http://writersamas.blogspot.
ஒரு போராட்டம் எந்த இலக்கும் இல்லாமல் இருக்குன்னு இந்த கட்டுரையாளர் தனது கருத்தை திணிக்கிறார் .
ஈழ மக்களின் சுயாதீண உரிமைகளுக்காகவும் , இனபடுகொலையை இனபடுகொலைன்னு சொல்ல வேண்டும் என்றும் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் எவ்வளவு தெளிவாக மாணவர்கள் தங்களது டிமாண்டை வைத்திருக்கிறார்கள் ஆனால் இவர் ஆரம்பிக்கிறார் இப்படி
//ஈழத் தமிழர் நலனை முன்னிறுத்தி தமிழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் உத்வேகம் அளிக்கிறது. அரசியல் ஒரு சாக்கடை; அது நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி, பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறையிடமிருந்து வெளிப்படும் இந்தத் தார்மிகக் கோபமும் தன்னெழுச்சியும் அது வெளிப்படும் அறவழியும் கொண்டாடப்பட வேண்டியவை. ஆனால், ஒரு போராட்டம் என்பது இவ்வளவு மட்டும்தானா? முக்கியமாக, இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்ன? அதாவது, இந்தப் போராட்டம் அடையப்போகும் இலக்கு என்ன?//
எந்த சித்தாந்தமும் தீர்வுதரவில்லை என்பதை சொல்லாமல் சொல்லி அதாவது சித்தாந்த அடிப்படையிலான கட்சிகளால் எந்த முன்னேற்றமும் இல்லை என முன்மொழிந்து மாணவர்கள் தன்னெழுச்சி போராட்டம் ஏற்பட்டுள்ளது இது பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கியதே
//நாம் வாழும் காலத்தின் தன்னிகரற்ற போராளியான இரோம் ஷர்மிளா ஒரு போராட்டத்துக்கான தேவையாக வரையறுப்பது இது: "ஒரு பெரிய போராட்டத்துக்கான தேவை... தீவிரம், உறுதி, சுயநலமற்ற நீடிப்புத்தன்மை, நேர்மையான தொலைநோக்கு."
நான் மேலும் ஒரு விஷயத்தைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்... கள யதார்த்த அடிப்படையிலான சித்தாந்தம்!//
இனபடுகொலையை இனபடுகொலைன்னு சொல்வதற்கு சித்தாந்தம் தேவை இல்லை மனிதனை படுகொலை செய்த ஹிட்லர்களிடம் சித்தாந்தம் பேசவேண்டியதில்லை ராஜபக்சேவிடம் சித்தாந்தம் பேசவேண்டியதில்லை
கண்டிக்கவும் எதிர்ப்பை பதிவு செய்யவும் போராடவும் இங்கே ஆளே இல்லை கடந்த 2009 முதல் அது ஈழத்தில் நடந்த கொடுமையை விட
மோசமானது
என்றைக்கு முதல் குண்டு போலீஸ் ஏட்டுவின் மீது பாய்ந்ததோ அந்த துப்பாக்கியை தூக்கிய புலிபடை வீரன்னுக்கு தனது இலக்கு தனது போராட்டம் 30 ஆண்டுகள் நடக்கும் என்றோ அல்லது தாங்கள் சுதந்திர பிரதேசங்களாக பல்வேறு இடங்களை ஆட்சி செய்வோம் என்றோ தெரிந்திருக்காது அல்லது இலக்கு இருந்திருக்காது
ஆனால் இலக்கை நோக்கித்தான் சென்றார்கள் புலிகள்
//டந்த இரு ஆண்டுகளில் உலகம் சந்தித்த சில முக்கியமான போராட்டங்களையும் அவற்றின் இன்றைய விளைவுகளையும் நாம் நினைவுகூரலாம். துனிஷியாவில் ஸைன் அல் எபிடைன் பென் அலி; எகிப்தில் ஹோஸ்னி முபாரக்; லிபியாவின் மம்மர் கடாபியை எதிர்த்து நடந்த போராட்டங்களை நாம் எவ்வளவோ உத்வேகத்தோடு பார்த்தோம். இன்றைக்கு அங்கு நடப்பது என்ன? அண்ணா ஹஜாரேவுக்குக் கூடிய கூட்டம் இப்போது எங்கே போனது? ஹ்யூகோ சாவேஸின் மரணத்துக்குப் பின் வெனிசுலாவின் எதிர்காலம் என்னவாகும்? இவை எல்லாம் உணர்த்தக் கூடிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு. எதிர்ப்பும் தன்னெழுச்சியும் தனிநபர் ஆளுமையும் மட்டுமே ஒரு போராட்டத்தின் இலக்கை அடையப் போதுமானவை அல்ல. சித்தாந்தம் வேண்டும். கள யதார்த்த அடிப்படையிலான சித்தாந்தம்.//
ஆமாம் அந்த போராட்டங்கள் மழுங்கடிக்கபட்டதன் காரணம் அந்த போராட்ட அளவில் குறைபாடு என்பதை விட மழுங்கடிக்கப்பட்டது என்பதே உண்மை காரணம்
அண்ணா ஹசாரே பின்னால் நின்ற மாணவர்கள் பொதுமக்கள் இன்னும் இருக்கிறார்கள் அண்ணா ஹசாரேவைத்தான் காணோம்
இந்த கட்டுரையாளர் எந்த இடத்தில் தப்பு செய்கிறார்கள் என்றால் அங்கே போராட ஆளே இல்லை இங்கே போராடி என்ன பயன் என்று போராட்டத்தை மழுங்கடிக்கிறார் இதோ
//அரசியல் நெருக்கடிகள். ஈழத் தமிழர்கள் நலனில் நாம் உண்மையாகவே அக்கறை காட்டுகிறோம் என்றால், நாம் பணிகளைத் தொடங்க வேண்டிய இடம் இதுதான். முதலாவது அவர்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள், இரண்டாவது ராணுவமயமாக்கலை உடைப்பதற்கான நடவடிக்கைகள், மூன்றாவது சிங்களமயமாக்கலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்... இந்த வரிசையின் கடைசிக் கட்டத்தில்தான் தமிழீழத்துக்கான நடவடிக்கைகள் அமையலாம். முதலாவதாக அல்ல. அதையும்கூட முன்னெடுப்பது நாமாகவோ, சர்வதேச நாடுகளாகவோ இருக்க முடியாது. ஈழத் தமிழ் மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும். நாம் இப்படி யோசித்துப் பார்ப்போம். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான காலகட்டத்தில் காந்தி, நேரு, நேதாஜி உட்பட அனைத்துத் தலைவர்களும் கொல்லப்படுகின்றனர். போராட்டம் முழுமையாக வெள்ளையரால் ஒடுக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ இந்தியச் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைவது சாத்தியம்தானா?//
அதாவது ஒடுக்கப்பட்டு இனிமேல் போராட இயலாத நிலையில் இருக்கும்
ஈழத்தமிழந்தான் போராடனும் என சொல்வது எவ்வளவு அயோக்கியதனம்
ஜப்பானில் இருந்து ஆட்களை திரட்டி இந்திய நிலைகளின் மீது மோதினார்
சுபாஸ் சந்திர போஸ் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்
யூதர்கள் நாடில்லாமல் இருந்து தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கினார்கள் எப்போது பல ஆண்டுகள் கழித்து அந்த கதையை மறந்துவிட்டார்
முதல் பாராவில் சித்தாந்தம் என ஆரம்பித்தவர் பின்பு ஈழத்தமிழ்ந்தான் போராடனும் என மழுங்கி போய் பிறகு இந்தியாவின் சுதந்திரத்திற்கு வெளிநாட்டில் இருந்து போராடலாமா என கேட்கிறார்
அவரே இந்தியா உட்பட நாடுகள் பல இனபடுகொலைக்கு உதவி செய்தது என்றும் சொல்கிறார் தனக்கு தானே முரண்படுகிறார்
எப்படி எனில் இந்தியா உதவுதுன்னு தெரிஞ்சா இந்தியாவிலதானே போராடனும் பாகிஸ்தானிலா
// தமிழகத்தில் மாணவர்கள் மகத்தான தன்னெழுச்சியுடன் போராடுகிறார்கள். சரி. இந்தப் போராட்டத்தின் தலையாய கோரிக்கைகள் என்னென்ன?
1. இலங்கை நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபக்ஷே தண்டிக்கப்பட வேண்டும்; இதற்கான சர்வதேச விசாரணைக்கு நடத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; தனித்தமிழீழம் வேண்டும்.
இன்னும் இன்னும் ஏராளமான கோரிக்கைகள் இருக்கின்றன... தமிழகத்துக்குத் தனி வெளியுறவுத் துறை வேண்டும் என்பது உட்பட.
அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்துதான் கொன்றார்கள் யாருகிட்ட போய் விசாரணை வைக்க சொல்றீங்கன்னு அபாண்டமான ஒரு குண்டை போடுகிறார்
கூடங்குளம் போராட்டத்தின் பிரச்சனையே இதுதான்
கூடங்குளத்தை தாண்டி இந்த போராட்டம் செல்லவில்லை
மொத்தத்தில் அந்த போராட்டம் குறுகிய வட்டத்துக்குள் முடங்கி விட்டது
ஆனால் அதை சரி என்றும் ஈழ விடுதலை என்பது இன்று சர்வதேச பிரச்சனையாகி தமிழ்நாட்டில் அதற்கான போராட்டம் நடப்பது தவறு என்றும் வாதிடுகிறார் . இதான் இவருக்கு சித்தாந்தம் தெரியவில்லை என்று அர்த்தம் . ஈழ மக்களுக்கு போராட்டத்துக்கு தேவை இருக்கிறது
அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை மாறாக அவர்களுக்கு
தேவை இன்று ஒரு வேளை உணவுன்னு சொல்லி தமிழ் தேசிய பிரச்சனையை சோத்து பிரச்சனையாக்க முயல்கிறார்
//ஒரு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், எந்த மக்களுக்காக அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த மக்களின் அன்றாட வாழ்வில் அந்தப் போராட்டத்துக்கான நெருக்கடியும் தேவையும் இருக்க வேண்டும். போராட்டத்தின் தேவை - தீர்வு குறித்த தெளிவு அந்த மக்களிடத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். முக்கியமாக, சம்பந்தப்பட்ட மக்களின் கையில் அந்தப் போராட்டம் இருக்க வேண்டும். சமகாலத்தில், இதற்குச் சரியான உதாரணம்... கூடங்குளம் மக்களின் போரட்டம். கூடங்குளப் போராட்டத்தில் பங்கேற்கும் ஒரு பள்ளிச் சிறுமியிடம் கேட்டுப்பாருங்கள்... தான் எதற்காகப் போராடுகிறாள், தன்னுடைய கோரிக்கைகள் என்ன, அவற்றின் சாத்தியம் என்ன, இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்ன, தான் செல்ல வேண்டிய தொலைவு என்ன என்கிற ஒவ்வொரு கேள்விக்கும் பதில் வைத்திருப்பாள். இந்தியா எல்லா அணு உலைகளையும் மூட வேண்டும்; உலகம் அணு சக்திக்கு விடை கொடுக்க வேண்டும். இது கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் கடைசி வரிசையில் இருக்கக் கூடிய கோரிக்கை. அப்படி என்றால், முதல் வரிசையில் இருக்கும் கோரிக்கைகள் என்ன? அதாவது, எதிர்த் தரப்பை ஓரளவுக்கேனும் அசைந்து கொடுக்கவைக்கும் முதல்கட்ட கோரிக்கைகள் என்ன? கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும்; மூடும் வரை எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்; தற்காப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். இதுதான் கள யதார்த்த அடிப்படையிலான போராட்டம். இந்த அணுகுமுறையுடன் ஒத்துப்போகும் சித்தாந்தமும் நீடித்தத்தன்மையும் சேரும்போது காலம் அதற்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.//
அடுத்தகட்டமாக புலிகளையும் அல்கொய்தாவையும் ஒப்பிட்டு மழுங்கடிப்பு செய்கிறார்
//இந்தியாவில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ஈழப் போரின் தோல்வி ஒரு பெரும் குற்றவுணர்வை உருவாக்கி இருக்கிறது. இயலாமையும் அரசியல் கையாலாகாததன்மையும் சேர்த்து உருவாக்கிய குற்றவுணர்வு அது. வெறுமனே ஒழிக கோஷம் போடுவதால் மட்டும் அந்தக் குற்றவுணர்விலிருந்து நாம் வெளிப்பட்டுவிட முடியாது. இன்னும் ஒருபடி மேலே போய் தமிழகம் வரும் சிங்களர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சூழலை மேலும் நாசப்படுத்தக் கூடியவை. இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த நேரம். நாசகார ஆயுதங்கள் சூழ பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருந்த சூழலில், கொழும்பில் தங்களுடைய இறுதி வான் தாக்குதலை நடத்தினர் விடுதலைப் புலிகள். அல்-கொய்தாவின் நியூயார்க் வான் தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் அது. //
அல்கொய்தாவை முன்னிருத்து என்றுமே புலிகள் போராடவில்லை எல்லா போராட்டமும் வடிவம் செயல் எல்லாம் புலிகளே வகுத்தனர் .
கடைசியாக நான் சொல்வது இதுதான் உலகை பற்றிய வியாக்கியானம் செய்வதை விட உலகை மாற்றுவதே சிறந்த சித்தாந்தம் மேற்படி கட்டுரையாளர் செய்திருப்பது உலகை வியாக்கியானம் செய்வது
மாணவர்கள் செய்வது இரண்டாவது