முகநூல் தேவையா
எனக்கு நெருங்கிய உறவுமுறைதான் அவர் புதிதாக வாங்கிய
செல்லில்
இணைய வசதி இருந்ததும் அதை தோண்டி துருவி பேஸ் புக்
அக்கவுண்டு உருவாக்கி
கொண்டார் பிறகு எனது முக நூல் விலாசத்தை கேட்டு தெரிந்து
கொண்டார் பிறகு ஆரம்பித்து விட்டது காலை மாலை
வணக்கங்கள் சில
புகைப்படங்களை பகிர்வது என்பதை போன்ற விசயங்கள் இணையத்தில் நீண்ட
நாட்களாக இருப்பதால் எனக்கு பெரியவிசயமாக
தெரியவில்லை . ஆனால் அவருக்கோ அது புதிது “hi your
comment is nice " hi you are
looking cute "என்கிற விதமான கமெண்டுகள் ஒரு சிலருக்கு
வானத்தில் தூக்கி வைத்தது போல எண்ண தோன்றும் .
மேற்கண்ட எனது உறவினரை போலத்தான் நிறைய பேர்
இருக்கிறார்கள் வாழ்க்கையை எதார்த்தத்தில் அல்லாமல் இணையத்தில் தேட
முயல்கிறார்கள்.
ஏனெனில் எதார்த்தவாழ்க்கை எல்லைக்குட்பட்ட்து , மேலும்
conditioned
ஆனால் இணைய வாழ்வு அப்படி அல்லது எல்லைக்கு அப்பால்
பட்ட்து மேலும் வரையறை இல்லாதது .பேஸ்புக் என்பது ஒரு வலைதளம் அதை நாம்
ஆக்கபூர்வமான காரியத்துக்கும் பயன்படுத்தலாம் அழிவுக்கு , கிரிமினல் வேலைக்கும்
பயன்படுத்தலாம் .
அது ஒரு கருவி மட்டுமே கருவியை பயன்படுத்துவது நமது
பகுத்தறிவுக்கு உட்பட்டது இப்போ பிரச்சனை கருவியா நமது பகுத்தறிவா ?
சமூக அக்கறை இல்லாத தனிநபராக நாம் வாழ்வதால் ஏற்படும்
பிரச்சனையை சமூகத்தை இணைக்கும் கருவிமேல்
தூக்கி போட இயலாது .
பேனா நட்பு என 80 களில் நண்பர்கள் கடிதம் எழுதி
நட்பானார்கள் அப்போதும்
பேனா நட்பு போலியானது என்ற விமர்சனம் வந்தது .தற்போது
இணைய நட்பு பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கிறது.
இணையத்தின் மூலம் நட்பான ஒரு பெண்ணை வன்புணர்ச்சி
செய்திருக்கிறார்கள் இரு நபர்கள்.
இந்த பேஸ்புக் இல்லாவிட்டால் இந்த பெண்ணுக்கு இந்த
கதி நேர்ந்திருக்காதே என்கிற வாதம் சரியா ?
ஒரு வகையில் சரி இன்னொரு வகையில் அது தவறு சரி என்பது மேலோட்டமான பார்வை இந்த
பார்வை தான் பெண்களை ஒடுக்கும் கருத்துக்கள் எல்லாவற்றிலும் ஒழிந்திருப்பது .
ஒரு பெண் வேலைக்கு போன இட்த்தில்
ஏமாற்ற பட்டால் அதான் பெண்களே வேலைக்கு செல்ல கூடாதுன்னு சொல்வது போன்றது
அது.
பிரச்சனையின் அடி ஆழம் சமூகத்தின் மனப்பான்மையில் இருக்கிறது .எந்தளவுக்கு
தனிநபர்ரும் அவனது இன்பமும் மட்டுமே முக்கியம் என்கிற நிலை வருகிறதோ அந்தளவு அந்த
தனிநபர் சமூக ஒழுங்கில் இருந்து விலகி போகிறான் ரகசியமாக . தனது ஆழ்மன ஆசைகளை
நிறைவேற்ற பல்வேறு வழிகளை கையால்கிறான் .
அதென்ன தனிநபர் வாதம் அது எங்கிருந்து வந்த்து என்கிற கேள்விகளை கேளுங்கள் –
அதை மாற்ற என்ன செய்ய வேண்டும் என சிந்தியுங்கள்