ஆதிக்க சக்திகளை தோலுரிக்க போராட்டமே தீர்வு

ஆதிக்க சக்திகளை தோலுரிக்க போராட்டமே தீர்வு


தண்ணீர் பிரச்சனை என்பது நீண்ட நாள்களாகவே எங்கள் பகுதியின்
பிரச்சனையாகும் இதற்காக பஞ்சாயத்து போர்ட் தலைவரை அனுகுவதும்
அவர் வந்து அந்த சமயத்தில் எதோ பேசுவதும் பிறகு தண்ணீர் பிரச்சனை
தொடர்வதுமாக இருந்தது. (சுமார் 500 குடும்பங்கள் வாழும் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும் இது)


இதில் தன்ணீர் திறந்து விடும் நபர் கட்டிட வேலைகளின்

காண்டிராக்டராகவும் இருப்பது தெரியவந்ததும் அவர் பொது மக்களுக்கு

வரும் குடிநீரை கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்துவதும் மக்களுக்கு

தெரியவந்ததும் என்னிடம் தெரிவித்தனர் .

நானும் அந்த பகுதியின் பெண்களும் கோரிக்கையை ஊர் பஞ்சாயத்து

தலைவரின் வீட்டு சென்று தெரிவித்து விட்டு மறியல் செய்யலாம் என
கருதி அதற்கான ஏற்பாடுகளை செய்ததும் .

பத்திரிக்கைகாரர் மூலம் தகவல் அறிந்து அந்த பகுதியின் போலிஸ் மற்றும்
உளவுபிரிவு மற்றும் தலைவர் அவரது தேமுதிக அடிபொடிகள் வந்துவிட்டனர் .

மக்களின் மைய்ய கோரிக்கையை பற்றி தேமுதிக பஞ்சாயத்து தலைவர்பேசுவதை விடுத்து ஏன் பத்திரிக்கைக்கு தகவல் தந்தீர்கள் என்று
மிரட்டுவதிலும் - உப்பு சப்பற்ற காரணத்தை சொல்வதிலும் தீர்மானமாக
இருந்தார் .

போலீஸ் அதிகாரிகளோ மறியல் செய்தால் 5 பேர் மீதாவது FIR பதிவு

செய்வோமென மிரட்டவும் உள்ளூர் உட்கட்சி காரர்கள் யார் மீடியாவை
வரவழைத்தார்கள் என மிரட்டவும் மக்கள் அரசவில்லை

தண்ணீரை திருடி கட்டிடம் கட்டுப்வனை கண்டுபிடி கைது செய் !
என்றும்

தண்ணீர் கிடைக்கவில்லை எனில் போராடுவோம் என்றும் உறுதியாக
பதிலளித்தனர்

இன்னும் ஒரு வாரத்தில் வேண்டிய ஏற்பாடுகளை செய்கிறேன் மேலும்
தானே இரண்டு நாட்கள் தண்ணீர் திறந்து விடுகிறேன் என பஞ்சாயத்து
போலீசார் முன்பும் மக்கள் முன்பும் சத்தியம் செய்யாத குறையாக
சொன்னதும்தான் அந்த 500 குடும்பமும் தனது போராட்டத்தை விலக்கி
கொண்டது

1.தற்போது இருக்கும் ஓட்டு கட்சிகள் ஓட்டு சேகரிக்கவும் பதவிக்கு வரவுமே பயன்படும் என்பதையும்
2.மக்களின் பிரச்சனைகளுக்கு மக்களே போராட வேண்டும் என்பதையும்

மக்கள் இந்த போராட்டத்தின் மூலம் புரிந்து கொண்டனர்

இந்த விசயங்களை எத்தனை கட்டுரைகள் எழுதினாலும் மக்களுக்கு புரியவைக்க முடியாது

மார்க்சியம் என்பது நடைமுறை ரீதியான போராட்டங்களின் மூலம்
புரியவைக்க முடியும் என இளம் தோழர்களுக்கு சொன்னேன் .

இந்த போராட்டங்களின் பின்னால் இருந்து உதவி செய்த மக இக தோழர்களுக்கும் நன்றி

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post