என்னடா இந்த பெரிசு சோசலிசம் சோசலிசம் என கூவுதுன்னு
டென்சனான புலிகேசி டைம் மிசினை சோசலிச சமூகத்தின் ஆரம்ப கட்டத்துக்கு போ என உத்தரவு போட
சரியாக வந்து நிறுத்தியது .
இம்முறை புலிகேசி செய்த ஒரு நல்ல காரியம் முதலில் (கம்யூனிச சமூதாயத்தில் விளக்கம் சொன்ன பெரியவரை தன்னுடன் அழைத்து வந்ததுதான்)
"யோவ் பெரியவரே நீ சொன்ன மாதிரி நாமா சோசலிசத்துக்கு வந்துட்டோம் இப்ப சொல்லு எப்படி தனி முதலாளி இல்லாம தொழில் நடக்குதுன்னு "
" அது ரொம்ப பெரிய சிக்கல் இல்லை புலிகேசி அதாவது நீயே பார் மக்கள் எல்லாம் உழைக்கிறாங்க அதாவது சமூக உழைப்பு இதை கொண்டுவந்தது யாரு?
அதான் முதலாளிகள்
அவங்க எப்படி காணாம போனாங்க முழித்தான் புலிகேசி
அதான் காரணம் சோசலிசம் முதலாளித்திற்கு பிறந்த குழந்தைன்னு இத வச்சுதான் சொல்றேன்
கொஞ்சம் விளக்கமா சொல்லப்பா ரொம்ப வேர்க்குது என்றான் நம்ம ஆளு
சமூகம் பூரா உழைத்து கொடுப்பதை அந்த மூலதனத்தை பெருக்க எவ்வளவுக்கு எவ்வளவு தொழிலாளர்களை சுரண்டி உபரியை பெருக்க முடியுமோ அவ்வளவு சுரண்டி முதல் உருவாக்கப்பட்டது ஒத்துகிறியா
ஆமாம்
"அதே நேரத்தில் மொத்தமா ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்யவும் தொழில் நடத்தவும் தொழிலாளர்கள் பயன் படுத்தப்பட்டு சமூக உழைப்புக்கு பழக்கப்படுத்தப்பட்டார்கள் "
"என்னப்பா சொல்ற"
"ஆமாம் அதன் காரணமாக முதலாளியே இல்லாவிட்டாலும் தங்கள் தொழிற்சாலையை நடத்த தொழிலாளர்கள் தெரிந்து கொண்டார்கள் "
அதான் இங்க நடக்குது
சரி வேலை செய்ய மாட்டேன்னு எவனாவது சொன்னா என்ன செய்வீங்க
அட நீ என்னப்பா வேலை செய்ய மாட்டேன்னு எவனும் சொல்லமுடியாது
அதாவது இங்கே திறமைக்கேற்ற வேலை வழங்கப்படும்்
சம்பளத்திலும் கொஞ்சம் வேறு பாடுகள் இருக்கும்
அப்படியா அப்ப அத சேர்த்து வச்சி அவன் முதலாளி ஆகிட்டான்னா
பெரியவர் அட என்னப்பா நீ தனிசொத்தோ தனி முதலீடோ அனுமதிக்கப்படுவதில்லை
அதே நேரத்தில் அவனது தேவைகள் அனைத்தும் அரசால்
அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசால் வழங்கப்படும்
"இந்தா பெருசு என்னோட ஒவ்வொரு கேள்விக்கா பதில் சொல்லு
சோசலிசத்தில் டீ கடை இருக்குமா ?
பெரியவர் தொடர்ந்தார்
சின்ன சின்ன தொழில்கள் இருக்கும் பணம் இருக்கும்
டீ கடை முதலாளிகள் இருப்பார்கள் ஆனால்
அவர்கள் எல்லாம் ஒரு தீர்மான கரமான சக்தியா இருக்க மாட்டாங்க
" "என்னய்யா தீர்மானகரமான சக்தி" "
"ஆமாப்பா முதலாளிகள் அமைக்கும் உங்கள் போலி ஜனநாயக
அரசு இல்லையே "
ஆனால் பெரிய தொழில்கள் அனைத்து அரசால் நடத்தபடும் என்றார்
ஏன் அரசு நடத்தனும்
" பெரியவர் நொந்து போய்ட்டார் "
சரி புலிகேசி தொழில் எதுக்கு நடத்துறாங்க
லாபம் சம்பாரிக்க
ஆனால் சோசலிசத்தில் தொழில் லாபத்துக்காக நடக்காது
தேவைக்காக நடக்கும்
ஏனெனில் லாபத்துக்காக நடக்கும் தொழில்
உபரி உற்பத்தியை ஏற்படுத்தி தேக்கத்தை கொண்டுவந்து
வேலை இன்மையைத்தானே உருவாக்கும்
ஆமாம்
தன் நாட்டுக்கு 40 ஆயிரம் காலணி தேவை என்ற ஆடர் வந்தால் அதை உருவாக்கும் சோசலிச அரசு
ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில் இரண்டு முதலாளிகள் இருந்தால் 40 +40 = 80 ஆயிரம் காலணிகள்
உருவாக்கும் .
பிறகு பொருள் தேக்கம் ஏற்படும் அதை தொடர்ந்து வேலை இல்லா திண்டாட்டம் எல்லாம் வரும்ல புலிகேசி
அதனால சோசலிச அரசு தேவைக்கேற்ற உற்பத்தி தான்செய்யும்
இப்ப நம்ம புலிகேசிக்கு ஒரு சந்தேகம் இப்ப மடக்கிறேன் பாருன்னு
"அய்யா தனி சொத்த எப்படி ஒழிப்பீங்க:
"அப்படி கேளு ம் உனக்கு எதாவது சொந்தமா இருக்கா சொல்லு "
ஆமாம் ஒரு மாடு இருக்கு
"புலிகேசி அந்த மாடு உனக்கு சொந்தம் அதன் மூனு காலும் அக்கம் பக்கத்து வீட்டில் இருக்கிறவனுகளுக்கு சொந்தம் உனக்கு ஒரு கால் "
"அட "
ஆமாம் இப்போ மாடு நாலுபேடுக்கு சொந்தம் எனவே நாலுபேரும் மாட்டை பராமரிப்பான் இல்லையா
இப்படி கொஞ்ச கொஞ்சமாத்தான் தனி உடமை பொதுவுடமை ஆக்க முடியும் .
புலி கேசிக்கு கேந்தி ஆகிவிட்டது
சரி எனக்கு ஒரு பேனா சொந்தம் அதுவும் நாலு பேருக்கு சொந்தமா
கேட்டே விட்டான்
"இருந்தாலும் உனக்கு புத்தி இப்படி வேலை செய்ய கூடாது "
உற்பத்திக்கு உதவும் கருவிகள் உற்பத்தி சக்திகள் பெரிய டார்கெட் அதை பொதுமை படுத்தும் போது சின்ன சின்ன எளிதாக கிடைக்கும் "
உதாரணமாக உன்னாலும் என்னாலும் விரும்பியவுடன் ஒரு பனியனையோ ஒரு பேனாவையோ வாங்க முடியும் போது
நாம் ஏன் அதுக்கு அடிச்சிக்க போறோம்
அதே நேரத்தில் ஒரு தனிமனித தேவைகள் இருக்கு இல்லையா
அதெல்லாம் கிடைக்கும் அதில் பெரிய முரண்பாடுகள் வரப்போவதில்லையே .
நான் 50 வீட்டுக்கு சொந்த காரன் 15 ஏக்கர் நிலத்துக்கு சொந்த காரன் என்பது வேற 1 பேனாவுக்கு சொந்த காரன் என்பது வேற இப்ப புரியுதா புலிகேசி
ம்ம் என தலை ஆட்டினான்
தனக்கு புரிவது போலதெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்ல கிளம்பினான் .
அடுத்து முதலாளித்துவம் நடக்கும் இடத்துக்கு போகனும் என நினைத்து கொண்டான் புலிகேசி
பெரியவர் கடைசியாக " தம்பி உற்பத்தி -உற்பத்தி சக்தி -உற்பத்தி உறவு எனும் தொடர்பை புரிஞ்சிக்காட்டி எதுவும் புரியாது"
அதாவது உற்பத்தி சக்தி மாறும் போது உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்களுக்கு இடையான உறவில் மாற்றம் ஏற்படும் அதுதான் சமூகத்தில் ஏற்படும் அனைத்து சமயம் ,கருத்துக்கள் ,கல்வி ஆகிய அனைத்துக்கும் அடிப்படை இதையும் மூளையில் ஏத்திக்கோ
சரியா "
என சொல்ல நம்மாளு மாவோ காலத்துக்கு போக கிளம்பிட்டான்