கம்யூனிஸ்டாய் இரு கயவனாய் இராதே



கொடுமை எங்கு கண்டாலும் பொங்கவேண்டும்


உலகில் எங்காவது ஒரு மூலையில் அநியாயம் நிகழ்ந்தால் அதை கண்டு உன் ரத்தம் கொதித்தால் வா நீயும் நானும் தோழர்கள் என்பார் சேகுவேரா

நாம் அனைவரும் சே தான் கொடுமை கண்டு பொங்கும் விசயத்தில்





இதோ போராட்ட காட்சிகள் 




ஆனால் இந்தமாதிரி எழுதி வெறுப்பேற்றாதீர்கள் :

-----------------------------------------------------
"
மெழுகுவத்தி வெண்ணைகள்"

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சாமியாடிய மடையர்கள் கூட்டம், ஊழலுக்கு எதிராக சாமியாடும் மெழுகுவர்த்தி ஏற்றும் கூட்டம் போன்ற கெக்க பிக்க கூட்டத்தில் இப்போது புதிதாக பெண்களுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபடும் டெல்லி கூட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கூட்டம் செய்கிற அளப்பரைகளைப் (ஓடுகிற காரை கவிழ்த்து உடைத்தல், காவலர்களைத் தாக்குதல், கூட்டமாக குய்யோ முறையோ என்று கத்துதல், வாய்க்கு வந்தபடி சட்டம் பேசுதல், தூக்கில் போடு, கொல்லு, குத்து, அடி, உதை என்று ஊளையிடுதல்) பார்த்தால் எரிச்சலாய் இருக்கிறது.

ஒரு மலை வாழ்ப் பழங்குடிப் பெண்ணை ஆடைகளின்றி ஓட ஓடத் தெருக்களில் விரட்டி சாமியாடிய மனிதத் தன்மை அற்ற காட்டுமிராண்டிகளுக்கு எதிராக எந்த ஊடகமும் இப்படி ஊளையிடவில்லை, எந்த முட்டாள் டெல்லி மாணவனும் வகுப்புகளைப் புறக்கணிக்கவில்லை.

காலம் காலமாய் ஆதிக்க சாதி வெறியர்களால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட எந்த ஒடுக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராகவும், எளிய உழைக்கும் வர்க்கப் பெண்களுக்காகவும் இந்த மேதாவிகள் குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகை இட்டதே இல்லை. சென்ற மாதத்தில் ஹிசார் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தலித் பெண்ணுக்கு ஆதரவாக உள்ளூர் கல்லூரிப் பெண்கள் கூடக் குரல் எழுப்பவில்லை.

இதே மாதத்தில் பீகார் சாகர்ஷா மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்குப் பிறகு கொலை செய்யப்பட்ட எட்டு வயது தலித் சிறுமிக்கு ஆதரவாக ஒரு மானங்கெட்ட ஊடகமும் ஊளையிடவில்லை, ஹரியானாவின் கைத்தல் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட "கர்ப்பிணிப்" பெண்ணின் அழுகுரலை எந்த ஊடகமும் ஒளிபரப்பவில்லை.

எந்த மருத்துவரும் நேரலையில் அவருடைய உடல் நலம் குறித்து அறிக்கைகளை வெளியிடவில்லை, கோஸ்வாமிகள், அம்மாமிகள், கரன் தப்பார்கள் யாரும் ஊடகங்களில் ஒப்பாரி இடவில்லை, சுஸ்மா சுவராஜ்கள் யாரும் மறந்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி முடக்கி விடவில்லை, எந்த பச்சனும் ஆவேசப்பட்டு அழவில்லை.

ஊரகப் பகுதிப் பெண்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண்களும் எக்கேடோ கெட்டுப் போகட்டும் இந்த தேசத்தில், ஊடக வெளிச்சம் பரவக்கூடிய இடங்களில் வாழும் மேட்டுக் குடிப் பெண்களின் மீது கை வைப்பவர்களை உடனே தூக்கில் போட வேண்டும்.

எனது சொந்த மண்ணின் இறந்து போன பிஞ்சுக் குழந்தை கூடப் பெண் தானடா அயோக்கியர்களே, டெல்லிப் பெண்ணுக்காக நாடாளுமன்றத்தை முடக்குகிற மானஸ்தர்களே, தினந்தோறும் இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகவும் போராடப் பழகிக் கொள்ளுங்கள்.

இன்றைக்குக் காட்டுகிற வெறியையும், வேகத்தையும் அல்லது அதில் ஒரு பத்து விழுக்காடாவது ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக நீங்கள் காட்டியிருப்பீர்களேயானால் எத்தனையோ பெண்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் இந்த தேசத்தில்.

உங்கள் வீட்டுக்கு அருகில் வாழுகிற தலித் ஊராட்சி மன்றத் தலைவியின் மீது ஆசிட் வீசுகிற அயோக்கியர்களைக் கூட ஆராதனை செய்கிற மங்குனி மனிதர்கள் தானே நீங்கள்!!! உங்கள் தெருவில் கட்டி வைத்து நிர்வாணப்படுத்தப்படுகிற ஒடுக்கப்பட்ட பெண்களின் உடல் மீது வன்மத்தை வாரி இறைக்கும் மிருகங்கள் தானே நீங்கள்!!!

வரிசையா நீங்க நடத்துற போராட்டங்களை எல்லாம் பாக்கும் போது வடிவேலு அண்ணன் சொல்ற மாதிரி "கெளம்பீட்டாங்கையா, கெளம்பீட்டாங்கையா" என்று சிரிக்கத் தான் தோணுது. குற்றவாளிகளைப் பிடித்தாயிற்று, அவர்களை அடையாளமும் கண்டாயிற்று, பாதிக்கப்பட்ட பெண்ணும் நலமடைந்து வருகிறார்.

இப்ப எதுக்கு ரோட்டுல வந்து கரகாட்டம் ஆடுறிய???? உங்களால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் காவலர் சுபாஸ் தொமருக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்களே, அவர்களின் கண்ணீர் என்ன கிளிசரின் போட்டாடா வழிகிறது, மாக்கான்களா!!!

டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்ட பெண் விரைவில் நலம் பெறட்டும், குற்றவாளிகள் அதிகபட்ச தண்டனையை அடைவதற்கு அரசுகள் நடவடிக்கை எடுக்கட்டும், கூடவே "இந்த மெழுகு வத்தி வெண்ணைகளையும் நாலு சாத்து சாத்தி உள்ள தூக்கிப் போடுங்க யுவர் ஆனர்"

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post