ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த மக்கள் பேசும் மொழி அவர்களது கலாசாரம் எல்லாமே பல நூற்றாண்டுகளாக ஒரே இடத்தில் பெரிய மாற்றமின்றி இருந்து வருகிறது
ஆனால் தொழில் சார்ந்து உலகம் விரிவடையும்போது கலாசாரம் மொழி மதம் எல்லாமே ஒரு கொடுக்கல் வாங்கலை மேற்கொள்கிறது , மொழி என்பது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைகிறது .இனிமேலும் மொழியும் நாட்டின் எல்லைகளும் மனிதனை பிரித்து வைக்க இயலாது .ஏனெனில் பிரிந்து வாழ்வதற்கான தேவை இல்லை .
எனது மொழி பல நூற்றாண்டுக்கு முன்பே தோன்றியது என்கிற பெருமையை நான் பேசும் போது உனது மொழி தோன்றி பல நூற்றாண்டு ஆகலாம் ஆனால் எனது மொழி உலகம் பூராவும் வேகமாக பரவி விட்டது என சொல்வான் . அதுவும் உண்மைதான் .
ஒரு மொழிக்குள் வேற்று சொல்கள் கலந்து விடுவதை அனுமதிக்க இயலாது என்கின்றனர் ஆனால் யாரும் திட்டமிட்டு செய்வதில்லை . கேட்டு கதவு ,நடு செண்டர் என்று இன்னும் பேசி வருகிறோம் .
மகிழுந்து என்பது பேச்சு வழக்கில் இல்லை என்றாலும் பேருந்து நிலையம் என்பதை எழுதுகிறோம். பஸ் ஸ்டாண்டு என்று சொல்லாதீர்கள் பேருந்து நிலையம் என சொல்லுங்கள் என சட்டம் போடவா முடியும் .
மொழி தூய்மை என்பது சாத்தியமற்றது அதை செய்ய இயலாது . மாறாக மொழியை வளர்க்க முயற்சிகள் செய்யலாம்.
உற்பத்தி பொருட்கள் உலகம் முழுவதும் செல்லும் போது அந்த பொருளை கண்டறிந்தவர்களின் மொழியில் பெயர் வைக்கப்படுகிறது .
உலகம் முழுக்க வேலை தேடி போகும் போது நமக்கு அந்த நாட்டின் மொழி தேவை படுகிறது
ஒரு பாட்டாளி எல்லைகள் கிடையாது
யாதும் ஊரே ! யாவரும் கேளிர் என்ற ஒரே ஒரு வாக்கியம் போதும்.
மொழியை வளர்க்க நினைத்தால் போதும் மொழி கலப்பு என்பது பெரிய விசயமில்லை.
ஒவ்வொரு மனிதனும் சர்வதேசியவாதியாக மாறனும் .சிந்தனை சொல் அனைத்தும் சர்வ தேசத்துக்கும் நன்மை பயக்கும் படி அமைக்கனும
மொழி குறித்த சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு மொழி வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய நினைப்போர் முதலில் தமிழ் மொழியை வளர்க்க தமிழனாக நாம் என்ன செய்தோம் என்று யோசிக்க வேண்டும்
கிராமங்கள் தோறும் தமிழ் சங்கங்களை ஆரம்பித்து தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடலாம்
1.அயல் மொழி நூல்கள் மொழி பெயர்ப்பு
2.புதிய தமிழ் சொற்களை உருவாக்குதல் பரப்புதல்
3.தமிழ் ஆராய்ச்சியை செயல்படுத்த உதவுதல் என திட்டமிட்டு
செயல்படலாம்
உற்பத்திக்கு உற்பத்தி வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லாம மொழி மட்டும்
சுயம்புவாக நிற்க இயலாது . எளிய பாட்டாளி மக்களின் குழந்தைகள்
நல்ல தமிழ் பாண்டித்தியம் பெற்று இருக்கலாம் அதை ஊக்க படுத்த இங்கே
ஆட்கள் இல்லை மாறாக ஆங்கிலத்தில் எடுக்கும் மார்க்கே கணக்கில் கொள்ள படுகிறது
இந்த சூழல் தமிழுக்கு மட்டுமல்ல தமிழனுக்கும் பாதமானது