தனிநபர் முன்னேற்றமும் சமூகமும் –சுந்தர்பிச்சை

தனிநபர் முன்னேற்றமும் சமூகமும் –சுந்தர்பிச்சை

ஆகா ஒரு தமிழன் பெரிய பதவியை அடைத்துவிட்டான். எந்த பள்ளியில் படித்தான் அவரது பெற்றோர் என்ன சொல்லி கொடுத்தாங்க . பள்ளிகூட பெயரை தப்பா எழுதலாமா . எல்லா மீடியாவும் காட்டு கத்தா கத்துது .
எதுசார் பெரிய பதவி – வைகுண்ட பதவி அடைந்து மக்களை போராட தூண்டிய சசி பெருமாள் அல்லவோ பெரிய பதவியை அடைந்தார்னு சொன்னாரு நம்ம பெரியசாமி.





சார் அவனவனுக்கு வாய்ப்பு கிடைக்கல அதனால சுந்தர் பிச்சைமேல எரிஞ்சி விழுறானுகன்னாரு வினோத்து.
யார் இவங்கெல்லாம்னு கேட்கிறீங்களா? எல்லாம் நம்ம தோஸ்துங்கதான்.
நாஸ்டா சாப்பிட போன இடத்தில – ஒரு பெரியவர் பேப்பரை படிச்சிட்டு என்னவோ பிச்சைகாரனெல்லாம் உலகம் புகழுதாமேன்னு கேட்க அய்யா அவரது பெயர்தான் சுந்தர் பிச்சை ஆள் பெரிய மூளைகாரன் என பதில்சொல்லிட்டு வந்தேன்.
இதற்கிடையே அதென்ன பிசாத்து வேலை எதோ ஒருத்தனுக்கு கிடைச்சுட்டா இந்த சமூகம் முன்னேறிடுச்சுனு அர்த்தமா? 2.5 கோடி பேரு இரவு சாப்பாடு இல்லாத நாட்டில எதோ ஒரே ஒருத்தன் முன்னேறுவது பெருமையான்னு நம்ம கறிக்கடை பாய் கேட்க சரி சொல்லுங்க என்றதும்.
செம கடுப்பாகிட்டார் பாய் , நம்ம நாட்டை சுரண்டி கொழுத்திட்டு இருக்கிற மேல் நாட்டு காரனுக கம்பெனில ஒருத்தன் சி இ ஓ போஸ்டு கிடைச்சா அவனை வாழ்த்துவது எவ்ளோ அடிமை புத்தி .
நம்ம நாடுகளின் ஒரு பெரிய நிரலாளன் அல்லது பெரிய மண்டைகாரன் பெருமை அடைய முடியாமல் தடுப்பது இந்த மந்தை ஆட்டுதனம் இல்லையா?
ஆமாம் என்றேன்
நம்ம நாட்டில திறமைக்கு மதிப்பில்லைப்பா அதான் வெளிநாட்டில பெருமை கிடைக்கிது போறான் என்னா தப்பு என்றார் நம்ம கோவில் பூசாரி.
எல்லாத்தையும் நல்லா  யோசிச்சு பார்த்தால் எல்லாமே சும்மா விளம்பரம்னு தெரியுது.
பள்ளி கூடத்து பசங்களின் டாஸ்மாக் போராட்டத்தை அடித்து ஒடுக்கும் ஜெயா அரசு அங்கே தமிழன் வெற்றி பெற்றான் என பொங்கி வாழ்த்து சொல்லுவதும் அரசியல்தான்.
உண்மையான நாட்டு பற்றுக்கு கொடி ஏத்தி மிட்டாய் கொடுத்தால் மட்டும் போதாது அப்படின்னா(நாட்டு பற்று) என்னான்னு சொல்லி கொடுக்கனும்.
என்னான்னு என்னை கேட்டீங்கன்னா?
அடிபட்டு மிதிபட்டு ஜெயிலுகுள்ள கிடக்கானே அந்த இளைஞன் அவந்தான் நாட்டு பற்றாளன் .
அவனல்லவா பாராட்டுக்கு உரியவன் .
குழப்பமா இருக்கா?
நாட்டு பற்று – திறமை இதெல்லாம் உங்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட விதம் முதலாளித்துவ சமூக அமைப்பின் விதம் அதான்
குடியை கெடுக்கும் போதையை ஒழிக்க (இது நாட்டு பற்று) போராடும் மாணவனை குத்தம் சொல்லிட்டு
வெளிநாட்டு கம்பெனில மேனேஜரானதுக்காக மட்டும் ஒருத்தனை வியந்து பார்ப்பது ஒருவிதமான அசட்டுதனம் இல்லையா?
சுந்தர் பிச்சை இந்த நாட்டுக்கு பேரு சேர்த்துட்டாராம்?
நமக்கு சுந்தர் பிச்சைகள் வாங்கி தரும் பேரு தேவை இல்லை  .
அது ஒரு விதமான மாயை அமெரிக்கா உள்ளிட்ட பெரிய பணக்கார நாடுகள் ஏற்படுத்தி இருக்கும் அடிமை மோகம்

பணக்கார சீமாட்டி போடும் கொலுசை வியந்தோடும் அடிமை புத்தியை ஒழிப்போம்..


http://www.vikatan.com/news/article.php?aid=50884

//உடனே சென்னையை மையமாக கொண்டு செயல்படும் பல பள்ளிகள், சுந்தர் பிச்சை எங்கள் பள்ளியை சேர்ந்தவர் என்ற தகவலை விக்கிபீடியா இணையதளத்தில் மாற்றினர்.
கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டதால், விக்கிப்பீடியா அந்த பக்கத்தை யாரும் மாற்ற முடியாத பக்கமாக மாற்றியது. அதுமட்டுமின்றி அவரது பள்ளிபடிப்பு பற்றிய விவரத்தையே நீக்கிவிட்டது விக்கிபீடியா.//

யோவ் தனியார் ஸ்கூல் பிரின்சிஸ்  ஏய்யா உங்க ஸ்கூல் படிச்சவன்னு போட்டு கனும்கறதுக்காக பொய் சொல்வீங்களா?

நீங்கதானா பிள்ளைகளுக்கு பொய் சொல்லாதேன்னு கத்து கொடுக்க போறீங்க 
http://www.vikatan.com/news/article.php?aid=50940

அதை எல்லாம் விடுத்து சுந்தர் பிச்சை இந்த பதவிக்கு வந்ததற்கு மூன்று காரணங்கள்

1.கம்பேனிக்கு லாபம் எதுல கிடைக்குமோ அதில கவனம் செலுத்தினார்
2.திறமையான நிரலாளர்களை (புரோகிராமர்கள்) வேலைக்கு எடுத்தது
3.எதிரிகள் இல்லாமல் இருப்பது


  1. Foremost: he led successful efforts for difficult projects that were core to Google's continued financial success, namely Toolbar and Chrome. Toolbar wasn't an obviously sexy product but it helped defend the presence of Google search on users' computers during a critical period following the revelation of Google's incredible profitability. Chrome extended that mission to improve the user experience of the entire web: keep users on the web and you'll keep them searching on Google.
  2. He recruited, mentored, and retained a great team. Sundar's team of product managers had a reputation as being among the best of the best, similar to the reputation of the software engineers within Search Quality.
  3. He avoided making enemies. Google has politics like any other large company, and Sundar navigated those politics to make his team successful while inflicting the least possible damage on any other team.
நிர்வாகவியல் ரீதியா பார்த்து , இந்த விசயங்கள்ளை வேலையில் இருப்போர் பின்பற்றலாம்

இந்த குவாலிட்டீஸ் தனிபட்ட வாழ்க்கைக்கு பயன் தரும்

ஆனால் ஒரு முதலாளித்துவ நாட்டில் எப்படி பிழைக்கலாம் என்பதை சுந்தர் பிச்சையை பார்த்துதான் கத்துகனும்கிறது இல்லை அதுக்கு நிறைய பேர் இருக்காங்க .

நீங்க வேண்முன்னா சுந்தர் பிச்சையை நினைத்து நினைத்து கசிந்துருகி பெருமை படலாம்

ஆனால் தமிழனும் , தமிழ் இனமும் தலைநிமிர்ந்து நிற்க அவர் என்ன செய்கிறார் அவரது வேலை நேரம் முடிந்தபின் என்பதை பொறுத்துதாம் அவரை பற்றி நாம் பெருமை பட எதாவது இருக்கும்  .

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post