ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவது வன்முறைதானே?

நாம் எப்போதுமே தேர்தல் நேரத்தில் கேட்கும் வசனம் எந்த கட்சி ஜெயிக்கும் என்கிற கேள்வியை நாம் எல்லாருமே கேட்டு வைப்போம்
பொதுவான சுனாமி பொதுவான அரசியல் கொலைகள் இல்லாத நேரங்களில் பெரிய பிரச்சனைகள் இல்லாத ஒரு நார்மலான காற்று வீசும் ஒரு பொழுதில் வரும் தேர்தல் எப்படி நடத்தப்படுகிறது
ஒரு பொது மனநிலை அதாவது ஜெயிக்கிற வேட்பாளருக்கு போட்டு நமது ஓட்டை காப்பாத்தி கொள்வது இது சரியா
1.ஜெயிக்கிற வேட்பாளர் யார் ? ஒரு பெரிய கட்சியில் கோடிகளாக டொனேசன் கொடுத்து பிறகு அறுவடை செய்து கொள்ளலாம் என்கிற பிசினஸ் மெண்டாலிட்டியோடு இருக்கும் ஒரு நபரா
2.அந்த  தொகுதிக்கே தன்னை அர்பணித்து கொண்ட ஒரு வேட்பாளரா அப்படி இருப்பது குறைவு
3.நேர்மையின் சிகரமாக வாழ்ந்து  ஒரு நல்லெண்ண ஆதரவை பெற்றவரா

மேற்படியான 2 ,3 தகுதிகள் பெற்று வெற்றி பெறும் வேட்பாளரா
அல்லது எண் ஒன்றில் காட்டப்படும் பிசினெஸ் வேட்பாளரா
எது சரி
எண் ஒன்றை த்தான் பெரும்பாலும் நமது தமிழ் நாட்டில் தகுதியாக கருதுகிறார்கள்
இது அடிப்படை ஜனநாயக பண்புக்கு விரோதமானது
அடிப்படை ஜனநாயகத்தை கருத்தியல் ரீதியாக நாம் மதிக்காமல்
எப்படி ஆள்பவர்களை குறை சொல்கிறோம் என்று தெரியவில்லை

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post