சிவாஜி ரஜினி (மொட்ட பாஸ்)

இந்த படத்தை பற்றிய எனது விமர்சனங்களின் சுமையோடு இந்த படத்தை

பார்க்க சென்றேன்!
அந்த சுமை என்னை அழுத்தினால் படத்தை மிக கவனமாக பார்க்க

முடியாதென எனக்கு தெரியும்.
மேலும் எதிர்பதற்காகவே படம்பார்க்கனும் எனும் எண்ணத்தோடு வந்த மாதிரி

ஆகிடும் என்பதை கருதி அந்த சுமையை சற்றே இறக்கி வைத்தேன்.

1.ரஜினிக்கு சமூக அக்கரை இல்லை
2.ரஜினி படம் அளவுக்கு அதிகமான விலையில் விற்கப்படுகிறது அதன்

மூலம் ரஜினியைவச்சு அந்த பிம்பத்தை வச்சு மக்களை சுரண்டுகிறார்
என் வரிசையாக பல மூட்டை கேள்விகள் தூங்கி கொண்டு இருந்தது என்னுள்

படம் போட்டு 10 நிமிடம் இருக்கும் நான் போகும் போது
30 ரூபாய் சீட்டை 50 ரூபாய்க்குத்தான் வாங்க வேண்டிவந்தது
சரி தியேட்டருக்குள் போவோம் .

நம்பர் குறிக்கப்பட்ட அந்த சீட்டை காட்டி அமர்ந்தது திரையில்
பெரிய திரையில் ரஜினி கட்டடம் கட்ட அனுமதி கேட்டு மன்றாடிகொண்டு

இருக்கார்

அரசு துறைகளில் நடக்கும் லஞ்சலாவண்யத்தால் விரட்டபடும் ரஜினி

சீறுகிறார்.

படம் முழுக்க ஒரு சமூக அக்கரை உடைய மனிதனாக வரும் கதாநாயகன்

(அதை சாதிக்க தேடும் வழி இராஜ வழி )

அதுக்காக அவர் போடும் பிளான் சண்டை யுக்தி எல்லாம் விடுங்க
ஸ்ரேயாவோட அவர் ஆடும் ஆட்டம் எல்லாம் விடுங்க .

எனக்கு பிடிச்ச விசயம் இந்த வயதில் அவரிடம் இருக்கும் சுறு சுறுப்பு.

படம் முழுக்க தன்னையே தனது ஆளுமையையே கவனிக்கும்படி செய்வதில்

அவரது ஸ்டைல் வெற்றி பெற்று இருக்கிறது .

தனிமனிதனாக இந்த சமூகத்தில் போராடும் ஒரு சிவாஜிராவ் அதில் இருக்கும்

ஓட்டைகளை கொண்டு ரஜினியாக மாறிய அந்த சிவாஜிராவ்
தன் சொந்த திறமையில்தான் முன்னேறி இருப்பார் என்பதில் எந்த மாற்றமும்

இல்லை

அவர் மேல் இருக்கும் விமர்சனங்களை தவிர்த்துவிட்டு
ஒரு பொழுது போக்கும் அம்சமாக இந்த திரைபடத்தை பார்க்க செல்வதில்
ஒரு ரசிகன் செல்வழிக்கும் பணம் நட்டமடையவில்லை.

சும்மா அதிருதில்ல ;))


ஒரு நண்பியின் மடல்:

இதையே தான் நானும் சொல்கிறேன்...டாக்டரும் அவரது முதல்முதலில்
அளித்த சிவாஜிபாஸ் பதிவில் சொன்னார்..'லாஜிக் பாக்கவேணாம்'ன்னு.

பொழுதுபோகமட்டுமே இந்த மாதிரிப் படங்களைப் பார்க்கணும்.
மேலும் நீங்க சொல்றமாதிரி ரஜனி இந்தவயசிலும் என்ன சுறுசுறுப்பு பாருங்க!

ச்சும்மா அதிருதில்ல..அதுதான் வெற்றி!!

ஆமா என்னவோ கோபம் வரமாதிரி எழுதபோறீஙகன்னு நினச்சேன்

ஒண்ணூம் காணோமே...கூல் கூல்?:)

எனது பதில் :
நான் பார்த்தாதானே தெரியும் ;)

நண்பியின் மடல்:
பின் எப்படி விமர்சனம் படம் பார்க்காமலேயா?:)

எனது பதில்: நாம் கோபப்படனும்னா இந்த சமூக அமைப்பின் மேல்தானே

தவிர ரஜிமேல் இல்லை

கண்ணன் கீதை சொன்ன மாதிரி தன் கடமையை தன் தொழிலை செய்கிறார்
அவ்ளோதான் .

இப்பவும் சமூகத்தில் ஒரு ரசிக பட்டாளத்தை முட்டாளாகவே வைத்து

இருக்கும்
ரஜினிமேல் கோபம் இருக்கத்தான் இருக்கு.

அதாவது ஒரு நடிகனாக ரஜி ஜெயிக்கிறார் .
ஒரு மனிதனாக சமூக அக்கரையில் தோற்க்கும் அவர் அவரது
ரசிகனுக்கும் தான் சுரண்டி பிழைத்த இந்த மண்ணுக்கும் ஒரு கழிவு

பொருளாகிபோனார் ;)

நண்பியின் மடல்:
எல்லா நடிக நடிகையரும் அதைத்தானே செய்யறாங்க? சமூக

அமைப்புன்னா என்ன நாமும் அதில் ஓர் அங்கம் தானே?

எனது பதில்:

நாமெல்லாம் செய்ய முடியாத செய்தாலும் ஒரு சிறிய அளவு பாதிப்பை

ஏற்படுத்தும் ஒரு நிலையீல் இருக்கோம் .

ஒரு பெரிய இளைஞர் பட்டாளமே தனது சக்தியை ஒரு தனிமனிதனின்

வழிபாட்டில் தொலைக்க அனுமதிக்கிறார்னா .

அதை நாம ஏற்றுகொள்ள முடியாது

தன்னலமற்ற ஒரு நூறு இளைஞர்களை கேட்டார் ஒரு சாமியார்

ஒரு சாமியாருக்கே சமூக மாற்றம் மீது இவ்ளோ அக்கரை இருந்தா

இந்த சமூகத்தில் ஒரு பெரிய இடத்தில் இருக்கும் ரஜினி

கதையில் சொல்லப்படுவதுபோல தன்னிடம் இருக்கும் கருப்பு பணத்தை

கொண்டு

ஒரு பெரிய கல்லூரிகட்டலாமே

என்னிடம் இருந்தால் நிச்சயமா அதை செய்வேன் .

ஆக ஒரு படத்தின் நடிக்கும் நடிகனாக தனது கடமையை செய்யும் ரஜினி

சமூகத்தில் ஒரு பெரிய சக்தியாக இருந்தும் சமூக விடிவுக்கு ஏன் ஒன்னும்

செய்யலை

தனது வயித்தை தவிர வேறு ஒன்னும் இல்லை என சொல்லும் அற்ப

மனிதனாக

இருப்பதில் எனக்கு பிடிக்கவில்லை .

அந்த வகையில் தியேட்டருக்கு வெளியே அவர் புகழ் பாடிகள் செய்யும்

கடாவெட்டல்

காதுகுத்தல் களை பகுத்தறிவு பார்வையில் எதிர்க்கவேண்டும.

பிள்ளையார கும்பிடலாம்

பிள்ளையார பெரிசா பிடிச்சு தெரிவில எடுத்து போய்

அங்கே சுய லாபம் சம்பாதிக்க ஒரு கூட்டம் ஆரம்பித்தால்

நான் பிள்ளையாரை எதிர்ப்பேன் .

அம்மாதிரி

நண்பியின் மடல் :

எனக்கு என்ன டவுட்ன்னா இதெல்லாம் ஒருநடிகரா விரும்பிக்கேட்டு

செய்யச் சொல்லுவார்?

எனது பதில்:

ஒரு காலத்தில் இதை விட கிறுக்கு கூட்டமா ரசிகர் கூட்டம் கமலுக்கு

இருந்தது
அப்போ கமல் ரஜினி சண்டைக்குன்னு தனியே போலீஸ் படையே இருக்கும்

தடுக்க

ஆனா கமல் அதை மட்டு படுத்தி விடவில்லையா
அவங்கவங்க பிழைப்ப பாருங்கன்னு சொல்லிட்ட்டார்

இதெல்லாம் அவர் ஊக்கப்படுத்தாம நடக்காது

சும்மா வெளிய பேச்சுக்கு வேணா சொல்லலாம் அவரா செய்ய

சொன்னாருன்னு

செயலலிதா காலில் விழ சொல்ல மாட்டார்

விழாட்டி பதிவில் இருக்க மாட்டார் மந்திரி அம்மாதிரிதான்

நண்பியின் மடல் :

சரி இப்போஇதுக்கு நாம என்ன செய்யலாம்?

எனது பதில்:
நாம் ரஜினி படத்தை பற்றி ஒரு விமர்சனம் எழுதும் போது அதில் இருக்கும்

இரண்டு பக்கத்தையுமமெழுதனும்

அதான் குழுமத்தி ல் நாம செய்யனும்

சும்மா ரஜினி துதி பாடுதலை விட ஒரு விமர்சன கண்ணொட்டத்தோட

எதையும் அனுகனும்னு கேட்டுகிறேன்

யாரையும் புனிதபடுத்தி மக்களிடம் இருந்து உயர்ந்த இடத்துக்கு ஏன்

கொண்டுபோகனும்

ரஜினி நின்னா ட்ராபிக் நின்னுடும்கிறது ரஜினிக்கு பெருமையா இருக்கலாம்

அங்கு நின்னு ரஜினியை வேடிக்கை பார்க்கும் கூட்டதுக்கு பெருமை இல்லை

ஒரு படமா பார்த்தமா அத்தோட விட்டமான்னு இருந்தா

இன்னைக்கு ஒரு நடிகை ஆச்சிக்கு வந்து

இருக்க முடியுமா , அல்லது நடிகன்

இவர்கள் சினிமாவால் பிரசவிக்கப்பட்டு நம்மை சிலுவையில் அறையும்

ஏசுகளாகி போகிறார்கள்

இதுக்கு நம்ம ஒவ்வொரு நபரும் காரணம்

இம்மாதிரி புனித பராக்கிரம பிம்-பங்களை உடைக்கனும்

அறிவைக்கொண்டு ஏற்படும் ஒரு சமூகத்தில்

ஆளை கும்பிடும் வேலை நடக்காது

7 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post