இளங்கோவன் உருவ பொம்மை எரிப்பு அதிமுகவினரிடம்
கேள்வி
டாஸ்மாக் ஒழி என்ற போராட்டங்களை மக்கள் நடத்தி
கொண்டு இருக்கிறார்கள் தினம் ஒரு கடை நொறுக்கப்பட்டது . வண்டி வண்டியாக மாணவர்கள் கைது
என்ற நிலையில் தற்போது அதிமுகவினரின் இந்த போராட்டம் திட்ட மிட்ட எதிர் போராட்டம் ஆகும்
. அதென்ன எதிர் போராட்டம் என்றால் உண்ணா விரதம் இருந்தால் உண்ணும் விரதம் இருக்கலாம்
ஆனால் டாஸ் மாக்கை மூட சொன்னால் டாஸ்மாக் திறக்கும் போராட்டம் அவர்களால் நடத்த முடியாது.
அதற்கு
தகுந்தாற்போல இளங்கோவன் எதோ உளறிகொட்ட அதை பிடித்து கொண்டு அவரது உருவ பொம்மை எரிப்பு
என போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள் அதிமுகவினர்.
அரசியல்
என்பது பிழைப்புக்காக என்பது மாறி அரசியல் என்பது அரசியலுக்காக என்பது போய் அரசியல்
என்பது நாதாறிதனத்துக்காக மாறிவிட்டது .
எது
சரியான போராட்டம் எது தவறான போராட்டம் என்பதெல்லாம் போய்
நீ
போராட ஒரு காரணம் நான் போராட இன்னொரு காரணம் என்ற நிலமையில் ஜனநாயகமும் போராட்டமும்
கேலிக்கூத்தாகிவிட்டது.
ஜெயாவை
தவறாக பேசி இருந்தால் அதற்கான மன்னிப்பு கேட்கவேண்டும் என போராடுவதெல்லாம் சரிதான்
ஆனால் டாஸ்மாக்கால் நாடே கெட்டு சீரழிகிறதே இதற்கான தார்மீக நியாயம் சரியா?
ஏன்
சாராயத்தை விற்று இலவசம் கொடுக்கனும் உங்கள் கட்சியின் தலைவியை நோக்கி ஒரு தொண்டனாவது
கேட்க தைரியம் இருக்கா?
அதிமுக
தொண்டர்களே , உங்கள் குழந்தைகளும் இந்த மதுவை அருந்திதான் வாழப்போகிறார்கள் என்ற நிதர்சனமான
உண்மை தெரியவில்லையா?
உங்கள் தலைவியை தரகுறைவாக பேசியதற்கான செய்யும் போராட்டம் நியாயமானதே ஆனால் அதை போலவே டாஸ்மாக் ஒழிக்கவேண்டும் என்ற போராட்டமும் நியாயமானது அல்லவா?
உங்கள் தலைவியை தரகுறைவாக பேசியதற்கான செய்யும் போராட்டம் நியாயமானதே ஆனால் அதை போலவே டாஸ்மாக் ஒழிக்கவேண்டும் என்ற போராட்டமும் நியாயமானது அல்லவா?
எப்படி ஒரு போராட்டத்துக்கு
இன்னொரு போராட்டம் பதிலியாக இருக்க இயலும். உங்கள் அரசியலை தவிர .
எந்த தார்மீக நியாயமும்
இல்லாமல் நமது மக்களை போதைக்கு அடிமையாக மாற்றுவது சரிதான் என்றால் இளங்கோவன் சொன்னதற்கு
ஏன் கொதிக்கனும்
உங்களது மனசாட்சியை
அடகு வைத்து விட்டு பிறகு சமூகத்தில் மக்களிடம் நீங்கள் பேசுவதற்கு ஏதேனும் பற்றுகோடு
இருக்குமா?
எப்படி மக்களிடம்
நாளை ஓட்டு கேட்பீர்கள் .
கைமாத்தாக காசு
கேட்பதை போலவா?
அதற்கு கூட தார்மீக
நியதியை மீறியவர்களுக்கு உரிமை இல்லையே?
ஒரு அரசு என்பது
நீதி நிர்வாகத்தை அடிப்படையாக கொண்டது அது தவறும் போது அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை
போய்விடும் என்பதைத்தானே சிலப்பதிகார காலத்தில் இருந்து நாம் பார்கிறோம்
தவறான ஒரு தீர்ப்பை
வழங்கியதற்காக பாண்டிய மன்னன் கண்ணகிக்கு முன்பு உயிரை விடவில்லையா?
கோவலனாக டாஸ்மாக்குகள்
நிற்கும் போது அரசு பாண்டியனாக தனது மனசாட்சியை கேள்வி கேட்க வேண்டிய காலம் இது .
ஆகவே மக்கள் பங்கேற்காத
மக்கள் விரும்பாத உங்கள் போராட்டங்களை மக்கள் ஒரு சடங்கை போல வேடிக்கை பார்கிறார்கள்
இன்று
நாளை அது உங்களின்
ஆட்சி அதிகாரத்திற்கு பதிலளிக்கும்.
எப்போதுமே தொடர்பற்ற நியாயம் என்று ஏதும் இல்லை .
ஒரு பேச்சு வருகிறதென்றால் அது தொடர்புடையதுதான் அந்த பேச்சில் மட்டும் சரி தவறு என்பதை பார்க்கலாம் அவர் மீது வழக்கு தொடுக்கலாம் எல்லாம் சரிதான் ஆனால்
தனி கோர்ட்டில் உங்கள் தலைவியை விடுதலை செய்திருக்கும் வேளையில் ஒரு நாட்டின் பிரதமரே வந்து அவரை காணுதல் என்பது முறையான செயல் அல்ல
அதாவது நாட்டின் ஊழலை ஒழிப்போம் என சொல்லி ஆட்சி வந்த பஜகவின பிரதமர் ஊழல் ஒரு பிரச்சனையே இல்லை என சொல்வதை போலத்தான்.
இதைத்தான் இளங்கோவன் கேட்டிருக்க வேண்டும் ஆனால் அவர் கேட்டதோ தனிமனித தாக்குதலை போன்ற கேள்வியாகும் .
மேலும் மேலும் இளங்கோவன் உருவ பொம்மை எரிப்பதன் மூலம் நீங்கள் அவரை மக்களிடம் பிரபலமாக்குகிறீர்கள்
தமிழ் நாட்டில் அடையாளமற்ற நிலையில் இருக்கும் அவரது கட்சிக்கு வலு சேர்கிறீர்கள் அதை தவிர இந்த போராட்டங்களால் உங்களுக்கு எதிரான விளைவு வேறு எதாவது இருக்கென்றால் அது மக்கள் உங்கள் தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கை தகர்வுதான்.
http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-party-workers-burnt-evks-elangovan-effigy-nellai-dindi-233567.html
ஓட்டு அரசியலின்
துளிகள் :நமது கண்ணீர் துளிகள்
அதே நேரத்தில்
திமுக தற்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டு வருவோம் என்கிறார்கள் ஆனால்
ஒரு திமுக காரன் கூட தற்போது மதுவிலக்கு கோரி போராடவில்லை ஏனெனில் அவர்களுக்கு இது
ஒரு அரசியல் கோரிக்கை மக்களை ஏமாற்றும் தந்திரம் என்பதை மக்கள் அறிவார்கள் . ஆனால்
எதோ மக்கள் இந்த போராட்டத்தின் மூலம் வெகுண்டெழுந்து திமுகவுக்கு ஓட்டளித்து விடுவது
போலவும் ஆகவே இந்த போராட்டம் நடத்தவிட கூடாது என்றும் உங்களது குட்டி குட்டி தலைவர்கள்
உங்களை உசுபேத்தி இருக்கலாம்.
என்னதான்
நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு!” என அன்றே உங்கள் தலைவர் எம்ஜி ஆர் நல்லதை நினைத்தே போராட சொன்னார் என்பதை மறவாதீர்கள்.
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு!” என அன்றே உங்கள் தலைவர் எம்ஜி ஆர் நல்லதை நினைத்தே போராட சொன்னார் என்பதை மறவாதீர்கள்.
ஆனால் திமுகவின்
ஓட்டரசியலை மக்கள் நன்கு அறிவார்கள் ஆனால் மக்களின் மனதை அறியாமல் உங்கள் போராட்டம்
மொண்ணையாக இருக்கிறது .
நீங்களோ எம்ஜி
ஆர் காலத்தில் இருந்ததை போல சுயமரியாதையான ஒரு தொண்டனாக இல்லை.
பட்டு கோட்டை எழுதி
கொடுத்து எம் ஜீ ஆர் பாடிய அனைத்து பாடல்களும்
““மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி!
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி – முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி!””
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி!
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி – முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி!””
சினிமாவில் பார்த்த
எம்ஜிஆரை நம்பி உங்களுக்கு இதுவரை மக்கள் ஓட்டளித்து கொண்டுள்ளார்கள் என்பதையும் மறக்காதீர்கள்.
உங்கள் வண்டி பழைய
எம்ஜிஆரின் பாடல் வரிகளால் அதிலுள்ள நேர்மைக்காக ஓடிக்கொண்டு இருக்கிறதே தவிர . உங்கள்
தலைவியால் அல்ல .
ஆகவே ஏழைகளை நேசிப்பவராக
நீங்கள் மனசாட்சி உள்ளவர்களாக இருந்தால் இந்த அரசியல் படுகுழியில் இருந்து சிந்தித்து
வெளியே வாருங்கள்
எம்ஜி ஆரின் சில
பாடல்கள் :
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்
காக்கும்கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் - செய்த
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும்
மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும் - நம்மை
வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும் - நம்மை
வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும் - செய்த
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு - வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு - வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு - என்றும்
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் செய்த
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
மேற்கண்ட பாடல்
நமக்கு கூறுவது என்ன , தர்மம் நீதியை பின்பற்றி நடந்தால் அந்த தர்மம் நம்மை காக்கும்
என்பதுதானே/
கருத்தியல் ரீதியாக
ஒரு மனிதனை நல்வழிபடுத்த எழுதபட்ட இந்த பாடல்
நீதியை உயர்வாக
பேசுகிறது – ஆனால் டாஸ்மாக் வெள்ளமாக ஓடவிடுவது
சமூகத்துக்கு செய்யும்
அநீதியாகும்.
குடிப்பவர்களுக்கு
சாராயம் கிடைக்க செய்வதென்பது வேறு
புதிய குடிகாரர்களாக
குடிமக்களை உருவாக்குவது வேறு , இரண்டாவதை
உங்கள் அம்மாவின்
அரசு செய்வதை அறிவீர்களா?
மேலும் ஒரு அருமையான
பாடல்
உலகத்தில்
திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி – மனம்
கலங்காதே! மதி மயங்காதே!
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு”
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி – மனம்
கலங்காதே! மதி மயங்காதே!
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு”
மக்கள் இன்று ஊமைகளாகி
விட்டார்கள் /அரசியல் கட்சிகளோ எந்த பிரச்சனையிலும் அரசியல் லாபம் கருதும் திருடர்களாகி
விட்டாரகள்.
ஆகவே கலகத்தில்
தான் நீதி பிறக்க வேண்டும் அந்த கலகம் என்பது
டாஸ்மாக் ஒழிப்பு
கலகமே .
ஏற்கனவே இந்த கும்பல் மனநிலையில் செய்த ஒரு தவறுதானே
தர்மபுரி பஸ் எரிப்பு
https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஏற்கனவே இந்த கும்பல் மனநிலையில் செய்த ஒரு தவறுதானே
தர்மபுரி பஸ் எரிப்பு
https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81