பழக்கமும் அதன் தொடர்ச்சியும்

பழக்கமும் அதன் தொடர்ச்சியும்


சிலநேரங்களில் பழக்கம்தான் எவ்வளவு நல்லது ஒரு வண்டியை ஓட்ட ,இடதுபுறம் திரும்ப சிக்னல் காண்பிக்க சில வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து பேசிபழக - சில இடங்களில் முகம் முழுக்க பூரித்து பேச அது மார்கெட்டிங் டெக்னிக் என்றாலும் அதை பழகமாக்கி கொள்ளும் விசயம் .

உதவி கேட்டு வரும் நண்பனை கூட இல்லடா காசுன்னு சிரிச்சிட்டே சொல்லி பழகிகொள்ளனும் என்பது எவ்வளவு   கொடுமையானது . அம்மாதிரியே அலுவலக  வாசிலில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளின் அழகான புன்னைகை என்பது ஒரு பழக்கமாகி விடுதல் எத்தனை துன்பமானது.

என்றாவது நாம் நமது பழக்கத்தை குறித்து சிந்திக்கிறோமா ? ஏன் இதை செய்கிறோம் சிந்தித்தா அல்லது வெறும்
பழக்கமா ? இதன் விளைவு என்ன ? என்றெல்லாம் நினைக்க நேரமே இல்லை .

ரணமிக்க அடிமைத்தனமான சொந்த சிந்தனை இருந்தாலும் அதை செயல்படுத்த இயலாத ஒரு இரண்டான் கெட்டான்
வாழ்க்கையே முதலாளித்துவம் நமக்கு வழங்கிய பரிசு .

விஞ்ஞானிகளை கூட விலைக்கு வாங்கிவிடும் இந்த சமூக அமைப்பில் எல்லாமே பழக்கவழக்கத்தில் பொதிக்கப்பட்டு
தரப்படுகிறது.

அப்பாவின் தெய்வம் நமது தெய்வமாகிவிடுவதும் ஒரு பழக்கத்துக்காக நாம் தொடர்வதும் இப்படி பலவிசயங்கள் பழக்கத்தின் தொடர்கதை .

எதையேனும் மறுபரிசீலனை செய்கிறோமா ? நமது நம்பிக்கைகள் நமது நடவடிக்கைகள் நமது லட்சியங்கள்  நமது பின்பற்றல்கள் ஏதுமில்லையே?

பழக்கத்துக்காக வாழ பழகிக்கிறோம் இது மிருக நிலையாகும் தனது தன்னுணர்ச்சியை மட்டும் வைத்து வாழ்வது.

சிந்திக்கும் ஆற்றலை பெற்ற மனிதன் தான் உலகில் பார்த்தவற்றை அவனது சிறப்புவாய்ந்து மூளையில் பதிவிக்கின்றான் அதை வெளிப்படுத்துகிறான் அதை மாற்றுகிறான் இருந்தாலும் அவனும் பழக்கம் என்ற நோயால் பீடிக்கப்பட்டு மீண்டும்  மிருக நிலையிலேயே இருக்கிறான் .


இயக்கத்தையும் மாற்றத்தையும் பற்றி உணர்ந்து கொள்ளும் அவன் -இயங்கா நிலையில் அல்லது ப்ழைய சிந்தனை  நிலையில் நினைவுகள் மற்றும் ஏற்கனவே போட்ட பாதையில் இருந்து மீள வில்லை மேலும் மீளவும் விரும்புவதில்லை .

எதோ ஒரு பிடியில் வாழ பழகி கொள்ளுதல்தான் வாழ்க்கைகான கல்வி என நினைக்கிறான் அதான் தவறு.

உணர்ச்சியை கூட சில பழக்கமாக செய்றோம் - ஒரு சாவு வீட்டுக்கு போனால் கண்ணில் தண்ணீர் வரனும்  என முயற்சி செய்றோம் அல்லது அந்த சூழலுக்கு தகுந்தாற்போல பேசுறோம் -”பாவம் நல்லமனுசன் செத்துட்டாரு”

என்னாச்சு எப்படி செத்தாரு போன்ற ஒரே வசனங்கள்தான் அதில் இருக்கும் - மனம் வெறுமையாகி போகிறது

இங்கே இப்படித்தான் பேசனும் என்ற பழக்கம் , அலுவலகத்தில் இப்படித்தான் பேசனும் என்ற பழக்கம் , ரோட்டில்
எதேனும் நடந்தால் கண்டும் காணாமல் போகனும் என்ற பழக்கம் .


நமது சினிமா - தொலைக்காட்சி முதலியன சில பழக்கங்களை உருவாக்குகின்றன . திருமதி செல்வம் பார்த்துட்டு இருக்கும் பெண்களை பற்றி என்ன பிரச்சனை என நீங்கள் நினைக்கலாம் ஆனால் இந்த தொடர்கள் இயக்கப்படுவதே  விளம்பரங்களை இடையிடையே போட வசதியான ஒரு அமைப்புதான் தொடர்கள் முதலாளித்துவ பண்டங்களை விற்க
விளம்பரம் தேவை படுகிறது . அந்த விளம்பரங்களை தடைபடாமல் அதே நேரத்தில் அனைவரையும் டிவி முன்
உக்கார வைக்கவும் வேண்டும் என்பதற்கான ஒரு வெளியீட்டு அமைப்புதான் தொடர்கள் .

தொடர்களின் கதைகளம் வித்தியாசமாக அமைக்கப்பட்டு ஒரு சீரழிவான சிந்தனை சமூகத்தில் புகுத்தப்படுவது   ஒரு அணுகுண்டை போடுவதை விட மோசமானது என சொன்னால் அது மிகை என நீங்கள் நினைக்கலாம் ஆனால்
அதான் உண்மை .

ஒவ்வொரு அடியிலும் மற்றவர்களை பார்த்து பழகி கொண்டு அந்த பழகத்தின் படி வாழும் மனித சமூகம் தவறான பழகத்தையும் ஏற்று கொள்கிறது சிந்தனை இன்றி .

இம்மாதிரி பழகத்தின் அடிப்படை வாழ்வை தகர்க்க வேண்டுமெனில் நமக்கு மாபெரும் மன ஆற்றல் தேவைப்படுகிறது

அந்த ம்ன ஆற்றலை எங்கிருந்து பெறுவது என்றால் சுயசிந்தனை சுயசோதனை மற்றும் சுதந்திர மனம் மட்டுமே தரும்









2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post