மாற்று அரசியல் கோசமும் தேர்தல் தோல்வியும்

நான் கம்யூனிஸ்டுகள் விஜயகாந்தின் பின்னே சென்றது ஏன் என்ற எனது கட்டுரையை வைத்திருந்தேன் வெக்கமும் வேதனையும் நிறைந்த எனது மனநிலையை வெளிப்படுத்தி இருந்தேன் . ஒரு தோழர் மாதவராஜ் கட்டுரையை பார்க்க சொன்னார்

https://thetimestamil.com/2016/05/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/

அதில் கீழ்கண்ட முரண்பாடான கருத்தை சொல்கிறார்

பகுதி :1//ஆளும் கட்சியான அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து போராட்டங்கள் நடத்தும் உறுதியோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களில் எதிர்வந்த தேர்தலையொட்டி, இந்த கூட்டு இயக்கமானது ஊழல் மலிந்த, அரசியல் நேர்மையற்ற, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, மக்கள் விரோத திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியாக உருப்பெற்றது. //

பகுதி 2://இந்த அணி வெற்றி பெறும் என நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு தேமுதிக, தாமாகா வோடு இணைந்து தேர்தலை சந்தித்தது. மக்களின் பிரச்சினைகளை முன்வைத்தும், ஆட்சிக்கு வந்தால் எதற்கு முன்னுரிமை கொடுப்போம் என்ற தெளிவான பார்வையோடும், கூட்டணி ஆட்சி என்னும் முழக்கத்தோடும் மாற்று அரசியல் பேசியது.//
ஆளும் அதிமுகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதற்கு எதிராக அணி திரண்டது சரி அதுதான் முதல் பகுதி
இரண்டாம் பகுதி தேமு திக தாமாக வுடன் சேர்ந்துதான் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தோம் என சொன்னதில் உங்களின் இயக்கமறுப்பியல் கொள்ளை தெரிகிறது .
அதைத்தான் தேர்தலுக்கு முன்னே நான் மாற்று அரசியல் என்பது மாற்று தர அரசியலாக இருக்கவேண்டும் என்று
1.மதிமுக
2.விடுதலை சிறுத்தைகள்
இருவருமே உங்களுடன் அம்மா கூட்டணியில் இருந்தவர்கள் பல்வேறு அரசியல் போராட்டம் நடத்தியவர்கள் மக்களிடன் அவர்கள் பிரசனை குறித்து ஓரளவு பேசியவர்கள் என வைத்து கொண்டாலும்
தேர்தலில் செயிப்போம் என்பதை மக்களுக்க் உணர்த்தும் அவசரம் ஏன் வந்தது தோழர்
அப்புறம் இந்த கணிப்பு கடந்த தேர்தலில் அந்த கட்சிகள் பெற்ற சதவீதத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் கணிப்பல்லவா
அது இயக்கவியல் பூர்வமாக தப்பாச்சே
அதாவது அந்த தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த வாக்கு என்பது அப்போது அவர்கள் செய்த செயல்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் கூட்டணிக்கும் அப்போதையை அவர்களின் கொள்ளைக்கு அளிக்கப்பட்ட வாக்குகளாகும்
அதை வைத்து அவர்களுடன் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என நம்பி அவர்களை சேர்த்து கொள்வது எப்படி சரியாகும் அதே போல் முதல் பாராவில் சர்வாதிகார மனப்பான்மை கொண்ட மக்கள் விரோத அதிமுக திமுக மாதிரிதான் இந்த தாமகவும் , தேமுதிகவும் என்பதை அறிய வில்லையா நீங்கள்
மாற்று அரசியல் கருத்து சொதப்பும் இடம் இதுதான்
ஒன்று கொள்கைக்காக கூட்டு சேரனும் அல்லது ஓட்டுக்காக கூட்டு சேரனும்
கொள்கையும் வேண்டும் ஓட்டும் வேண்டும்னு சொன்னா கிடைகாது
அப்புறம் பீ டீம் முத்திரை
ஊடகங்கள் ஊதிய பெருக்கிய அதிமுக திமுக பிம்பம் இதெல்லாம் தான் மாற்று அரசியல் எடுபடாததற்கு காரணம் என்றால்

ஊடகமா ஓட்டை தீர்மானிக்குது (தினமலர் அப்படி நினைத்து கருத்தை மாற்ற முயற்சி செய்கிறோம் என சொன்னார்கள் )
ஆனால் மக்கள் கருத்தை ஊடகங்களால் மாற்ற இயலாது அப்படி மாற்ற முடியும் என்றால் திமுகவிற்கு இருக்கும் பணத்தால் அனைத்து ஊடகத்தையும் விலைக்கு வாங்கி இருக்கலாமே ?
அதிமுகவுக்கு மாற்று என ஜாதி மத இயக்கங்கள் பேசத்தான் செய்யும் நீங்கள் சொல்ற குறைபாடெல்லாம்
சின்ன பசங்க ஸ்கூலில் சொல்லும் காரணங்களாக இருக்கிறதை அறிந்து கொள்ளுங்கள்
அரசியல் தெளிவும் ஓட்டை எதிர்நோக்காத அதை நோக்கி நகராமல் மக்களின் விடியலை நோக்கி நகராத எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது
அதிமுக பணம் கொடுத்தார்கள் ஆமாம் திமுகவும் தானே கொடுத்தார்கள் ஆக பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டார்கள் என சொல்வது மக்களை கொச்சை படுத்துவதாகும் பணம் வாங்கி கொண்டு தாங்கள் விரும்பிய கட்சிக்குத்தான் ஓட்டு போட்டு இருக்கிறார்கள்
ஆனால் இந்த பணம் கொடுத்ததை அம்பல படுத்தி அதிமுக திமுகவின் ஊழல்களை அம்பலப்படுத்த அடுத்த ஐந்தாண்டுகள் தயராக இருந்தால் அப்படி செயல்படும் கட்சியே மாற்று அரசியல் கட்சி
பலன் கிடைக்க வெகு நாளாகலாம் ஆனால் உருப்படியான அரசியல் பேசி இருப்பீர்கள்

மறுபடியும் லெனினது அரசும் புரட்சியும் என்ற நூலை எடுத்துக்காட்டாக வைக்கிறேன்

நீங்கள் இன்னும் தீர்மானிக்காமல் இருப்பது எது ஒடுக்கும் வர்க்கம் எது ஒடுக்கப்படும் வர்க்கம் 

இந்தியாவில் இன்னும் அரை காலனிய அரை நிலபிரபுத்துவ ஆட்சி இருக்கிறது என்கிற உங்கள் பழைய கணிப்பை மாற்றாமல் இருப்பது 

தேர்தலில் பங்கெடுப்பது ஏன் என்று உங்கள் அணிகளுக்கு உகந்த பாடம் சொல்லாமல் இருப்பது 

கட்சியை வெகுஜனபடுத்துகிறேன் என சொல்லி வர்க்கப்படுத்தாமல் இருப்பது 


இந்தியாவில் முதலாளித்துவ ஒடுக்கும் ஆட்சி நடக்கிறது இந்த வைக்கோ , விஜயகாந்தெல்லாம் ஒடுக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களே தனிபட்ட முறையில் கருணாநிதியை தாக்குவதிலாகட்டும் ஆட்சிகளுக்கான பேரம் பேசுவதிலாகட்டும் வைக்கோவின் புத்தி வெளியே வரும் அவர் ஒடுக்கும் வர்க்கத்தின் பிரதிநிதி  அவருடன் தேர்தல் கூட்டு மட்டுமல்ல எந்த கூட்டும் சரிவராது என்பது எனது கருத்து .

தமிழ் மாநில காங்கிரஸ் அம்மாதிரியே திருமா வளவன் போன்றோர் கூட போராட்ட அணி திரட்டலுக்கு ஒத்து வருவார்கள் இந்த வைக்கோ தமாக வெல்லாம் வெறும் ஓட்டு பொறுக்கி அரசியல் வாதிகளே

இதுநாள் வரையிலும் தமிழகத்தில் உங்கள் அணி சேர்தல் என்பது எப்போதுமே ஆளும் ஒடுக்கும் வர்க்கத்துக்கு சாதகமான பலனை அமைத்தே வந்துள்ளது .

குட்டி முதலாளிகளையும் பெரு முதலாளிகளையும் அம்பலப்படுத்தி பெருமுதலாளிகள் முதலாளித்துவ வாதிகளின் கைப்பாவையாக விளங்கும் கட்சிகளை அம்பலப்படுத்த வேண்டும் அதற்கு நீங்கள் பாட்டாளிவர்க்க கட்சியாக இருக்கவேண்டும் அல்லவா?

வெகுஜன கட்சி என்பது இப்போது நீங்கள் இருக்கும் நிலைதான் போயாஸ் தோட்டத்தின் வாசலில் சில நாள் வி காந்தின் வால் பிடித்து சில நாள் என பொழுது போகும் புரட்சி வராது 

கம்யூனிஸ்டுகளின் சமரச போக்கை பற்றி விவரிக்கும் ஒரு கட்டுரை சுட்டி

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8631179.ece

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post