ஒரு உலக மகா பிரச்சனை குறித்து -நித்தியானந்தா

ஒரு உலக மகா பிரச்சனை குறித்து

நித்தியானந்தா என்ற ஒரு போலி சாமியார் மதுரை ஆதினத்தால் ஆதரிக்கப்பட்டமை  பரவலான விவாதத்துக்கும் உள்ளாகி இருக்கிறது ஆனால் இது நமது தலைக்கு மேல் இருக்கும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதுவது மிகவும் அபத்தமானது என கருதுகிறேன் .

ஏனெனில் இந்த மதுரை ஆதினத்தின் மேல்
இவர் இளவலாக இருந்தபோது பெரிய ஆதினத்தின் சாப்பாட்டில் விசம் வைத்து கொல்ல முயன்றார் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது (கிட்ட தட்ட நித்தி மேல்இருக்கும் குற்றசாட்டுக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை இது)

பாலும் விசமும் :
----------------
மதுரை ஆதினம் திருவாடுதுறை ஆதினம் மற்றும் வடக்கே ஜீயர் மடங்கள் எல்லாம் குறிப்பிட்ட சாதியினரின் சொத்துக்களை பாதுகாக்கவும் வழிவழியாக ஏற்படுத்தபட்டவை மற்றபடி ஆன்மிக தொண்டு என்பது எல்லாம் மேலோட்டமான ஒரு எஜெண்டா மட்டுமே.

சாதி அமைப்பின் மிக கெட்டி பட்ட வடிவ முகமையாக இந்த ஆதினங்கள் இருப்பதால்
ஆறுமுக சாமி போன்றோரின் போராட்டங்களை கண்டும் காணாதது போல இருந்தார்
மதுரை ஆதினம் .

சமயத்தொண்டும் மக்கள் தொண்டுமே உயிர் மூச்சாக கொண்டு வாழும் மகான்களை
கொண்டதில்லை இந்த மடங்கள் இவைகள் சொத்துகளை பாதுகாக்க எல்லா தெள்ளவாரித்தனமும் செய்யும் மிக சிறிய புத்தி மனிதர்களை தலைவர்களாக
கொண்டவையே ஆகவே இந்த புதிய உறவு பாலுடன் விசம் கலந்ததாக கொள்ள
இயலாது

காமமும் கடவுளும் துறவும்:
----------------------
மதம் மக்களை மயக்கும் அபினி என்றார் மார்க்ஸ் மதத்துடைய தூதர்கள் மட்டும்
மக்களை மயகத்தில் இருந்து தெளிய வைக்கப்போவதில்லை என்பது உறுதி
காமம் நிதர்சனமானது மீதி இரண்டும் கற்பனையானது என்பதை அன்றாட
வாழ்வில் உணரும் நாம் காமத்தின் வடிகால்களை முறையே அமைத்து கொண்டுவாழ்க்கையில் பயணிக்கிறோம் .

காமம் பொய்யானது என சொல்லும் மடாதிபதிகளே கடவுளும் துறவும் நிதர்சனமானதுன்னு சொல்வதன் மூலம் காமத்தின் வலையில் இருந்து மீள இயலாதவர்களாகி விட்டார்கள்பரிதாபம்.

எது முக்கிய பிரச்சனை:
-------------------
சமகாலத்தில் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் ஈழத்தமிழர்களின் துயரம்
விலைவாசி உயர்வு ஆகிய எல்லா பிரச்சனைகளையும் பின்னுக்கு தள்ளும் படியான  மிக முக்கியமான பிரச்சனை அல்ல நித்தியானந்தா மடாதிபதியானது ஆனால் எது முக்கியமற்றதோ அதை குறித்து நாம் பேசும்படி ஆக்கப்படுவது உள்நோக்கம்
உடையதல்ல என்றாலும் நமது சக்தியை விரயம் செய்யவே பயன்படும்
இத்தோடு இதை நிறுத்தி கொள்வோம் இணைய வாசிகளே






3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post