ஓட்டு வாங்க சாதி, மத, இன அரசியல் அனைத்தும் தவறானவையே .திராவிட அரசியல் பேசிய பெரியார் தனது கட்சியை ஓட்டுக்கு நிறுத்தவில்லை ஏனெனில் , ஓட்டு வாங்கி பதவியில் உக்கார்ந்துவிட்டால் நாட்டில் சமூக உரிமைக்காக போராட முடியாது என நினைத்தார். ஆனால் மார்க்சியர்கள் பாராளுமன்றத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் ஆனால் பாராளுமன்றம் நம்மை பயன்படுத்திவிட கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்றார் லெனின்.
பொதுவாகவே முதலாளித்துவ
அமைப்புகள் கட்சி அனைத்துமே வர்க்க சேவை செய்யும் எந்திரங்கள் அதாவது முதலாளிகளின்
விசுவாச இயந்திரங்கள் ஆகும் . தனது கட்சி மக்களுக்கானது தான் என பாமக ராமதாசும் சொல்றாரு
கருணாநிதியும் சொல்றாரு , ஜெயாவும் சொல்றாங்க .
மக்கள் என்ற பொதுவான
சொல் எதை குறிக்கிறது – பொதுவான மக்கள் நலன் என்பது இருக்கிறதா என்றால் இருக்கிறது
– அது சாலை வசதி, மின்சாரம் , குடிநீர் , சுகாதாரம் என்பன போன்ற அடிப்படை பிரச்சனைகள்
அனைத்து மக்களுக்குமானது.
இதற்காக யார்வேண்டுமானாலும்
போராடலாம் ஆனால் இதன் மூலம் ஓட்டு அறுவடை செய்ய முடியாது எனவே பாமக முதல் அனைத்து சாதிகட்சிகளும்
சாதியை தங்களது நலனுக்கான லட்சியமாக வைக்கின்றன.
இந்த சாதி அமைப்பு
வர்க்க நலனுக்கு எதையும் செய்ய முடியாதாகையால் அது சிதைந்து வருகிறது – முதலாளித்துவ
அமைப்பில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை.
முதலாளித்துவ அமைப்பில்
கோவில் மற்றும் நிலங்கள் எல்லாமே தனது செல்வாக்கை இழந்து விட்டன.
முதலாளித்துவ பாராளுமன்ற
ஜனநாயகம் குறித்து தோழர் லெனின் எழுதிய வரிகள்
//லெனின் முன்வைத்துள்ள இரண்டு அடிப்படையான வரையறைகள்:
1. முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது - அதாவது
முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தம் முடிவடைந்து விட்டது, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் துவங்கி விட்டது.
2. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதா என்பதைப் பொறுத்தே பாட்டாளி வர்க்கக் கட்சிகள் இப்பிரச்சனை குறித்து தமது
செயல்தந்திரத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.
//
முதலாளித்துவ நாடாளுமன்ற
ஜனநாயகமே காலாவதி ஆகிவிட்டதென்றால் சாதி அரசியல் என்பது நிலவுடமை சமூகத்தின் அரசியலாகும்
.
நிலவுடமை சமூகம்
என்பது இன்றைக்கு முற்றிலும் மறைந்து விட்டது – நிலமும் அதனை சார்ந்த உழைப்பும் அதன்
உற்பத்தி உறவுகளும் என்பதுதான் நிலவுடமை சமூகம் .
அதன் மேல் கட்டுமானமே
சாதி/ இனம் / மதம் போன்றவை.
ஆனால் இந்தியாவில்
முதலாளித்துவம் மேற்குலகை போல மிகப்பெரிய வளர்ச்சியை அடையவில்லை ஏனெனில் முதலாளித்துவம்
பெரிய வளர்ச்சியை அடைந்தால் இங்கு தொழில்மயம் ஆகி இருக்கும் –அதன் உடனடி விளைவாக சாதி
போன்ற விழுமியங்களை தூக்கி எறிந்து இருப்பார்கள் ஆனால் நிலமை அவ்வாறு இல்லாது குறிப்பிட்ட
இடங்களில் மட்டுமே தொழில்கள் என பரந்துள்ளதால் .
சாதி போன்ற முந்தைய
நூற்றாண்டின் விழுமியங்களை எடுத்து கொண்டு அரசியல் செய்கிறார்கள்.
தங்களுக்கு மக்களிடம்
பேசுவதற்கும் செய்வதற்கும் ஒருக்கும் ஒரே விசயமாக இந்த சாதி இருப்பதால் மதம் என்ற ஒற்றை
சொல்லால் ஒட்டு வாங்க முயன்ற கட்சியான பஜகவும் தோற்று போனது.
தமிழ் நாட்டில்
திராவிட அரசியல் பேசியவர்கள் ஒப்பீட்டளவில் முற்போக்கானவர்களாக இருந்தார்கள் ஆனால்
திமுகவின் ஓட்டரசியல் அதன் குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சிக்கே பயன்பட்டதால்.
எல்லா விழுமியங்களும்
தோற்று போனதை கண்கூடாக காண்கிறோம்.
மக்களின் நிகழ்கால
பிரச்சனைகளுக்கு திராவிடமோ , ஆரியமோ , சாதியோ தீர்வை தரமுடியாதாகையால் மக்கள் வர்க்கமாக
அணிதிரளவேண்டிய தேவை ஏற்படுகிறது.
சாதி போன்ற விசயங்கள்
நமது வாழ்வில் உற்பத்தியில் எந்த பங்கையும் வகிக்கவில்லை நாடார்கள் என்கிற ஒரு சில
சாதிகளை தவிர தொழிலும் சாதியும் பெரும்பாலும் பிரிந்து விட்டது.
இந்நிலையில் சாதியை
அடிப்படையாக வைத்து அரசியல் செய்வது பிற்போக்கானது.
அதுவும் சாதி வெறிபிடித்த சுயநலவாதிகள் மக்களின் குடிசைகளை எரித்தும் மனிதர்களை கொழுத்தியும் என்ன செய்தாவது தங்களின் சாதி மக்களின் நல் அபிப்பிராயத்தை தேட முயல்கிறார்கள் .
இவர்களிடம் இருந்து
வன்னிய சாதி பாட்டாளி மக்களை விடுவிப்பதே நமது முதல் கடமை .
மக்கள் இவர்களை
கண்டு கொள்ள கூடாது , இவர்களின் கட்சியில் உறுப்பினராக கூடாது. இவர்களுக்கு ஓட்டளிக்க
கூடாது .
தனிமை படுத்த பட்டால்
மட்டுமே மனிதனாகும் வாய்ப்பு இவர்களுக்கு வரும்.
ஆனால் இதன் மறு கேள்வியாக தலித் கட்சிகளில் சேரலாமா என்கிற கேள்வி வரலாம்.
தலித் அரசியல் வாதிகளும் தங்கள் பங்கிற்கு மக்களை ஏமாற்றியே வருகிறார்கள்.
உழைக்கும் மக்கள் வர்க்க மாக அணிதிரள்வது ஒன்றே வழி.
1.முற்போக்கை போன்ற வசனங்களை நம்மிடையே பேசுகிறார்கள்
2.சாதிக்கு அப்பாற்பட்ட மக்கள் நலன் என்று கூவு கிறார்கள்
ஆனால் அவர்கள் சாதி சகதிக்குள் தான் இருக்கிறார்கள்
பா மக ராமதாசோ அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியோ அல்லது தேவர் சாதி /நாடார் சாதி கட்சிகளோ ஒரு சில ஓட்டுகளை வாங்கி ஒரு சில இடங்களில் பாராளுமன்றம் அல்லது சட்ட மன்றத்தில் போய் உக்கார்தாலும் நமக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்பதை பாட்டாளிவர்க்கம் உணரவேண்டும்
அதாவது அவர்களது சாதிக்குள் இருக்கும் பாட்டாளிவர்க்கம் உணரவேண்டும் .
தங்களது சொந்த நலனுக்கே அவர்கள் உங்களை சாதியாக திரட்டி இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் அவர்களின் நச்சியமான வார்த்தையில் இருந்து விடுபடுவீர்கள் .
ஆனால் இவர்களோ மேலும் மேலும் சாதி கலவரங்களை உருவாக்கி குளிர் காய்கிறார்கள் .
1.தலித் மக்களின் காலனிகளை எரிக்கிறார்கள் இதன் மூலம் தாங்கள் ஆதிக்க சாதியினர் என நிரூபிக்க முயல்கிறார்கள் .
சமூக பொருளாதாரத்தில் பிந்தங்கிய இந்த மக்களுடன் ஏன் மோதுகிறார்கள் தெரியுமா/
அவர்களுக்கு பொருளாதார பலமில்லாத காரணத்தால் இத்தனை ஆண்டுகள் அவர்களை இந்த அமைப்பு கல்வி கற்ற அனுமதிக்காத காரணத்தால் மிகவும் ஏழ்மையில் இருக்கும் அன்றாட காய்ச்சிகளை துன்புறுத்தி தாம் பெரியவர்கள் என காட்டுகிறார்கள்
இதுதான் வீரமா?
2.தலித்துகள் குடியிருக்கும் இடத்தில் கோவில் விசேசமோ தேர் திருவிழாக்களோ நடத்த விடுவதில்லை
அப்படி தேர் திருவிழா நடத்தினால் அந்த தேரை எரிக்கிறார்கள் ஊரையும் எரிக்கிறார்கள்
ஏன் தெரியுமா பெரும்பாலும் தாழ்த்த பட்ட மக்களின் வாழ்விடம் குடிசைகளாகும்

இப்படி தன்னிலும் எளிய வலிமை குன்றியவர்களுடன் இவர்கள் மோதி வீரத்தை பறைசாற்றுகிறார்கள்.இதுதான் வீரமா?
//2012 நவம்பர் 7-ஆம் தேதி சர்வாதிகார ஜாதி வர்க்க அரசின் காதுகளில் கேட்காத ஒப்பாரி ஓலங்கள் இன்னும் ஓயாத நிலையில் தர்மபுரி ஜாதிவெறி வன்முறை சம்பவம் நடந்த நாளை ஜாதி வெறி அரசியல் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க நான்கு நாட்களே மீதமிருந்த நிலையில், நவம்பர் 3-ஆம் தேதி வேலூர் மாவட்டம், சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த ரெண்டாடி கிராமத்தில் உள்ள தலித்துகள் வாழும் பகுதியில் அவர்கள் வாழ்வாதாரங்கள் மீது பெரும் பாதிப்பையும், உயிர் பயத்தையும் ஏற்படுத்தும் விதமாக, இதே ஜாதி வெறியர்களால் தர்மபுரியில் நடத்தப்பட்ட தாக்குதல் மக்களிடம் ஏற்படுத்திய சலசலப்பை இச்சம்பவம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இரவு 10.30 மணியளவில் மேற்சொன்ன ரெண்டாடி தலித் காலனியின் கடைசிப் பகுதியில் அமைந்திருந்த குடிசையை எரித்து ஜாதிவெறி வன்முறை தாக்குதலை ஆரம்பித்தனர் ஜாதிவெறி வன்னியர்கள்.//
தாக்கவந்த ஜாதிவெறியர்களில் 100 பேருக்கு மேல் தனக்குத் தெரியும் என்றும கை உடைக்கப்பட்டவரும், தன்னை தாக்கியவர்களில் 7 வன்னியர்களை தனக்கு தெரியும் என்று தலையில் தாக்கப்பட்டவரும் கூறினர். பிறகுதான் நமக்கு தெரியவந்தது இவற்றிற்கெல்லாம் அடித்தளமாக செயல்பட்டு திட்டமிடலுட்பட அனைத்தையும் பின்னிருந்து செயல்படுத்தியது முன்னர் சொன்ன சீனி. இவரது அண்ணன் பா.ம.க-வில் பொறுப்பில் இருப்பவர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இத்தனை பிரச்சனைகள் நடந்தும் மிகச்சாதாரணமாக கையாண்டு ஒவ்வொன்றையுமே ஜாதிவெறி வன்னியர்களுக்கு சாதகமாகவே வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள் R-3 சோளிங்கர் காவல்நிலைய அதிகாரிகள். குறிப்பாக நவம்பர் 3-ஆம் தேதி வன்முறை நடக்கப்போகிறது எனத் தெரிந்து காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி சென்ற ரெண்டாடி தலித்காலனியினருக்கு ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் அங்கு வன்முறை நடக்கவில்லையெனில் உங்கள் அனைவரையும் கைது செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/25784-2013-12-19-11-08-37
அடுத்து தற்போது சேசு சமுத்திரம் பகுதியில் நடந்த குடிசை எரிப்பு

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டத்திலுள்ள சேச சமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் தங்களுடைய மாரியம்மன் கோவிலுக்கு திருவிழா நடத்தி தேரோட்டம் செய்யவிருந்த நிலையில், சுதந்திர தினத்தன்று தேர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு, 5 வீடுகள் முழுமையாகவும், 4 வீடுகளின் ஒரு பகுதியும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த உணவு, உடை, பாத்திரம், மாணவர்கள் சான்றிதழ், ரொக்கப்பணம், குழந்தைகளின் தோடு, கொலுசு உள்ளிட்ட நகை, புத்தங்கள், சான்றிதழ், அரசு வழங்கியுள்ள குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பாதுகாப்பிற்கு இருந்த 8 போலீசார், 3 கிராம உதவியாளரும் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
குறிப்பு:
நாம் சாதியை வேண்டாம் என்று சொல்வது அது தற்போதைய சமூக பொருளாதாரத்தில் எந்த பங்கும் இல்லாத வெறும் குரூப் தான் என்பதற்காக
சாதி எதிர்ப்பு என்பது வன்னிய சாதி மட்டுமல்ல அனைத்து சாதிய அமைப்புகளுக்கு எதிரானதாகும் தலித் அமைப்புகள் உட்பட
மேலும் சாதிய கொலைகளை படிக்க
http://bharathithambi.com/?tag=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
தர்ம புரி கலவரம் பற்றிய காலசுவடு பதிவு
நவம்பர் 7ஆம் தேதி வன்னியர்களால் மிக மோசமாகத் தாக்கப்பட்ட தருமபுரியின் மூன்று கிராமங்களுக்கு எழுத்தாளர் குழுவாக நவம்பர் 10ஆம் நாள் சென்றிருந்தோம். செப்பனிட முடியாத அளவுக்கு எல்லா வீடுகளும் முற்றிலுமாகச் சூறையாடப்பட்டிருந்தன. உடல்மீதான வன்முறையைத் தவிர்த்துவிட்டு வீடுகளை மட்டுமே குறிவைத்துத் தாக்கிய திட்டமிட்ட சம்பவம் இது. மூன்று நாட்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் வற்றவில்லை. எங்கள் குழுவில் மறைமுகமாகவேனும் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளாதவர் யாருமில்லை. வாழ்விடத்தை இல்லாமலாக்குவது சாகடிப்பதைவிட மோசமான வன்முறை. இந்நிலைமை பாதிக்கப்பட்டவனின் இருப்பையே அழிக்கிறது. உயிரை மட்டும் விட்டுவைப்பதன் மூலம் இழப்பு ஏற்படுத்திய வலியிலேயே அவனை உழலவைக்கும் உளவியல் தந்திரம் இது. எலி வளையானாலும் தனிவளை என்பது தமிழ்ப் பழ மொழி. தலித் ஒருவன் வீடு கட்டுவது அசாதாரணமானது. முதலீடும் உழைப்பும் கால அளவும் அளப்பரியன. குறைந்தபட்ச வசதிகளோடு ஒரு வீட்டைக் கட்டிவிடுவது தலித்தின் வாழ்நாள் சாதனையாகிவிடுகிறது. மூன்று கிராமங்களிலும் எல்லா வீடுகளும் சீர்குலைக்கப்பட்டிருப்பதோடு ஒரு வீட்டின் எல்லாப் பொருட்களும் அழிக்கப்பட்டுள்ளன. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு 1987இல் வன்னியர் சங்கம் நடத்திய போராட்டம் தொடங்கி இன்றுவரையிலும் தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்துவதும் வீடுகளை அழிப்பதும் வன்னியர்களின் வன்முறை வடிவங்களாக இருந்து வருகின்றன.
/இந்திய அளவிலான பிராமண அதிகாரம் தகர்ந்துவிடவில்லையெனினும் வட்டார அளவிலான பெரும்பான்மை ஆதிக்கச் சாதி அதிகாரம் வலுவடைந்திருப்பதையும் தேவையெனில் அது பிராமண அதிகாரத்தோடு கூட்டணி ஏற்படுத்திக்கொள்வதோடு பிராமணர்களைக் கட்டுப்படுத்தியும் வைக்கிறது. இவ்வாறு சாதி தரும் அதிகாரம் ஒடுக்கப்பட்ட சாதிகளை அமுக்கிவைப்பதோடு இந்திய ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறது.//