த கட்டத்துக்கு நகரும் இனமுரண்பாடு

    பகையிலும் சண்டையிலும்தான் முடியும்

    அது இயக்கவியல் சிந்தனை இல்லையே

    இதை விளக்கவேண்டும் தோழர் அருணபாரதி

  8. சர்வதேசியவாதி என்பதை இனவாத வெறியுடன் கடித்து குதறி துப்பும் 'பார்த்தா' மார்க்சியத்தை பற்றியும் சர்வதேசியம் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் பார்வை இவ்வளவவு மட்டமானதாக அருவருப்பூட்டுவதாக இருக்கிறதே ! இந்த லட்சணத்தி, அதாவது சர்வதேசியத்தின் மீது இவ்வளவு மட்டமான பார்வையை வைத்திருக்கும் நீங்கள் எதற்காக கட்சி பெயரில் பொதுவுடமையை மட்டும் வைத்திருக்கிறீர்கள் ? அதையும் கடாசி அறிய வேண்டியது தானே.

    ஆதாரம் இல்லாமல் பேசுகிறோமாம், அது தான் ராசோ உங்கள் யோக்கியதையை போட்டு நாறடித்திருக்கிறாரே அப்புறம் என்ன ஆதாரம். சீட்டு கம்பெனி நடத்தி புரட்சி செய்ய கிளம்பியுள்ள கைப்புள்ளைகளிடம் எமக்கு என்ன பேச்சு! சீசீ மட்டமான ஆட்கள், மட்டமான கட்சி.

    தோழர் தியாகு,
    இந்த இனவாத குமபலிடம் நாம் தொடர்ந்து விவாதம் நடத்தினோம், ஒரு கட்டத்தில் இது விவாதிக்க தகுதியற்ற கூட்டம் என்று உணர்ந்ததால் நாமே விலகிக்கொண்டுள்ளோம்.
    விவாத சுட்டி கீழே உள்ளது காண்க.

    http://vrinternationalists.wordpress.com/2009/09/28/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/




    http://vrinternationalists.wordpress.com/2009/10/12/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/




    http://vrinternationalists.wordpress.com/2009/10/15/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE/

  9. Partha says:

    தோழர் தியாகு,
    ருக்ஷ்யாவில் நிலவியது தேசிய இன் ஒருக்குமுறை அல்லவே. அது மிகத் தெளிவான முடியாட்சி ஒடுக்குமுறை. ஜார் வம்சத்தின் ஏகபோகத்தில் பல தேசிய இனங்கள் பாகுபாடு இன்றி சுரண்டப்பட்டன. அத் தேசிய இனங்களுக்குள் முரண்பாடு - ஒருங்கிணைவுக்கு நிபந்தனை விதிக்கும் அளவுக்கு இருக்கவில்லை. ஆனாலும், தோழர் லெனின் அனைத்து தேசிய இனங்களுக்கும் பிரிந்துஇ போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை அளித்தார்.
    மேலும்...
    இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலும் காலனிய ஏகாதிபத்தியம்தான் மைய முரணே தவிர, தேசிய இன இடுக்குமுறை அல்ல.
    சீனப் புரட்சியிலும் ஹன் தேசிய இனம் பிற தேசிய இனங்களை ஒடுக்கியது என்ற குற்றச்சாட்டு எழுந்தது இல்லையே தோழர்.
    ஜப்பானியப் படைகள் சீனாவைக் காலனி நாடாக ஆக்ரமித்தபோது சீனாவின் மைய முரண்...ஏகாதிபத்திய எதிர்ப்புதானே தவிர...தேசிய இன முரண்பாடு அல்ல.

    ஆகவே தோழர்...என் கேள்வி...
    சீனாவில் தேசிய இன ஒடுக்குமுறை வந்தால்...அப்போதாவது அங்கேயுள்ள ஒடுக்கப்படும் இனங்கள் விடுதலை கேட்கலாமா...? கூடாதா...?

    ருக்ஷ்யாவில் தேசிய இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை லெனின் வழங்கியது சரியா...? தவறா...?



    அமெரிக்க, இந்திய ஏகாதிபத்தியங்களின் கைக்கூலித் தேசிய இனம் என்ற அவப் பெயரைத் திபெத் மீது சுமத்தி...திபெத் சிக்கலை வர்க்கச் சிக்கலாக மடை மாற்றிக் காட்டித்தான் சீனா அத் தேசிய இனத்தை ஒருக்கிக் கொண்டிருக்கிறது. இங்கேயுள்ள பல இடது சாரிகளும் இதே வர்க்கக் காரணத்தைக் காட்டித்தான் சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பை ஆதரிக்கின்றனர்.

    ஒரு நூற்றாண்டுக்கு முன் முற்றிலும் வேறு சூழலில் நிகழந்த ருக்ஷ்யப் புரட்சியையும்...
    அரை நூற்றாண்டுக்கு முன் வேறு சூழலில்...குறிப்பாக இரண்டாம் உலக்ப் போரின் பின் புலத்தில் நடந்த சீனப் புரட்சியையும்...
    இன்றைய இந்திய அரசியல் சூழலில் அப்படியே பொருத்திப் பார்த்து...
    அதன் அடிப்படையில் வாதம் செய்வது மார்க்சிய வரலாற்று அறிவுக்கும் இயங்கியலுக்கும் பொருத்தமானது எனக் கருதுகிறீர்களா..?
    இறுதியாக...
    திபெத் உள்ளிட்ட தேசிய இனங்களை சீனா வளைத்துப் போட்டுக் கொண்டிருப்பதன் காரணம் என்னவென நினைக்கிறீர்கள்?

  10. vinothkumar@yahoo.com says:

    அதிரடியான் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு துப்பில்லாமல், ”நாங்கள் விலகிக் கொள்கிறோம்” என்று அறிவித்து ஓடிய நீங்களா இப்படி பேசுவது...

    ஸ்ஸ்ஸ்...

    இப்பவே கண்ண கட்டுதே...

  11. எமது தோழர்கள் அதிரடியானுடைய டவுசரை கழட்டியதை நீங்கள் பார்க்கவில்லையா வினோத் குமார் ?
    பார்க்கவில்லை என்றால் இதோ இந்த சுட்டியில் போய் பாருங்கள்.

    மொத்த விவாதத்திலும் சொன்னதையே திருமபத் திருமப சொல்லி கிள்ப்பாட்டு பாடியது மிஸ்டர் அதிரடி தான். நீங்களே சுட்டியை கிளிக்கி அவருடைய விவாத தரத்தை காணுங்கள்!

    http://vrinternationalists.wordpress.com/2009/09/28/அதிரடியானுக்கு-ஓர்-பகிரங/#comments

  12. //ஒரு நூற்றாண்டுக்கு முன் முற்றிலும் வேறு சூழலில் நிகழந்த ருக்ஷ்யப் புரட்சியையும்...
    அரை நூற்றாண்டுக்கு முன் வேறு சூழலில்...குறிப்பாக இரண்டாம் உலக்ப் போரின் பின் புலத்தில் நடந்த சீனப் புரட்சியையும்...
    இன்றைய இந்திய அரசியல் சூழலில் அப்படியே பொருத்திப் பார்த்து...
    அதன் அடிப்படையில் வாதம் செய்வது மார்க்சிய வரலாற்று அறிவுக்கும் இயங்கியலுக்கும் பொருத்தமானது எனக் கருதுகிறீர்களா..?
    இறுதியாக...
    திபெத் உள்ளிட்ட தேசிய இனங்களை சீனா வளைத்துப் போட்டுக் கொண்டிருப்பதன் காரணம் என்னவென நினைக்கிறீர்கள்?//

    தோழர் பார்த்தா,

    வரலாற்று பொருள்முதல் வாதம் வரலாற்றை ஆய்வு செய்ய சொல்கிறது,

    1.நாம் ஏன் ரஸ்ய சீனாவின் வரலாற்றை ஆய்வு செய்ய கூடாது

    முடிவுகளை அப்படியே பின்பற்ற வேண்டாம் ஆனால் முக்கியமான பிரச்சனைகளை எப்படி கையாண்டார்கள் ஏன் / என்பதை சிந்திக்கலாமே
    2.திபெத் பிரச்சனையில் சீனா என்ன தீர்வு எடுக்கிறது என்பது நமக்கு உதவாது என்பதை கூறிக்கொள்கிறேன்
    ஆனால் ஏன் அந்த முடிவை எடுக்கிறது ஒரு சிறுபான்மை தேசிய இனத்தை சீனா இன்னும் ஒடுக்கலாம் அதனால்

    தேசிய இனம் எங்கிருந்தாலும் ஒடுக்கப்படுகிறது எனவே இன அடிப்படையில் கட்சி கட்டவேண்டும் என்பது எப்படி சரியாகும்

    1.இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் எது

    2.இந்திய நிலமைகளில் ஏன் இன அடிப்படையில் கட்சி கட்டுகிறீர்கள்

    இந்த இரண்டு கேள்விக்கு பதில் அளியுங்கள்

  13. //ஒரு நூற்றாண்டுக்கு முன் முற்றிலும் வேறு சூழலில் நிகழந்த ருக்ஷ்யப் புரட்சியையும்...
    அரை நூற்றாண்டுக்கு முன் வேறு சூழலில்...குறிப்பாக இரண்டாம் உலக்ப் போரின் பின் புலத்தில் நடந்த சீனப் புரட்சியையும்...
    இன்றைய இந்திய அரசியல் சூழலில் அப்படியே பொருத்திப் பார்த்து...
    அதன் அடிப்படையில் வாதம் செய்வது மார்க்சிய வரலாற்று அறிவுக்கும் இயங்கியலுக்கும் பொருத்தமானது எனக் கருதுகிறீர்களா..?
    இறுதியாக...
    திபெத் உள்ளிட்ட தேசிய இனங்களை சீனா வளைத்துப் போட்டுக் கொண்டிருப்பதன் காரணம் என்னவென நினைக்கிறீர்கள்?//

    தோழர் பார்த்தா,

    வரலாற்று பொருள்முதல் வாதம் வரலாற்றை ஆய்வு செய்ய சொல்கிறது,

    1.நாம் ஏன் ரஸ்ய சீனாவின் வரலாற்றை ஆய்வு செய்ய கூடாது

    முடிவுகளை அப்படியே பின்பற்ற வேண்டாம் ஆனால் முக்கியமான பிரச்சனைகளை எப்படி கையாண்டார்கள் ஏன் / என்பதை சிந்திக்கலாமே
    2.திபெத் பிரச்சனையில் சீனா என்ன தீர்வு எடுக்கிறது என்பது நமக்கு உதவாது என்பதை கூறிக்கொள்கிறேன்
    ஆனால் ஏன் அந்த முடிவை எடுக்கிறது ஒரு சிறுபான்மை தேசிய இனத்தை சீனா இன்னும் ஒடுக்கலாம் அதனால்

    தேசிய இனம் எங்கிருந்தாலும் ஒடுக்கப்படுகிறது எனவே இன அடிப்படையில் கட்சி கட்டவேண்டும் என்பது எப்படி சரியாகும்

    1.இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் எது

    2.இந்திய நிலமைகளில் ஏன் இன அடிப்படையில் கட்சி கட்டுகிறீர்கள்

    இந்த இரண்டு கேள்விக்கு பதில் அளியுங்கள்

  14. Partha says:

    தோழர் தியாகு,
    ருக்ஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் வர்க்கப் புரட்சி நடந்ததாகவும் அந் நாடுகளில் தேசிய இனப் புரட்சி நடக்கவில்லை என்றும் தாங்கள் கருத்துத் தெரிவித்திருந்தீர்கள்.

    இதுவரை ரஸ்ய புரட்சியிலும் ,சீன புரட்சியிலும் தேசிய இனங்கள் இவ்வாறுதான் திரண்டார்களா என்பதை விளக்க வேண்டும்

    ///சீனாவில் 56 தேசிய இனங்கள் இருக்கின்றன

    வெளியிருந்து ஜப்பான் தாக்கியது


    ஹன் தேசிய இனம்தான் பெரும்பான்மை இனம் ஆனால்

    தேசிய இனங்களிடையே இருந்த முரண்பாட்டை

    மாவோ ஒற்றுமை -விமர்சனம் -ஒற்றுமை என்ற ரீதியில் அனுகினார்///

    எனது பின்னூட்டத்தில், ருக்ஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் நடந்தவை முடியாட்சி மற்றும் காலனிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான புரட்சிகள் என்று கூறினேன். ஒன்று தாங்கள் அதை மறுக்க வேண்டும் அல்லது ஏற்க வேண்டும். ஆனால்...ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள். நான் ஆய்வு செய்ததால்தானே அவ்வாறு கூறுகிறேன்?

    ஒரு வேளை உங்களுக்கு அந்த ஆய்வு தேவைப்படலாம். அப்படியெனில், ருக்ஷ்யா, சீனா நாடுகளைச் சான்றாகக் காட்டி, தேசிய இனப் புரட்சி குறித்து எதிர்மறை விமர்சனம் செய்வதை...உங்கள் ஆய்வு முடியும் வரை நிறுத்தி வைக்க முடியுமா?

    அதுதானே மார்க்சிய ஆய்வாளருக்குரிய நேர்மை...?

    மேலும் நீங்கள் என்னிடம் இரு கேள்விகள் கேட்டுள்ளீர்கள்.
    ருக்ஷ்யா, சீனா குறித்த முழுத் தெளிவும் கிடைத்தால் மட்டுமே எனது பதில்களையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஆகவே...உங்கள் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டுத் தொடர்பு கொள்ளுங்கள்.

  15. bharath says:

    தோழர் சர்வதேசியவியாதியே...
    மார்க்சியம் லெனினியம்லாம் படிச்சிருப்பீங்கன்னு நம்ம்ம்ம்ம்ம்பி உங்ககிட்டப் ஏமாந்திட்டோம். ராசோ...இப்பல்லாம் மருத்துவர் ராமதாசோட வன்னியர் இலக்கிய முகாம்கள்லதான் இலக்கியம் பேசறாரு தெரியுமா?
    அவருதான் உங்க உரைகல்லா? அப்புடிப்பட்ட ஒரு சாதி பார்ட்டிய கட்சிலேருந்து தொரத்துன மணியரசன் தப்பானவரு. வன்னியர் அடையாளத்தோட திரியுற ராசோ...உத்தமரு!
    அடடா...என்ன தெறம...என்ன தெளிவு!
    சீட்டுக் கம்பெனி நடத்தறது கட்சி இல்ல சார்...ராசோதான். மயிலம் போய்ப் பாருங்க. இன்னும் அவர் குடும்பம்தான் சீட்டு புடிக்குது. வேணும்னா நீங்களும் ஒரு சீட்டு போட்டுட்டு வாங்க.
    ராசோ மாதிரி ஆளுங்க போடற மஞ்ச பொஸ்தகத்தப் படிக்கிறதுல காட்டற ஆர்வத்த...கண்ட்ரோல் பண்ணுங்க தலைவா. ஒரு வேளை படிச்சா...அதுல எது உண்மை எது பொய்யின்னு ஆராய்ச்சி பண்ணுங்க.

    தோழர் தியாகு இங்கே ஒரு நல்ல விவாதம் நடத்தறாரு. முடிஞ்சா...அதுல கலந்துக்கங்க. என்ன மாதிரி புது ஆளுங்களுக்கு...இனமா? வர்க்கமா?ன்னு முடிவு எடுக்க இது மாதிரி விவாதம்தான் உதவும். அதே நேரத்துல...நீங்க மணியரசனைப் பத்தியும் எழுத வேணாம்...
    அவங்க மருதையனைப் பத்தியும் எழுத வேணாம்.
    புரியுதா?

  16. சீனாவில் தேசிய இன ஒடுக்குமுறை வந்தால்...அப்போதாவது அங்கேயுள்ள ஒடுக்கப்படும் இனங்கள் விடுதலை கேட்கலாமா...? கூடாதா...?

    ருக்ஷ்யாவில் தேசிய இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை லெனின் வழங்கியது சரியா...? தவறா...?//
    தோழர்

    பார்த்தா நான் பதிலளிக்காமல் விட்ட இரண்டு கேள்விகள் இதுதானே

    1.சீனாவில் தேசிய இன ஒடுக்குமுறை வந்தால் ஒடுக்கப்படும் இனங்கள் விடுதலை கேட்கலாம்

    2.ரஸ்யாவில் தேசிய இனங்கள் பிரிந்து போகும் உரிமையை லெனின் கொடுத்தது சரி


    மேலும் இரண்டாவது கமெண்டில்


    //சீனப் புரட்சியிலும் ஹன் தேசிய இனம் பிற தேசிய இனங்களை ஒடுக்கியது என்ற குற்றச்சாட்டு எழுந்தது இல்லையே தோழர்.
    ஜப்பானியப் படைகள் சீனாவைக் காலனி நாடாக ஆக்ரமித்தபோது சீனாவின் மைய முரண்...ஏகாதிபத்திய எதிர்ப்புதானே தவிர...தேசிய இன முரண்பாடு அல்ல.//

    சீனாவின் மைய்ய முரண் இனமுரண்பாடு அல்ல என்பதும் சரிதான்

    இந்தியாவின் மைய்ய முரண் இன முரண்பாடல்ல என்கிறேன்

    நான் முன்பே கேட்ட கேள்வி இதுதான்
    ஒடுக்கும் தேசிய இனம் இந்தியாவில் இருக்கிறதா

    இருந்தால் அது என்ன?

  17. //வரலாற்று பொருள்முதல் வாதம் வரலாற்றை ஆய்வு செய்ய சொல்கிறது,//

    ஆய்வு செய்ய வேண்டும் அப்படியே பின்பற்ற கூடாது என சொன்னதை தவறாக விளங்கி கொண்டீர்கள் அதுவரை நாம் விவாததை தொடரகூடாத என்றும் கேட்டுள்ளீர்கள்

    அரை நூற்றாண்டு முன்பு நடந்த புரட்சியை இயந்திர கதியில் நாம் பின்பற்றலாம என நீங்கள் கேட்டதற்கு ஆய்வுகுட்படுத்தி பேசலாம் என்றேன்

    மேலும் இந்தியாவின் மைய்யமுரண் எது என்ற புள்ளியில் இருந்து விவாதத்தை தொடரலாம்

  18. //தோழர் தியாகு,
    இந்த இனவாத குமபலிடம் நாம் தொடர்ந்து விவாதம் நடத்தினோம், ஒரு கட்டத்தில் இது விவாதிக்க தகுதியற்ற கூட்டம் என்று உணர்ந்ததால் நாமே விலகிக்கொண்டுள்ளோம்.
    விவாத சுட்டி கீழே உள்ளது காண்க.//

    தோழர் சர்வதேசியவாதி,

    உங்களின் சிறப்பான் விவாதத்தை இன்று முழுக்க படித்தேன் நல்ல விவாதம் ஆனால் அது முடிவுக்கு வந்தது வருத்தமே

    சரி இங்கு நடக்கும் விவாதத்தில் நீங்கள் பங்குகொள்ள வேண்டும்

    இது எனது வேண்டுகோள்

  19. ////////தோழர் சர்வதேசியவியாதியே...
    மார்க்சியம் லெனினியம்லாம் படிச்சிருப்பீங்கன்னு நம்ம்ம்ம்ம்ம்பி உங்ககிட்டப் ஏமாந்திட்டோம். ராசோ...இப்பல்லாம் மருத்துவர் ராமதாசோட வன்னியர் இலக்கிய முகாம்கள்லதான் இலக்கியம் பேசறாரு தெரியுமா?
    அவருதான் உங்க உரைகல்லா? அப்புடிப்பட்ட ஒரு சாதி பார்ட்டிய கட்சிலேருந்து தொரத்துன மணியரசன் தப்பானவரு. வன்னியர் அடையாளத்தோட திரியுற ராசோ...உத்தமரு!
    அடடா...என்ன தெறம...என்ன தெளிவு!
    சீட்டுக் கம்பெனி நடத்தறது கட்சி இல்ல சார்...ராசோதான். மயிலம் போய்ப் பாருங்க. இன்னும் அவர் குடும்பம்தான் சீட்டு புடிக்குது. வேணும்னா நீங்களும் ஒரு சீட்டு போட்டுட்டு வாங்க.
    ராசோ மாதிரி ஆளுங்க போடற மஞ்ச பொஸ்தகத்தப் படிக்கிறதுல காட்டற ஆர்வத்த...கண்ட்ரோல் பண்ணுங்க தலைவா. ஒரு வேளை படிச்சா...அதுல எது உண்மை எது பொய்யின்னு ஆராய்ச்சி பண்ணுங்க.///////////





    இராசோ உங்களை பற்றி எழுதினது எல்லாம் மஞ்சள் புத்தகம், பொய் புனை சுருட்டுகள் என்றால், எமது கட்சியையும் தலைவரையும் இவர் இழுவுபடுத்துகிறார் என்று நீங்கள் அவர் மீது வழக்கு போட வேண்டியது தானே ? அவர் சொல்வதெல்லாம் 'பொய்' என்று அதன் மூலம் ஊர் உலகிற்கு தெரிவிக்க வேண்டியது தானே ?

    நீங்கள் ஏன் அதை செய்யவில்லை ?

    மேலும் இராசோவை மார்க்சியவாதியாக பார்க்கும் அளவிற்கு, மார்க்சிய‌வாதி எதற்கு முற்போக்காளராக கூட‌ பார்க்கும் அளவிற்கு நாங்கள் ஒன்றும் உங்களைப் போல தமிழ்பார்ப்பனியவாதிகள் கிடையாது!

    மேலும் ஒரு பிற்போக்காளன் உண்மைகளை சொல்லக்கூடாது என்பதில்லை, அதுவும் முற்போக்காளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை பற்றிய உண்மைகளை சொல்லக் கூடாது என்பது இல்லை,அவ்வாறு சொல்வதை யாரும் நமபக்கூடாது என்பதும் இல்லை.

    அது போன்ற கிசுக்கிசுக்களை எழுதி கேவலமாகவும், சில்லறைத்தனமாகவும் கட்சி நடத்த வேண்டிய இழி நிலையில் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் இல்லை என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.


    ///////சரி இங்கு நடக்கும் விவாதத்தில் நீங்கள் பங்குகொள்ள வேண்டும்

    இது எனது வேண்டுகோள்/////

    தோழர் தியாகுவின் அழைப்பிற்கு நன்றி, ஆனால் இவர்களுடன் விவாதிப்பதில் ஒரு பயனும் இல்லை தோழர், இதை தான் தோழர் வினவு எமக்கு அறிவுறுத்தினார். விவாதத்தினூடாக நாமும் அதையே தான் உணர்ந்தோம்.
    நன்றி

  20. //இராசோவை/

    நீங்கள் இருவரும் எந்த இராசோவை சொல்கிறீர்கள்

  21. இராசோ என்பவர் இராசேந்திர சோழன்
    தோழர், இவர் முன்பு தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார், தற்போது மண்மொழி என்கிற இதழை நடத்தி வருகிறார்.

  22. தோழர் தியாகு,

    விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பது உமது விருப்பம் மட்டுமல்ல, எமது விருப்பமும் கூட. ஆனால், அதனை சீர்குலைக்கும் நோக்குடன், ஆதாரமில்லாத செய்திகளை எழுதித் தள்ளும் ”கீபோர்டு” புரட்சியாளர்களால் ஆகப் போவது ஒன்றுமில்லை என்பதனை நீங்கள் உணர்வீர்கள் என நம்புகிறேன். எனவே, விவாதத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத அவதூறுகளை பின்னூட்டங்களாகப் பிரசுரிக்க வேண்டாமென வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

    முதலில், ஒரு அடிப்படையை புரிந்து கொள்ளுங்கள். மார்க்சியத்தை வெறும் வறட்டுச் சூத்திரமாக பாவிக்கக் கூடாது. அந்தந்த நாட்டின் நிலைமைகளுக்கேற்ப, அந்தந்த நாட்டின் சமூக சூழ்நிலைகளுக்கேற்ப பயன்படுத்தப்பட வேண்டியத் தத்துவமாகவே மார்க்சியம் விளங்குகின்றது. தோழர் வி.இ.லெனின், இதனை கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

    //
    மார்க்சின் தத்துவத்தை நாங்கள் முற்றும் முடிவான ஒன்றாய் மீறவொண்ணாத ஒன்றாய்க் கருதவில்லை. மாறாக, அது சோஷலிஸ்ட்டுகளுக்குரிய விஞ்ஞானத்தின் அடிக்கல்லை மட்டுமே அமைத்துக் கொடுத்திருக்கிறது. சோஷலிஸ்ட்டுகள் வாழக்கையுடன் சேர்ந்து நடைபோட விரும்பினால் இந்த விஞ்ஞானத்தை எல்லாத் திசைகளிலும் வளர்த்துச் செல்வது அவசியம் என்பதை நாம் ஐயமற அறிவோம். மார்க்சின் தத்துவத்தை தன்னிச்சையான முறையில் விரிவுபட வளர்த்திடுவது முக்கியமாய் ருஷ்ய சோசலிஸ்டுகளுக்கு மிக்கதொரு தேவையாகுமெனக் கருதுகிறோம். ஏனெனில் இந்தத் தத்துவம் பொதுவான வழிகாட்டும் கோட்பாடுகளையே அளித்திடுகிறது. தனிப்பட்ட முறையில் அவை பிரான்சிலிருந்து வேறு விதமாய் இங்கிலாந்திந்திலும் ஜெர்மனியிலிருந்து வேறுவிதமாய் பிரலான்சிலும், ருசியாவிலிருந்த வேறுவிதமாய் ஜொமனியிலுந்தும் கையாளப்படுகின்றன.

    // - பக். 12-13, வி.இ.லெனின் நமது வேலைத் திட்டம், லெனின் தேர்வு நூல்கள் - தொகுதி 1

    முந்தைய பின்னூட்டத்தில், திரு. பார்த்தா கூறியிருப்பதை நான் வழிமொழிகிறேன். சீனாவில் இருப்பதைப் போன்ற நிலைமை இந்தியாவில் இன்றைக்கு இல்லை என்பது தான் எமது பிரதான முடிவிற்குகான முதற்காரணம். சீனாவில் அன்றிருந்ததைப் போன்று, அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் இன்றைய இந்தியாவில் இல்லை. இதனை நீங்கள் நிச்சயம் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். அதே போல ரசியாவிலும், சீனாவிலும் தேசிய இன முரண்பாடுகள் கூர்மை பெறவில்லை என்பதும் உண்மை.

  23. இந்திய விடுதலை என்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில், இந்தியாவில் அமைந்துள்ள பல்வேறு தேசிய இனங்களும் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டு பின்னர் அடிமைப்படுத்தப்பட்டன என்பதை தாங்கள் அறிவீர்கள்.

    இன்றைக்கும், சீனா தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை மறுத்து, “சுயாட்சி” என்ற பெயரில் தேசிய இனங்களை திபெத், உய்க்கூர் உள்ளிட்ட தேசிய இனங்களை ஒடுக்குவதையும் நாம் காண்கிறோம். மேலும், சீனா, ரசியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வெற்றி பெற்றப் புரட்சிகள் அனைத்தும் அந்நாடுகளின் பெருந்தேசிய இன மக்களின் தலைமையிலேயே வெற்றி பெற்றுருப்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

    மேலும், இச்சிக்கலில் சில புரிதல்கள் நமக்குத் தேவை.

    வரலாற்று வழித் தாயகம், பொது மொழி, பொதுப் பொருளியல் ஒருங்கிணைப்பு, “நாம்”-”நம்மவர்” என்ற தேசிய இன ஒருமை உணர்வு என்கிற தோழர் ஜே.வி. ஸ்டாலினின் தேசிய இன வரையறுப்பு, இன்றைய சூழ்நிலையில் முற்றுமுழுதானதாக ஏற்கக்கூடியதல்ல. எடுத்துக்காட்டாக, நாகா தேசிய இனத்தவர்களுக்கு பொது மொழி இல்லாமல் பல்வேறு மொழிகளை பேசக் கூடியவர்களாக அவ்வினத்தவர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் ஒரே தேசிய இனத்தவராவர்.

    இவ்வாறான புரிதல்களுடன் தான் இந்தியாவை நாம் கண்ணுற வேண்டும். தமிழகம், கேரளா, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென் பகுதிகளில் தமிழர், தெலுங்கர், மலையாளி என தேசிய இனங்கள் வளர்ச்சிப் பெற்றுள்ளன. இவ்வாறில்லாமல், வடநாட்டில் வாழ்கின்ற மக்கள் தனித்தனி தேசிய இனமாக வாழ்கின்ற மக்களின் பொது மொழியாக இந்தி விளங்குகின்றது.

    பீகாரி, குஜராத்தி என பல்வேறு மொழிகள் வடநாட்டில் பேசப்பட்டு வந்தாலும் கூட, அவர்கள் அனைவரும் “இந்தி” என்ற பொது மொழியின் கீழ் திரள்கின்றனர். இதற்கான உளவியலை அவர்கள் பெற்றுள்ளனர். “எமது மொழியை அரசு மொழியாகக் கொண்டு இயக்கப்படுகின்ற எமது அரசு” என்று இந்திய அரசை, தமது தேசிய அரசாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

    மார்வாரி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட பனியாக்களும், பெரு முதலாளிகளும், எந்த தேசிய இனத்தவராக இருந்தாலும், இந்தி மொழியையே தமது மொழியாக ஏற்று நடப்பதையும் நாம் காணலாம்.

    இவ்வாறு, இந்தி மொழி பேசுகின்ற மக்கள், அதன் முலாளிகள், அதற்கான உளவியல் ஆகியவை “இந்தித் தேசிய இனத்தை” ஒரு மொசாக் தேசிய இனமாக உருபெற வைத்துள்ளது. இது நேரடிப் பெருந்தேசிய இனமாக வளர்ச்சி பெறாத, அதிகாரங்களை பெற்ற, கட்டமைப்பு ஒடுக்குமுறையை (Structural Opression) ஏவுகின்ற இனமாகவும் உள்ளது.

    எப்படி, சிங்கள உழைக்கும் மக்களின் தேசிய அரசாக சிங்கள இனவெறி அரசு விளங்குகின்றதோ, அதே போன்று, இந்தித் தேசிய இனத்தின் தேசிய அரசாக இந்தியத் தேசிய அரசு விளங்குகின்றது. இப்புரிதல்களோடு, இந்திய அரசின் ஒடுக்குமுறைத் தன்மைகளை நாம் காண வேண்டும்.

  24. இலங்கையைப் பற்றியும் சில புரிதல்கள் வேண்டும்.

    சிங்கள இனவெறி அரசு, சிங்கள உழைக்கும் மக்களின் தேசிய அரசாக விளங்கிக் கொண்டுருந்த போதும், சிங்கள உழைக்கும் மக்களை பொருளியல் ரீதியில் சுரண்டுகிறது. வர்க்க ஒடுக்குமுறையை சிங்கள உழைக்கும் மக்கள் மீது ஏவுகின்றது, சிங்கள ஆளும் வர்க்கம். ஆனால், ஈழத்தமிழர்கள் மீது இனவெறியுடன் இன ஒடுக்குமுறையை ஏவுகின்றது சிங்கள இனவெறி அரசு.

    சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களை ஒடுக்குவது தவறென்பதை, அந்நாட்டின் பாட்டாளி வர்க்கம் உணர்ந்தால், சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான போராட்டங்களும், ஈழத்தமிழர்க்கு ஆதரவான போராட்டங்களும் கொழும்பிலும், ஏனைய சிங்களப் பகுதிகளில் நடந்திருக்கும். அவ்வாறு இன்று வரை எதுவும் நடைபெறவில்லை.

    ஈழத்தமிழர்கள் இன அழிப்புப் போரில் கொல்லப்பட்ட மக்கள் எத்தனை ஆயிரங்கள் என ஐ.நா., அமெரிக்கா உள்ளிட்ட பலரும் அறிக்கை விடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், சிங்கள இனவெறி ராஜபட்சே சிங்கள மாகாணங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்தார். ஆக, சிங்கள மக்களுக்கு சிங்கள இனவெறியை அங்குள்ள ஆளும் வர்க்கம் ஊட்டியிருப்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

    இப்படிப்பட்ட ஒரு சூழலில், சிங்கள இனவெறி ஊட்டப்பட்டிருக்கும், சிங்கள மக்கள் மனதில் தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை பற்றி நீங்கள் பாடமெடுக்க வேண்டும். ஆனால், உங்களைப் போன்றோரெல்லாம், தமிழ்த் தேசிய இனத்தவரிடம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி வாய் கிழியக் கத்திக் கொண்டுள்ளனர்.

    இவ்வாறான சூழ்நிலையில் தான் ஈழத்தமிழர்கள் தனித்த தேச அரசை உருவாக்கிக் கொள்ளும் திட்டத்துடன் போராடினர். இது தான் இலங்கையின் நிலைமை.

    இலங்கையில் எவ்வாறு சிங்கள இனம் ஆதிக்கத்தில் இருக்கின்றதே அதே போலவே, இந்தியாவில் இந்தித் தேசிய இனம் ஆதிக்க இனமாக இருக்கின்றது என்று நாங்கள் கூறுகின்றோம்.

    இன்றைய இந்திய அரசு என்பது இங்குள்ள அனைத்துத் தேசிய இனங்களையும் ஒடுக்குகின்ற மய்யப்படுத்தப்பட்ட அமைப்பு என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதே வாதத்தை இலங்கைக்கு உங்களால் கூற முடியுமா?

    ”சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழனை மட்டுமா ஒடுக்குகிறது சிங்களைனையும் தான் ஒடுக்குகிறது. எனவே, சிங்கள மக்கள் வர்க்க உணர்வுடன் எழுந்து வரும் வரை, ஈழத்தமிழர்கள் சிங்கள இனவெறி ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறையின் கீழ் வாழ்ந்து கொண்டும், போராடிக் கொண்டும் தான் சாக வேண்டும். இவ்வாறு இல்லாமல், தனி ஈழம் என்று பேசினால் அது பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு எதிரானது. ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவாகவே ஈழம் இருக்கும். அதனால் ஈழமக்கள் சிங்கள இனவெறி ஒடுக்குமுறையில் கடந்து சாகட்டும்”.

    இந்த வாதத்தின் வறட்டுத்தனத்தை நீங்கள் உணர்ந்தாலன்றி, இந்தியா மட்டுமல்ல உலகில் வேறு எந்த தேசிய இனப் போராட்டம் குறித்தும் உங்களால் முடிவெடுக்க முடியாது.

    அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்குகின்ற இந்திய மையப்படுத்தப்பட்ட, இந்திய அரசின் தன்மையை நீங்கள் சரியாக வரையறுக்கவில்லை என்பதனால் வந்தக் கோளாறு இது.

    இந்தியாவில் நிலவுகின்ற இன ஒடுக்குமுறை என்பது இலங்கையில் நிலவுகின்ற இன ஒடுக்குமுறையை போன்று, தீவிரமான பெருந்தேசிய இன ஒடுக்குமுறை அல்ல என்பதையும் நீங்கள் கணக்கிலெடுக்க வேண்டும்.

    உலகமயம் என்ற ஒற்றைத் துருவக் கோட்பாட்டால், தமிழ்த்தேசத்தின் மீது வர்க்க ஒடுக்குமுறை ஏவப்படுகின்றது. இந்தியம் என்ற கோட்பாட்டால், தமிழ்த்தேசத்தின் மீது இன ஒடுக்குமுறை ஏவப்படுகி்ன்றது. தமிழ்த்தேசத்தில் நிலவுகின்ற இன ஒடுக்குமுறை காசுமீர், மணிப்புர் போல தீவிர வடிவமாக எழவில்லை என்றாலும், அது தான்(இந்தியம்) தமிழ்த்தேசத்தின் மீதான வர்க்க ஒடுக்குமுறைக்கு(உலகமயம்) கதவாக இருக்கின்றது. எனவே, இந்தியம் என்ற கதவை தகர்த்தெறிய முடியாமல் நம் தேசத்தின் விடுதலையை நாம் பெற முடியாது.

    உலகச்சூழல்களைக் கணக்கில் கொள்ளாத வறட்டு வாம் வெற்றியும் பெறாது. உங்களுக்கு இன்னும் ஆய்வுத் தேவைப்படுகிறது என நினைக்கிறன். ஆய்வு செய்து முடிவெடுங்கள். எனது விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

    விவாதித்ததற்கு நன்றி!

    தோழமையுடன்,
    க.அருணபாரதி

  25. நன்றி தோழர் அருணபாரதி

    கமெண்டுகளை அனுமதிப்பது
    புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல

    மேலும் இந்த விவாதத்தில் நீங்கள் சொல்லும் மைய்ய முரணாக இருப்பது

    இந்தி பேசும் மக்கள் அவர்களே ஒடுக்கும் தேசிய இனமாக இருக்கிறார்கள் எனபதை ஏற்று கொள்ள இயலாது

    இன்றைக்கு இந்தி பேசும் மக்களே மைய்ய அரசின் ஒடுக்கு முறையில்தான் இருக்கிறார்கள்

    மேலும் இங்கு விவாதித்தமைக்கு நன்றி

    உங்களின் கருத்துக்களை எடுத்து

    தொகுத்து தேசிய இனப்பிரச்சனையில் நீங்கள் செல்லும் பாதையின் மூடபட்ட பகுதியை அறிய படுத்தும் என்முயற்சி இத்துடன் நிற்கிறது

    வேறொரு சந்தர்பத்தில் தொடருவோம்