ஆசிரியை கொலையும் இந்த சமூகமும்

ஒரு மாணவன் தனது பள்ளி ஆசிரியரை கொலை செய்து விட்டான் இதை பார்க்கும் பலருக்கு செய்தியாக தெரியலாம் ஆனால் இந்த மொத்த சமூக வாழ்க்கையின் அவலம் தெரிகிறது இதில் .

முதலில் கல்வி பணிக்காக தனது இன்னுயிரை தந்த அந்த ஆசிரியைக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது கொலைக்கு வன்மையான கண்டனத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.

கல்வி என்பது உற்பத்திக்காகவே :

கல்வியை பற்றி பேசும்போது என்னதான் மேலோட்டமாக அது உற்பத்திக்கு அல்ல கல்வி என்பது அறிவுக்குன்னு பேசினாலும் இந்த சமூகத்தில் வேலைவாய்ப்புக்குதான் கல்வி பயன்படுகிறது பயன்படும் என்பதை மறுப்பவர்களின் வாதமே கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கானது .(அப்படி கல்வி என்பது அறிவு வளர்ச்சிகானது என்கிற உயர்ந்த மதிப்பீட்டை இந்த சமூகத்தில் அடைய முடியாது)

ஆக கல்வி என்பது உற்பத்திக்கு என்றான பின்பு கல்வியில் போட்டி முந்நிபந்தனை ஆகிறது அந்த போட்டியில் வெல்பவனே வேலை சந்தையில் விலைபோவான் என்பது சந்தை விதிகளின் ஒரு தாரக மந்திரம் .

கல்வி சந்தையில் ஆசிரியர்கள் :

கல்வியை விற்கும் நிறுவனங்கள் பெருகிவிட்டன இவற்றின் வேலை உற்பத்திசந்தைக்கு மாணவர்களை தயாரிப்பது இதில் முதலீடு பணம் -ஆசிரியர்களை கூலிக்கு அமர்த்தி வேலை வாங்கி கல்வியை விற்கிறார்கள் .

கல்வி என்பது கடை சரக்கான பின்பு ஆசிரியரை எந்தளவுக்கு பிழிந்து வேலை வாங்க முடியுமோஅந்தளவுக்கு அந்த மாணவனை உற்பத்தி சந்தைக்கு அனுப்ப இயலும் என்ற நிலையில் கல்வி சந்தையில் அடிமாட்டின் நிலமைக்கு ஆசிரியர்கள் வந்துவிடுகிறார்கள் இது தனியார் பள்ளிகளில்

அரசு மூலதனம் செயல்படும் அரசு பள்ளிகளில் இந்த நிலையோ தலைகீழ் விகிதமாகும் அங்கு ஆசிரியரால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் . தனியார் பள்ளிகளில் மாணவர்களால் ஆசிரியர் கொல்லப்படுகிறார் .

ஆகவே குறைந்த கூலிக்கு நிரம்ப வேலை வாங்கப்படும் ஆசிரியர்கள் மாணவர்களை அதிகமார்க்குகள் (சிறந்த அறிவு அல்ல) எடுக்க வைக்காவிட்டால் வேலையில் இருந்து தூக்கப்படுவார்கள் அதே இடத்தில் சந்தையில்வேலை இன்றி காத்திருக்கும் இன்னொரு ஆசிரியர் அமர்த்தப்படுவார் இப்படி கல்விசேவை வழங்கும் சந்தை போட்டியில் வேகமாக நடக்கிறது .

இப்போது தனது உழைப்பு சக்தியை விற்கும் ஆசிரியர்களுக்கு வேலைபாதுகாப்பும் இல்லை உயிர்பாதுகாப்பும் இல்லை என்கிற நிலைக்குவந்துவிட்டார்கள் .

1.ஒரு நாளைக்கு 8 வகுப்புகள் நின்று கொண்டே பணிபுரியவேண்டும்
2.நோட்ஸ் ஆப் லெசன் வார வாரம் வைக்க வேண்டும்
3.தேர்ச்சி விகிதம் குறைய கூடாது
4.வாரத்தில் இரண்டு எக்சாம் வைக்க வேண்டும்.
என இன்னும் அடுக்கடுக்கான பொறுப்புகளை ஒரு தனியார் பள்ளி ஆசிரியர்
எதிர்கொள்கிறார் இத்தனை செய்தால் இவருக்கு கிடைப்பது கூலிமட்டுமே

பம்பரம்போல் சுத்தி சுத்தி வேலை வாங்கப்படும் ஆசிரியர்களால் அந்த பள்ளிக்கு அட்மிசன் கூடினால் பள்ளியில் பெயர்தான் வெளியில் தெரியும் பாவம் அந்த ஆசிரியர்கள் பெயர் அல்ல .

காசு கொடுத்து கல்வி வாங்கும் மாணவனின் மனநிலை:
----------------------------------------------------
எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக பணம் கொடுத்து சேர்கிறானோ அந்தளவுக்கு தனக்கு கல்வி வழங்கப்படும் என்பதை உணர்கிற மாணவன் ஆசிரியரை ஒரு கூலி அடிமையாக பார்க்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறான் ஆசிரியர்களுக்கோ மாணவனிடமோ அல்லது நிர்வாகத்திடமோ அல்லது பள்ளி வேலை செய்யும் டிரைவர்களிடமோ கூட மதிப்பற்ற ஒரு பாவப்பட்ட ஜீவனாகிவிடுகிறார்கள் மாணவனுக்கு ஒரு நோட்டு புத்தகத்தை வாங்குவதை போல கல்வி என்பது ஒரு சரக்காகும் போது இங்கே கல்வியின் மேலோ அல்லது ஆசிரியரின் மேலோ எந்த மதிப்பும் ஏற்படுவதில்லை .

பண்டங்களுக்கிடையேயான உறவாக ஆசிரியர் மாணவர் உறவு ஆகிவிடுதல்மிகவும் பரிதாபமான நிலையே .

சமூக மாற்றமின்றி கல்வி மாற்றம் கானல் நீர்:
-------------------------------------------
ஒரே கூக்குரல் கல்விமுறையை மாற்றவேண்டும் என கேட்பதை காணமுடிகிறது ஒரு கட்டுரையில்

//மாணவன் ஆசிரியரைக் கொன்றது சரியா தவறா என்று பட்டிமன்றம் நடத்துவதை விடுத்து சமூக சூழல்களையும் இதெற்கெல்லாம் யார் யார் பொறுப்பு என்பதையும் சமூக அக்கறையுடன் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
கொலை செய்யப்பட்டது அந்த ஆசிரியர் மட்டுமல்ல, அந்த மாணவனும் கூடத்தான். நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தாக வேண்டும் என்ற அபாயச் சங்குதான் இம்மாதிரி சம்பவங்கள்.யோகா, நடனம், இசை, கராத்தே என்று மாணவர்களுக்கு இளம் வயதில் கட்டாயப்பாடமாக்க வேண்டும். கொலைவெறி பாடலை ரசிக்கச் சொல்லிக்கொடுத்து விட்டு அந்தச் செயலை மட்டும் விமர்சிக்கும் தகுதி இந்தச் சமூகத்திற்கு கிடையாது.//

பெரும்பாலும் அனைத்து பள்ளிகளிலும் யோகா கற்றுகொடுக்கத்தான் படுகிறது ஆனால் மனிதனை மனிதன் அடித்து
திண்ணும் இந்த சமூக அமைப்பை அப்படியே வைத்து கொண்டு கல்வி முறையை மாற்றுவதால் மட்டும் எந்த மாற்றமும் வந்துவிடாது .அதற்காக சமூகமாற்றம் வரும்வரை இந்த போக்குகெல்லாம் சமூக உற்பத்தி முறையின் மேல் பலியை போட்டு விட்டு பேசாமல் இருந்துவிடவும் முடியாது.

எந்த பிரச்சனைக்கும் மூலகாரணமாக அதன் பொருளாதார காரணமே இருக்கிறது என்பதும் அகவியல் காரணம்
என்பது அதன் உடன்விளைவானது என்பதும் அறிந்து பொருளாதார காரணங்களை மாற்று போராட்டத்தில் பங்கெடுப்பதுடன் அகவியல் காரணங்களை கலையவும் போராடவேண்டும் .

சினிமா -தொலைகாட்சி கலாசார சீரழிவு:
-----------------------------------
சினிமா தொலைக்காட்சி மற்றும் இவற்றின் வகையில் ஏற்படும் கலாசார சீரழிவுதான் மாணவர்களின் மனநிலை சீரழிவுக்கு காரணம் என்ற வாதத்தை வைக்கிறார்கள் . வன்முறையை தூண்டும் சினிமா ,வசனம் காட்சி பதிவுகள் மாணவர்களின் மனதில் வன்முறை எண்ணத்தை தூண்டு வளர்ப்பதும் கார்டூன் சேனல்கள் வன்முறை விளையாட்டுகள் ஆகியவை உருவாக்கும் வன்முறை எண்ணமே இந்த கொலைகளுக்கு காரணம் இத்தகைய சமூக கலாசாரா சீர்கேட்டுக்கு காரணம் அந்த சமூகத்தின் பொருளுற்பத்தி முறையே.
சினிமாவிலும் , தொலைக்காட்சியிலும் கட்டுபாடற்ற பல காட்சிகள் வைக்கப்படுவதும் சந்தையில் தனது
சம்பாத்தியத்தை பெருக்கிகொள்ளும் முதலாளித்துவ வெறிதான் காரணம்

நடுநிசி நாய்கள் படம் எடுக்கும் ஒரு இயக்குநருக்கு சமூக பொறுப்பை பற்றி போதிக்க இயலுமா?
இப்படி கேவலமான ஒரு படத்தை தனது டீன் ஏஜ் காலத்தில் பார்க்கும் ஒரு மாணவனின் மனநிலை குறித்து
படைப்பாளிகளுக்கு எந்த சமூக அக்கறையும் இல்லை ஏனெனில் சமூகத்துக்கு தனிமனிதனின் மேல்
எந்த அக்கரையும் இல்லை .பத்திரிக்கை தொலைக்காட்சி ,சினிமா ஆகியவற்றில் இந்த தனிநபர்வாதம்
தனிநபர் வன்முறை விசம் போல கலக்கப்படுவதை சமூக அக்கரையோடு பார்க்கும் பெற்றோர்கள் குறைவு
பொழுது போக்குக்காக இங்கு வாழ்க்கை தொலைக்கப்படுகிறது .

கட்டுபாடற்ற காட்சி படிமங்க கட்டுபாடற்ற சிந்தனைகளை சிறுவர்கள் மனதில் விதைக்கிறது தனது சக மாணவியுடன்
செக்ஸ் உறவு வைக்கும் காட்சியை படம்பிடித்து இணையத்தில் ஏற்றினான் இன்னொரு மாணவன் இதெல்லாம்
கலாசார சீரழிவின் உச்சம் .


இருவழிகளில் போராட்டம் :
-----------------------
ஆசிரியர்கள் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் அவர்களின் கைகளிலேயே களி மண்ணை போல மாணவன் தரப்படுகிறான் ( பச்சை களிமண்ணை எப்படியும் மாற்றலாம்) சமூக கல்வியை கொஞ்சம் கொஞ்சமாக புகட்டுவதன் மூலம் சமூகத்தை எப்படி பார்ப்பது என்கிற பார்வையை ஆசிரியர்கள் கொண்டு வருதல் தலையாய கடமை என கருதுகிறேன் அதற்கான முன்நிபந்தனை ஆசிரியர்கள் சங்கமாக சேர்வதும் (தனியார் பள்ளிகளில் ) தங்களது உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபடுதலும் சமூகத்தின் கலாசாரா மாற்றத்தை கொண்டுவரும்போராட்டங்களில் ஈடுபடுதலும் என இருவகை போராட்டங்களை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் .
மாறாக முதலாளித்துவத்தால் புளித்து போல கையாலாகாத இந்த அரசிடம் பாதுகாப்பை கோருவது வேடிக்கை

எந்த பிரச்சனைக்கும் போராட்டம்தான் தீர்வா?
---------------------------------------------
ஆம் எல்லா பிரச்சனைக்கும் போராட்டம்தான் தீர்வு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post