சேவையும் போராட்டமும்

ஒரு பெண்பாதிக்கப்படுகிறாள் என்றால் உடனடி தேவை நிவாரணம் அது தனிமனித பாற்பட்டதும் எல்லைக்கு உட்பட்டதும் ஆகும் .


அந்த பெண் ஏன் பாதிக்கப்பட்டால் சமூகத்தில் பெண்களின் பாத்திரம் ஏன்
இவ்வளவு ஒடுக்குமுறை உள்ளதாக இருக்கிறது அதற்கு என்ன செய்யலாம்
என சமூக அளவில் சிந்திக்கும் போது சேவை என்பது போதாது என்று
அறிந்து கொள்ள இயலும்

ஏனெனில் சமூகத்தில் எத்தனை பெண்களை நீங்கள் ஓடி சென்று காப்பாத்த முடியும்  .  இங்கே பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஒன்றை எடுத்து கொள்வோம்

ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் மீது பாலியன் வன்முறை ஆசிட் வீச்சு
இதெல்லாம் நடக்கும்போது அந்த பெண்ணுக்கு ஒரு 1 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டால் அது நிவாரணம் ஆனால் பெண்களுக்கு எதிரான
வன்முறைகளுக்கு ஒட்டு மொத்த சமூகத்தை தட்டி எழுப்பி போராட வைத்தால் அதுதான் தீர்வு

நிவாரணம் வேற தீர்வு வேற


ஆனால் பிரச்சனையை எப்போதுமே நாம் தனிநபர் ரீதியாக பாக்கிறோம்
என்பதுதான் பிரச்சனை

பிரச்சனை என்பது தனிநபர் ரீதியாக இருந்தாலும் அதன் வேர் சமூக பிற்போக்கு கண்ணோட்டத்துடன் தொடர்புடையது

அன்னை தெரேசா போன்ற சேவைக்காரர்கள் சமூகத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள் ஆனால் சேகுவேரா காந்தி போன்றவர்கள் இன்னும் அதிகமாக கொடுமை கண்டு பொங்கி போராட சொன்னார்கள் மேலும் அந்த போராட்டத்தில் வெற்றியும் பெற்றார்கள்

பெண் ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறை என்பதும்தான் இந்தியாவின் மிகப்பெரிய சீர்கேட்டுக்கு காரணம் என சொல்லி இருக்கிறார்
விவேகானந்தர் .

கிராமங்களில் கூட கற்பழிச்சவனுக்கு பெண்ணை கட்டிவை என்கிற வழக்கம் இருக்கி இதெல்லாம் மிகப்பெரிய பெண் ஒடுக்குமுறை இல்லையா

இவற்றை எப்படி எதிர்கொள்வது எப்படி போராடுவது என பெண்களுக்கு கற்று கொடுக்கனும் அடுத்து போராடும் தைரியத்தை கொடுக்கனும்

இதெற்கெல்லாம் நாடுதழுவிய இயக்கங்கள் தேவை

நமது வேலைகள் ஒழிஞ்ச நேரத்தில் இதை பற்றி பேசுவது சரியல்ல

நாட்டின் அவசர அவசியமான சில போராட்ட வடிவங்களும் சில விழிப்புணர்வு இயங்கங்களும் ஏற்பட வேண்டும்


தெரு நாடகங்கள்  , பிர்சார இயக்கங்கள் , துண்டு பிரசுரங்கள் , பெண்கள் நிறுவனங்களில் கலந்துரையாடல்கள் என மிக மெதுவாக ஆரம்பித்து அதன் வளர்ச்சி போக்கில் தேவைபட்டால் போராட்டங்கள் செய்யப்பட வேண்டும்

போராட்டத்தை மேலிருந்து திணிக்காமல் அதன் வளர்ச்சி போக்கில் வரவேண்டும்

இங்கே போராட்டங்களும் மாப்பிள்ளை ஊர்வலங்களை போன்று ஆகிவிட்டன  உணர்வு பூர்வமான போராட்டங்கள் இல்லை

ஒரு சமூக இயக்கம் நடந்தால்தான் உணர்வு பூர்வமான போராட்டங்கள் ஏற்படும்

அடுத்து சேவை என்பது சமூக உணர்வை போராட்ட உணர்வை மழுங்கடிக்கிறது எப்படி எனில் ஒரு நபர் பாதிக்கபட்டால் நம்மால் முடிந்ததை கொடுத்து விட்டு அதை மறந்து விடுவது ஒருவகை தப்பித்தல்தான்

ஆக சேவை என்பது தேவை ஆனால் அதுவே இறுதியானதும் முடிவானதும் அல்ல.

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post