இந்தியாவில் கிழட்டு தலைவர்களால் ஆளப்படும் மில்லியன் கணக்கான
இளைஞர்கள் இருக்கிறார்கள் என பகர்கிறது ஒரு புள்ளி விபரம் 600
மில்லியன் இளைஞர்கள் இருக்கிறார்களால் ஒரு சில பல்லுபோன பெரிய
தலைவர்கள் தாம் இருக்கிறார்கள் .
மொத்த சனத்தொகையில் 70 சதமானம் 40 வயசுக்கு உட்பட்டவர்கள்
சரி இந்த தாத்தாக்கள் எல்லாம் corupted ஊழல் மலிந்து விட்டார்கள்
ஆனால் பதவியில் உக்கார்ந்துட்டு இடத்தையும் காலி செய்ய மறுக்கிறார்கள்
எனவே நமது காளைகள் ரசிகர் சங்கம் வெட்டி அரட்டைக்கு
போய்விட்டார்கள்னு நினைக்கிறீங்களா அதான் இல்லை .
இரண்டு முக்கிய நிகழ்வுகளில் இந்தியாவின் இளைஞர் எழுச்சி என்பது
தெரியவந்தது ஒன்று ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம்
இன்னொன்று பாலியன் வன்கொடுமைக்கு எதிரான மாணவர்களின்
போராட்டம் .
போராட்டம் வெற்றி தோல்வியை வைத்து எந்த போராட்டத்தை அளக்க
முடியாது போராட்டத்தின் வெற்றி என்பதே அந்த போராட்டம்தான் .
வெற்றி என்பது பல தொடர் போராட்டங்கள் தத்துவ புரிதல் ஆகியவற்றின்
உடன் விளைவாக ஏற்படும் .
இந்த இளைஞர் கூட்டம் நமது சமூக அரசியல் நிகழ்வுகளின் மீது மகத்தான
கசப்புணர்வு கொண்டுள்ளது என்பதும் அது தற்போதைய புதிய தொழில்
நுட்பங்களான பேஸ் புக் , டிவிட்டர் போன்ற சமூக இணையத்தளங்களை
பயன்படுத்தி விவாதித்து வருகிறது என்பதும் .
பல அருமையான சமூக சிந்தனை உடைய இளைஞர் கூட்டம் சமூகத்துக்கு
வழிகாட்டவும் போராட தயாராக இருக்கிறது என்பது இந்த கிழட்டு தாத்தா
தலைவர்களுக்கு தெரியுமா தெரியாதான்னு தெரியலை .ஆனால் அவர்கள்
தமது பதவிகளை விட்டடுதரவும் தயாராக இல்லை .
குவாகாட்டியில் ஒரு பெண் மானபங்க படுத்தபட்ட போது பெண்களுக்கான
தேசிய ஆணையத்தின் தலைவி அறிக்கை விடுகிறார் “நீங்கள் எப்படி ஆடை
அணிகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள் என்று “ இளம் பெண்களை
பார்த்து கூறுவதன் பின்னனி அவரது காலத்திய ஆடை என்பது
தற்போதைய தலைமுறைக்கு பயன்படாது என்பதும் மேலும் ஆடை
விசயத்தில் சமூகத்தில் கருத்துக்கு இளைஞர்கள் மதிப்பளிக்க தயாராக
இல்லை என்பதும் மேலும் ஆடையை காரணம் காட்டி நடத்தப்படும் எந்த
பாலியல் குற்றத்தையும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பதும் இந்த பழைய
காலத்து மண்டைகளுக்கு ஏறுவதில்லை மேலும் பெண்கள் மீதான
பாலியல் வன்கொடுமைகளை தடுக்க எந்த கையாலாகும் நடவடிக்கையும்
எடுக்க முடியாத இந்த ஓட்டு தலைவர்களை இளைஞர்கள் நிராகரிக்கிறார்கள்
.
இந்தியாவின் முதலாளித்துவம் : (ஒரு வரலாற்று பின்நோக்கு)
நாம் எந்த ஒரு நாட்டின் எந்த ஒரு சமூக நிகழ்வையும் அதன் வரலாற்று
கட்டத்துக்குள் வைத்து பார்க்காமல் ஒரு அடி கூட நகர முடியாது
மேலை நாடுகளில் முதலாளித்துவம் வளரும் போது அதுநிலபிரபுத்துவத்துடன் வர்க்க பகைமை கொண்டு வளர்ந்ததுநிலபிரபுத்துவத்தின் அழுக்குகளை களைந்து எறிந்தது.
இந்தியாவில் நிலபிரப்புத்துவ பொருளாதார அமைப்பு மாறினாலும் அதன்
கலாசார அமைப்பு அப்படியே நீடிக்கிறது மேலும் நிலபிரபுத்துவதின்
தீமையான பண்புகள் சாதி, இந்து மத கருத்துருக்கள் ஆகியவை அப்படியே
தங்கி போயின
சுதந்திர போராட்டத்தின் போதும் அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர்களின் வழிகாட்டுதல் முதலில் சமூக சீரமைப்பு பின்புதான் இந்தியவிடுதலை என்றே முழங்கினர் என்றால் சமூகத்தின் கருத்து சீரழிவு
எந்தளவுக்கு இருந்தது என்பதை உணரலாம்.
இந்திய முதலாளித்துவம் பிரிட்டீசாரால் போற்றி வளர்க்கபட்டது அதுசவலை குழந்தையாகவே வளர்ந்தது .
அடுத்து வந்த காங்கிரஸ் அரசு நேரு தலைமையில் சோசலிச ஜனநாயகம்
என்பது வார்த்தை அளவிலேயே இந்திய அரசாங்க பதிவேடுகளில் இருந்தது
சோசலிசம் - சனநாயகம் என்றால் என்ன எப்படி அடைய போகிறோம்
என்பதெல்லாம் வீணானா கேள்விகளாகவும் வெறும் மேடைப்பேச்சுக்கும்
பயன்படுத்தபட்டன
விளைவு ஒரு அரசாங்க அதிகார மையம் , வங்கிகள் , ஆஸ்பத்திரிகள் ,
சில நிறுவனங்களின் அரசுடைமையே சோசலிசம் என நம்பபட்டது
இந்த அமைப்பு மேலும் மேலும் மக்களிடம் இருந்து தனிமை பட்டு போன
ஒரு அமைப்பாக அமைந்து விட்டது என்பதே இயற்கையான அதன்
வழிபோக்காகும்
இன்றைய இந்தியா - வளர்ச்சியடையாத சவலை பிள்ளை
------------------------------------
இந்த நிலைமையில் தான் இந்தியாவில் 1991 க்கு பிறகு வந்ததாராளமயம் தனியார்மயத்தின் விளைவாக ஏற்பட்ட குறுகிய காலமுதலாளித்துவ வளர்ச்சியின் மூலம் வேலை வாய்ப்பை பெற்றஇளைஞர்களும் இளம் பெண்களும் தங்களது சுதந்திர உணர்வு எதற்கும்மேலானதென்று கருத தொடங்கினர் .
மேலும் சமூக அளவில் நடக்கும் லஞ்ச ஊழலை வெகு கசப்பானபார்வையுடனும் , அதிகார வர்க்கத்தின் மீது நம்பிக்கை யற்ற
போக்குடனும் நோக்கும் இவர்கள் தனிநபர் வாதத்தை பின்பற்றினாலும்
சில இடங்களில் அதிகாரவர்க்க இந்தியாவை ஆட்டி படைக்கும் விதமான
போராட்டங்களை செய்கிறார்கள்
இணையத்தின் பங்கு
-----------------இணையத்தின் மூலம் தங்களுக்குள் தொடர்புபடுத்திக்கொள்ளும்இளைஞர்கள் வேறு வழியே இன்றி சமூக பிரச்சனைகளை பேசதலைபடுகிறார்கள் அதற்கு சமூக வலைதளங்கள் பெருதும் உதவின ஒரு பெண் மிக கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட போது அனைத்து மாணவர்களும் திரண்டது இந்தியாவில் வரலாறு காணாத ஒரு நிகழ்வாகும் அதே போல் லஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டமும் வரலாறு காணாத நிகழ்வாகும்
திசைவழி சரியா?
-------------
ஒரு முக்கிய நிகழ்வின் போது மட்டும் இளைஞர்கள் தெருக்களை ஸ்தம்பிக்க
வைத்தல் பின்பு தங்களது அன்றாட பணியை பார்க்க சென்று விடுதல் என்பது விசயங்களின் மீதான எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது
வால் ஸ்டீரிட் போராட்டமாகட்டும் டெல்லி போராட்டமாகட்டும்
எதையேனும் செய்ய வேண்டும் என்றால் ஒரு நிரந்தரமான அரசியல் பாதை
வகுக்கப்பட்டு திட்ட மிட்ட போராட்டங்கள் நடத்தபடவேண்டும் .
தலைமுறை இடைவெளி:
கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன விசயமான தலைமுறை இடைவெளி என்பது இந்த விசயங்களை அறிந்து கொள்வதிலும் வழிநடத்துவதிலும் பெரும் இடைஞ்சலாக இருப்பினும் அவற்றை வெல்ல நமக்கு தேவை ஒரு சிறந்த அரசியல் சிந்தனை கருவி அது மார்க்சியமாக இருக்கலாம் என்பதே எனது கருத்து .