புலிகேசியின் பயணத்தில் ஒரு நாள் -கம்யுனிச சமூகம்

ஒரு நாள் தனது டைம் மிசின் மூலம் சில பத்தாண்டுகள் கழித்து உலகின் அந்த நாளில் அதாவது அவன் விரும்பிய  நாளில் போய் இறங்கினான் நம்ம புலிகேசி


கார்கள வரிசையாக செல்லும் மிக அகண்ட சாலையில்
தானும் ரோட்டோரத்தில் நின்ற ஒரு காரை எடுத்து ஓட்ட துவங்கினான் .


காரில் ஏறி அமர்ந்ததும் அவனுக்கு அதில் இருந்த கணினி உத்தரவுகளை வழங்கியது .

நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்

இதென்னடா இப்படி கேட்குதேன்னு முழிச்சுட்டு

நான் முருகன் இட்லி கடைக்கு போகனும்

மன்னிக்கவும் கம்யூனிச சமூகம் ஏற்பட்டதும் பொது உணவு கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கு அங்கே அழைத்து செல்கிறேன் .


சரி போ என்றான் நம்ம புலிகேசி


ரோட்டில் நடப்பவர்கள் எச்சில் துப்ப அதற்கென இருக்கும் இடத்தில் துப்புகிறார்கள்

ரோட்டோரம் ஒரு போலீஸ்காரர் நிற்க வில்லை

(தவறி ரோட்டில் துப்புபவர்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அபராத தொகை அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பி
வைக்கப்படும்)

ஆகா வம்மா போச்சே நம்மாளு ஒரு வண்டி வெத்தலைய போட்டு துப்புவாங்களே என்ன செய்ய போறானுகளோன்னு நினைத்துகொண்டான் புலிகேசி  போலீஸ் துறை என்ன செஞ்சுட்டு இருக்கானுககேட்டான் கணினியை

"குற்றம் நடப்பதை மட்டுமே கண்டறியும் துறையாக இருந்த அது இப்போது ஒரு கவுன்சிலிங் துறையாக மாறிவிட்டது

குற்றத்தின் சதவீதம் புள்ளி ஒரு சதவீதத்துக்குமேல் குறைந்ததால் சிறை சாலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டன  "

இன்னும் நிறைய சந்தேகம் வந்தது நம்ம ஆளுக்கு சரி இந்த ஊரில் உள்ள வயசான பெரியவர நம்ம வண்டியில் அழைத்து உக்காரவைச்சு சந்தேகத்தை எல்லாம் கேட்போம்னு நிறுத்த சொன்னான்.பெரியவர் காரில் ஏறியது தனது சந்தேக மூட்டையை அவிழ்த்து கொட்ட ஆரம்பித்தான் புலிகேசி

அய்யா பெரியவரே

"இன்னாய்யா வம்பா போச்சு போலீஸ் இல்லை லஞ்சம் இல்லை

பிறகு அரசாங்கம் என்னா செய்யுது வரி எப்படி கிடைக்குது "


"மக்களின் மேல் வரியை சுமத்தி வர்க்க சார்பான அடக்குமுறை கொண்ட அரசு இல்லை இப்போ

அரசு என்பது இப்போ கணினி களை நிர்வகிக்கும் நிறுவனம் மட்டுமே மேலும் அதன் அதிகார பல் புடுங்கப்பட்டு விட்டது "

(அரசு என நீங்கள் நினைத்து கொண்டு இருக்கும் அமைப்பு இப்போது இல்லவே இல்லை )


ஆகா அப்போ எம் எல் ஏ க்கள் சண்டை போடும்  சட்டசபை , தேர்தல் எல்லாம் இல்லையா?

எவனும் கொள்ளை அடிக்க முடியாதா?  நம்ம புலிகேசிக்கு ரொம்ப ஆச்சரியம்


  அரசே இல்லை என்றாகிய பின் அரசியல் வாதிகளின் தேவை இல்லை

அறிக்கைகள விட்டு கூட்டனி மாறி காமெடி செய்வதெல்லாம் இல்லை


சரிப்பா கற்பழிப்பு எல்லாம் நடக்காதா   தனது மன அரிப்பை காட்டியே விட்டான் நம்ம ஆளு

"பெண்களை ஆண்கள் புரிந்து கொள்ளவும் ஆண் பெண் எனும் பால் வேறுபாட்டை தீர்க்கவும் மான யோசனைகள் முறைகள்  கொடுக்கப்பட்டு வேறுபாடுகளும் பெண் மீதான பாலியல் அத்துமீறல்களும்
குறைக்கப்பட்டு இம்மாதிரி வன்புணர்ச்சி என்பது  சோசலிச சமூகத்தில் தீர்க்கப்பட்டு விட்டது "

சரீ  இதெல்லாம் யோசிச்சு செயல்படுவார்களே அவர்கள் தான் இந்த சமூகத்தில் பெரிய பதவியில் இருப்பார்களோ

"சிந்திக்கும் கூட்டத்துக்கு முதல் மரியாதை தரும் சமூகம் இல்லை  உடல் உழைப்பு மூளை உழைப்புன் இடைவெளி குறைக்கபட்டது

கம்யூனிச சமூகத்தில் இரண்டுக்கும் ஒரே மதிப்பும் ஒரே சம்பளமும் வழங்கப்படுகிறது  அதாவது திறமைக்கேற்ற வேலை தேவை கேற்ற ஊதியம் வழங்கப்படும் போது  இரண்டும் வித்தியாசத்தை இழந்து விட்டன "


அப்போ மருத்துவரும் கொசு மருந்தடிப்பவனும் ஒன்னா


"ஆமாம் ஏனெனில் ஒரு மனிதனை தன் வாழ்நாள் பூராவும் ஒரே வேலையை பார்க்கும் படி

நிர்பந்தித்த முதலாளித்துவ  சமூகம் சோசலிசத்தில் மாற்றப்பட்டது

எல்லா மனிதர்களுக்கு சம அளவில் கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டதால்
அவன் தனக்கு தேவையான துறையில் கல்வி கற்கவும் ஆராய்ச்சி செய்யவும்

சோசலிச சமூகம் அனுமதித்ததால் ரொம்பவும் உடல் உழைப்பு தேவைப்படும்
வேலைகள் ரோபோட்களை கொண்டும் செய்யப்படுவதால்
இங்கே வேலையை வைத்து ஒருவனின் வாழ்நிலை தீர்மானிக்கப்படுவதில்லை "

ஆகவே ஒப்பிட்டு நோக்கும் அளவு வேறு பாடே இல்லை என்ற இடத்தில் நீ ஏன்

ஒப்பிட்டு பார்க்கிறாய் "

இருந்தாலும் நம்ம புலிகேசிக்கும் மூளை உழைப்பாளிகள் மதிக்கப்படனும்
எனும் சந்தேகமும் கோபமும் இருந்து கொண்டே இருந்தது

இதுக்கு என்ன பதில் என அவன் கேட்க

பெரியவர் சொன்னார்

தம்பி நீ முதலாளித்துவ அழுக்கு சமூகத்தில் இருந்து நேரடியாக வந்தவன்

முதலில் நீ சோசலிசத்துக்கு போ உனது மிசின் மூலம் பிறகு இங்கே வா


மேலும் ஒரு இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்திய ஒரு சமூகம் உனது
செல்பேசியையோ தொலைக்காட்சியையோ புரிந்து கொள்ளவோ

அல்லது ஓட்டு போட்டு ஆளும் உங்கள் ஜனநாயகத்தை அடிமை வர்க்கம் எப்படி புரிந்து கொள்ளாதோ

அதை போல உற்பத்தி சக்திகளின் மாற்றத்தால் உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்பட்டு

மாறிவரும் இந்த சமூக அமைப்புகளை புரிந்து கொள்ள முதலில் உற்பத்தி சக்திகளுக்கும்

உற்பத்தி உறவுகளுக்கும் சமூகத்துக்கும் இடையிலான தொடர்புகளை பற்றி எழுதிய மார்க்சிய மூலவர்கள் எழுதிய

போன நூற்றாண்டின் நூல்களை படி என சொல்லி இறங்கி போனார்

 


 



--
தியாகு
 

23 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post