இலவசங்களின் மீதான சவாரி அரசியல்

கடந்த பத்தாண்டுகளாக இலவசங்களின் அரசியல் நடக்கிறது நமக்கெல்லாம் ஜனநாயகத்தின் மீதான் மிக சிறிதளவு நம்பிக்கையையும் தகர்த்து விடுவதை தவிர்க்க இயலவில்லை

இலவசங்களை கொடுத்து ஓட்டு வாங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இருப்பதை நினைத்து வருத்தமோ - இலவசங்களை வாங்கும் நிலையில் மக்கள் இருக்கிறார்களே என்ற வருத்தமோ இல்லாமல் மேல் தட்டு நடுத்த்ரவர்க்கம் நகன்று செல்கிறது .
விலைவாசியை கட்டு படுத்துவதுதான் முன்பெல்லாம் அரசியல் விவாதமாகவும் மேடை யாகவும் இருக்கும் திமுக அரசின் ஆட்சியில் ஒரு கண்ணாடி கூட வாங்க முடியவில்லை என்று அதிமுக பேச்சாளர் பேசிவிட்டு செல்வார் உடனே அடுத்தபடியாக அந்த கூரை கொட்டகைக்கு திமுக பேச்சாளர் வந்து அதிமுக ஆட்சியில் நெத்தியில் வைக்க ஒரு பைசா பொட்டு கூட வாங்க முடியலை என்பார் இப்படி தேர்தல் கலை கட்டும்
ஆனால் இப்போதெல்லாம் பிரசாரமோ தேர்தல் எனும் அந்த ஜனநாயக திருவிழாவோ இல்லை
தேர்தல் கமிசன் கெடுபிடியால் பிரசாரமெல்லாம் டிவி மூலம் நடைபெறுகிறது ஆகவே தேர்தல் வருவதும் போவதும் தெரியவே இல்லை அதிருகட்டும்
தேர்தல் இலவசங்களை அள்ளி கொடுத்ததை தவிர நமது கிராமங்களின் வாழ்க்கையை உயர செய்து இருக்கிறதா?
என்ன முன்னேற்றத்தை நாடு சந்திக்கிறது யாருடைய முன்னேற்றம் ? என்பதெல்லாம் விவாதத்துக்கு உரிய விசயங்கள் ஆனால் இங்கு விவாதம் ஜனநாயகத்தின் அடிப்படை மீதானது
தேர்தலின் மூலம் மாறுவது ஒரு கும்பல் மற்றொரு கும்பலுக்கு விட்டு கொடுத்து விலகுவதுதானே தவிர கொள்கை கோட்பாடெல்லாம் அணு அளவும் இல்லை
கம்யூனிஸ்டு ஓட்டு கட்சிகளோ இந்த பேரத்தில் உப்புக்கு சப்பாணியாகி போனது கால கொடுமை .
இந்த அமைப்பு முறை இப்படியே சென்று கொண்டிருந்தால் அது முட்டு சந்தில் போய் முட்டி நின்றுவிடும்
மக்கள் மாற்றுவழியை காண முயலவேண்டும்
மன்னர் காலத்தில் அனைவரும் ஒன்று திரண்டு வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று சின்ன மருது குரல் கொடுத்தார்
ஆனால் அது நடந்ததோ இரண்டு நூற்றாண்டுகள் கழித்து
அதை போல இந்த அமைப்பு முறை முற்றிலும் ஏமாற்று வேலையாகும் என்ற நமது குரலை பதிவு செய்வோம்
நடப்பது நடக்கும்

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post