திருப்பூரில் இந்து முன்னனி செய்யும் அராஜகங்கள்

திருப்பூரில் இந்து முன்னனி செய்யும் அராஜகங்கள்


மக்களின் மத உணர்வை நாம் புண்படுத்த கூடாது என்பதில் மிகவும் உறுதியாக  இருக்கவேண்டும் என்பதில் கம்யூனிஸ்டுகளுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை

ஆனால் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் மற்றொரு மதத்தை அவமதித்தல் என்பது  ஒரு கோபத்தில் அடிப்படையில் நடப்பது வாடிக்கை ஆனால் அரசியல் அடிப்படையில் நடந்தால் நாம் அதை தட்டிகேட்காமல் இருக்க இயலாது .

இப்படித்தான் எங்கள் பகுதியில் நல்மேய்ப்பர் மக்கள் வழிபாட்டு சபை என்ற
சர்ச்சை ஒரு கிருத்துவ நண்பர் தொடங்கி நடத்தி வருகிறார்

கடந்த ஞாயிறன்று செருப்பு காலுடன் உள்ளே நுழைந்த இந்துமுன்னனி கட்சிகாரர்கள் அவர்களை தகாத வார்த்தையில் பேசுவதும் கொலை மிரட்டல் விடுவதும் என அட்டூலியம் செய்து விட்டனர்

அந்த சபையின் தலைவரோ அமைதியான முறையில் இதை எதிர்கொண்டார்

நாங்கள் அமைதியாகத்தானே வழிபாடு செய்கிறோம் என்று இவர்கள் சொன்னதற்கு நீ வேளாங்கன்னியில் சென்று வழிபாடு செய்துகொள் என மிரட்டி இருக்கிறார்கள்

இந்த விசயம் எனது காதுகளுக்கு வந்ததும் இந்து முன்னனி அமைப்பாளர்களை சந்தித்து பேசினேன் .

இந்தியா என்ன இவர்கள் அப்பன் வீட்டு சொத்தா ? இந்துக்கள் மட்டும்தான்
வழிபாடு நடத்த வேண்டுமா என்ற கேள்விக்கு மழுப்பலான பதிலே வந்தது

அவர்களது திட்டம் இதுதான் நகரில் எந்த ஒரு சர்ச்சோ சபை நடக்க விடக்கூடாது  என்பதும் இவ்வாறு செய்து வெற்றி பெறும் ஒரு இந்து முன்னனி அமைப்பாளனுக்கு பதவி உயர்வு கிடைக்கும்

மேலும் இந்து முன்னனி போர்ட் ஒன்றை திறக்க அமைப்பு ரூபாய் 20 ஆயிரம்
வழங்கு கிறது என்பதால் ஒவ்வொரு தெருவிலும் இந்து முன்னனி
போர்டுகளை திறந்து வைக்கிறார்கள்

விசயம் இவ்வாறு இருக்க இவர்களது அரசியலை விளக்கியவுடன் சர்ச் கூட்டமைப்பு இந்த விசயத்தில் தலையிட்டு கலைக்டரிடம் மனு கொடுத்துள்னர்

என்ன ஏதென்று தெரியாமல் மக்களும் அதில் சேர்கிறார்கள்
இந்து முன்னனி என்பது இந்துக்களை முன்னனி படுத்தாது என்றும் இந்துக்களை  வைத்து அரசியல் செய்யும் அமைப்பு என்பதையும் மக்களிடம் விளக்கி புரிய வைப்பதில் இடதுசாரிகளிடம் ஒற்றுமையான போக்கு இல்லை

திருப்பூரில் கடந்த சில வாரங்களில் மட்டும் நிறைய சர்ச்சுகளை மூட
சொல்லி இவர்கள் அராஜகம் செய்திருக்கிறார்கள் அனைத்து புகார்களும்
காவல் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது .

திருப்பூரின் தலையாய முக்கிய வேலை இந்துமுன்னனியின் வளர்ச்சியை தடுத்து  நிறுத்துவதே அந்த பணியை செய்ய கரம் சேர்ப்போம் வாரீர்

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post