மழையுடன் பேசவும் வேண்டும்

மழையுடன் பேசவும் வேண்டும்

மிக சன்னமான மழைநாளில் நீங்கள் உங்களுடன் உறவாடிய தற்போது வெறுப்பாக இருக்கும் ஒரு நண்பனை அல்லது தம்பியை அல்லது நண்பியை பற்றி நினைத்துபாத்ததுண்டா ? அப்படி நினைத்து பார்த்தீர்கள் என்றால் அந்த மழை உங்களுக்கு ஆறுதல் சொல்லலாம் .

உலகத்தின் சூதுவாது தெரியாத நபராக நீங்கள் இருக்கிறீர்களோ இல்லையோ
மழை அம்மாதியான ஒரு விசயம்தான் . நல்லவன் கெட்டவன் எல்லாருக்கும்
ஒரே மாதிரி தன் பொழிவை தரும் மழை .

நண்பனை நினைத்து நீங்கள் வருந்தலாம் என்னடா இப்படி இருந்துட்டானே
எப்படி எல்லாம் நினைத்தோம் என்று நினைக்கலாம் ஆனால் அந்த நினைப்பின் பின்னே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அந்த எதிர்பார்ப்புதான் ஒரு உதவி செய்வான் என்றோ , ஒரு ஆதரவு தறுவான் என்றோ குறைந்த பட்சம் மன ஆறுதல் தறுவான் என்றோ நீங்கள் நினைத்திருக்க கூடும் .

உங்கள் முன் பெய்யும் மழைக்கு அந்த எதிர்பாப்புகள் ஏதுமில்லை காற்று மட்டும்அதிகம் வீசவில்லை எனில் அது தனது பொழியை களர் நிலத்தில் கூட வழங்கி விடும் .

மழையுடன் பேசுங்கள் . நீங்களே மழையாகுங்கள் .


என்றாவது நடனமாடி இருக்கிறீர்களா , துக்கத்தில் அல்லது சந்தோசத்தில்
யாராவது ஒருத்தரை சந்தோசத்தில் தழுவி இருக்கீங்களா ? வாய்விட்டு
பாராட்டி இருக்கீங்களா ? நட்பை தேடி தேடி அலைந்து இருக்கிறீர்களா ?

திறந்த மனதுடன் உண்மையை போட்டு உடைத்து பேசுகிறீர்களா?
இவைஎல்லாம் நட்புகொள்ள அல்லது உறவு கொள்ள பெருந்தடைகளாகும்

மழையை போன்று எதிர்பார்பில்லாமல் நட்பில் மூழ்குங்கள் நான் நேசிக்கிறேன்

பதிலாக நீ நேசி அல்லது நேசிக்காமல் போ கவலை இல்லை என பறை சாற்றும் துணிச்சல் நிறைந்தவராக நீங்கள் மழையை கவனிக்க வேண்டும்

மனிதர் சமீபகாலமாக ஒரு நாய்குட்டி அளவுக்கு கூட திரும்ப அன்பு
செலுத்துவதில்லை . இயந்திரமாக மாற ஆரம்பித்ததில் இருந்து
கூலண்டு கூட அவர்களிடம் தீர்ந்து போய் விட்டது .

ஆனால் மழையோ ஒரு பெரிய கூலண்டாகும் .

மழையை நண்பனாக்குங்கள் அதனுடன் பேசி பேசி அதன் அன்பை பெறுங்கள்

நீங்களே மழையாவீர்கள்

எல்லோருக்கும் தூவும் மழை

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post