செய்தி:கிராமங்களில் கட்டாய மருத்துவ சேவை!
எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டாக அதிகரிக்க திட்டம்!
கிராமப் புறங்களில் மருத்துவ மாணவர்கள் ஒரு ஆண்டு சேவை செய்வதை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துடன், இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் ஆலாசனை நடத்தியுள்ளனர்.
இதில் தற்போது 5 1/2 ஆண்டாக உள்ள மருத்தவ படிப்பை, 6 1/2 ஆண்டுகளாக உயர்த்தலாமா என்பது குறித்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கிராமப்புறங்களில் மருத்துவர்கள் சேவை செய்ய முன்வராததால், உரிய மருத்துவ வசதியில்லாமல் கிராமபுற மக்கள் அவதியடைகின்றனர்.
மருத்துவர் பற்றாக்குறையை போக்கும் வகையில் மருத்துவ மாணவர்கள் ஓராண்டு கிராமங்களில் தங்கி சேவை செய்ய அனுமதிக்கலாம் என்று யோசனைகள் கூறப்பட்டுள்ளன. தேசிய கிராமப்புற மருத்துவ சேவைக்கு நாடு முழுவதும் 40 ஆயிரம் மருத்துவ மாணவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், கிராமப்புறங்களில் சேவை செய்யும் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு முதுகலை படிப்பில் சேர 30 மதிபெண்களை கூடுதலாக வழங்கலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த முடிவு குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
--------------------------------------------------------------------------------------
மக்கள் சேவையை கைகழுவும் அரசு:
அரசு மக்களுக்கு வழங்கிவந்த சேவைகளில் இருந்து தன் கையை எடுத்துவிட்டது எதோ தற்செயலானது அல்ல திட்டமிட்டே அரசு மக்களுக்கான கல்வி ,மருத்துவம் ஆகியவற்றில் இருந்து விலகிகொண்டுள்ளது .
மக்களுக்கான சேவை என்பதை அரசே கைகழுவும் போது ஆசிரியர்களும் மருத்துவர்களும் மக்கள் சேவையை கைகழுவுவதை கண்டிக்க முடியாத நிலையில் இருக்கிறது மேலும் அதை கண்டிக்கவும் விரும்புவதில்லை அரசு.
சேவை என்பதை மரத்தில் இருந்து விழும் கனியாக கிடைக்காத போது கல் எறிந்து பெறும் கனியாக மாற்றப்படுகிறது .மருத்துவ படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தி ஓராண்டு சேவையை கிராமபுறங்களுக்கு மருத்துவ மாணவர்கள் தரவேண்டும் என சொன்னால் எதிர்ப்பு கிளம்புகிறது .
அரசு ஏன் கிராமபுறங்களில் பணி இடங்களை நிரப்ப கூடாது என்பதே பிரதானமான எதிர்வாதம் - கிராம புறங்களில் பணி இடங்களை நிரப்புவதற்கு பதிலாக மாணவர்களை வைத்து ஓட்ட படுகிறது என்பது உண்மையாக இருக்கலாம் மேலும் இந்நிலையில் அரசு மருத்துவர்களின் மேற்பார்வையின் மூலம் மட்டுமே பயிற்சி மாணவர்கள் மருத்துவம்
பார்க்கலாம் என்பதை விதியாக்க வேண்டும் என்றுதான் மருத்துவர்கள் போராடனும் மாறாக கிராமபுறத்துக்கு போகமாட்டேன் என்றும் அதற்கு காரணம் அரசு பணியிடங்களை நிரப்பாமல் விடுவதற்கே அரசு இந்த திட்டத்தை சொல்கிறது எனவும் சொல்வது சரியல்ல .
(மேற்கண்ட வாறு பயிற்சி மருத்துவர்களுடன் கண்டிப்பாக அரசு நியமித்த மருத்துவரும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையின் மூலம் அரசுக்கு பணிநியமனத்தை குறைத்துவிடும் எண்ணம் இருப்பதாயின் அதையும் தடுக்க முடியும் , மருத்துவர்கள் மக்களுக்காக சேவை செய்ய தயார் என்கிற மக்களின் நல் ஆதரவினையும் பெறமுடியும் )
அப்படியே அரசு நியமித்தாலும் கிராமபுறத்தில் சேவை செய்யும் டாக்டர்கள் ஒன்று மாற்றலாகிட்டு வந்துவிடுகிறார்கள் இல்லையேல் தனியாக கிளினிக் ஆரம்பித்து விடுகிறார்கள் .
நகர்புறங்களில் மட்டுமே டாக்டர்கள் வசிக்கவும் தொழில் செய்யவும் விரும்புகிறார்கள் என்பதை கீழ்கண்ட விபரத்தில் இருந்து அறியலாம் :
1. //ஆரம்பத்தில் 5,842 பேருக்கு ஒரு மருத்துவர் என்றிருந்த நிலைமை மாறி இப்போது சுமார் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்போது, இந்தியாவில் சுமார் 6,50,000 மருத்துவர்கள் இருப்பதாகத்தெரிவிக்கிறது மருத்துவக் கழகக் குறிப்பு. ஆனால் இந்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் நகரங்களில்தான் இருக்கிறார்களே தவிர கிராமங்களில் இருப்பதில்லை. தங்களுக்கு வசதியான வாழ்க்கையும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களும் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களது வாதம்.//(நன்றி bsubra.wordpress.com)
2.இன்னொரு விபரம் //தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 11,000. இவர்களில் சென்னை உள்பட நகரங்களில் பணிபுரிபவர்கள்தான் சுமார் 7,500 பேர். அதேபோல, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் சுமார் 35,000 பேர் என்றால் இவர்களில் 21,000 பேர் நகரங்களில்தான் மருத்துவசேவை செய்கிறார்கள். சமூக சேவை, சமுதாயத்துக்குத் தங்களது பங்களிப்பு என்கிற வகையில், அசௌகரியங்களையும் வருமான இழப்பையும் கருதாமல் ஓராண்டு காலம் நமது மருத்துவர்கள் கிராமப்புற சேவையாற்ற முன்வர மறுப்பது, மருத்துவத் துறையின் மகத்தான சேவைக்கே களங்கம்.//(நன்றி bsubra.wordpress.com)
3.ஆனால் இந்தியாவில் 75 சதமானம் மக்கள் வசிப்பது கிராமங்களில்
அரசு பணியிடங்களை நிரப்ப சொல்லுங்கள் என்பது :
அரசு பணியிடங்களை நிரப்ப சொல்லுங்கள் என்பதோடு அவர்களின் நியாயமான கோரிக்கையாக அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக்குகள் வைக்க கூடாது என்றும் மிச்சம் இருக்கும் நேரத்தில் அரசு மருத்துவமனையிலேயே ஓவர் டைம் கேட்டு செய்தல் நலம் என்றும் தங்களது கோரிக்கையை விரிவு படுத்த தயாரா ?
ஒவ்வொரு அரசாங்க டாக்டரும் தனியாக இருக்கும் தங்களது மருத்துவமனைக்கு சென்று விடுதல் மேலும் நோயாளிகளை அங்கு வரச்சொல்லி சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை கண்கூடாக காண்கிறோம் இந்த அரசாங்க டாக்டர்கள் வீட்டிலேயே தனியாக சிகிச்சை அளிப்பதற்கு ஒரு தகுதியாக அரசு மருத்துவர் என்கிற அடைமொழி தேவை படுகிறது .
மருத்துவமனைக்கு போதிய மருத்துகள் பெட் மருத்துவ சாதனங்கள் வழங்காத அரசும் சரியாக சிகிச்சை அளிக்காத மருத்துவர் என்ற இந்த கள்ள கூட்டணி மக்களை இலவச மருத்துவம் என்கிற விசயத்தையே மக்களிடம் கெடுத்து வைத்த பெருமையை உடையது .
அரசாங்க ஆஸ்பத்திரியில் சரியா கவனிக்க மாட்டாங்க என்பதை உருவாக்கியதில் இந்த கூட்டணிக்கு பெரிய இடம் இருக்கிறது .
அரசு கல்லூரி மாணவர்களை மட்டும் அனுப்புங்கள் என்பது:
அரசு கல்லூரி மாணவர்கள் குறைந்த செலவில் அரசு உதவி மூலம் படிக்கிறார்கள் அவர்களை அனுப்ப சொல்லுங்கள் நாங்கள் பணம் கட்டி படிக்கிறோம் ஏன் போகவேண்டும் என சொல்பவர்கள் சுயநலவாதிகள்
நாட்டுக்கு தேவையான உணவு -உடை - இருப்பிடம் அனைத்தையும் கொடுக்கும் மக்களுக்கு முக்கியமாக உணவு கொடுக்கும் விவசாயிகளுக்கு நான் படித்த மருத்துவத்தை வைச்சு சேவை செய்ய மாட்டேன் என்பதே பாசிசம் இந்த பாசிச எண்ணத்தை மக்கள் போராட்டங்கள் மூலம் ஒழிக்க வேண்டும் மருத்துவம் என்பது காசு பார்க்கும் ஒரு விசயமாகி போனதால் நடக்கும் குழப்பங்களால் மனித உயிர்கள் பலியாவதை குறித்து மருத்துவர்களுக்கு கொஞ்சமும் கவலை இல்லை
பணமே குறி மருத்துவம் பிற்பாடு:
மருத்துவர்களிடம் முதலாளித்துவ சிந்தனை வந்த காரணத்தால் பணமே குறி என்கிற எண்ணம் வந்து விட்டது செத்த பிணத்தை கூட அவர்கள் சிகிச்சை அளிக்கிறோம் என பணம் பிடுங்கிறார்கள்என சொல்லி கூட ஒரு திரைப்படம் வந்தது இது மிகையல்ல உண்மையின் பிரதிபலிப்பு கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு அனதீசியா டாக்டரால் தவறான சிகிச்சை மூலம் கொல்லப்பட்ட தனது மனைவிக்காக ஒரு ஆட்டோ டிரைவரால் அனதீசியா டாக்டர் கொல்லப்பட்டார் (சேதுலட்சுமி) மயக்க மருந்து கொடுக்கிற டாக்டர் அறுவை சிகிச்சை செய்யலாமா ? http://www.aalatimes.com/2012/01/05/dr-sethulakshmi-not-qualified-to-remove-dead-foetus-from-womb///Dr Sethulakshmi not qualified to remove dead foetus from womb?
இதன் தொடர்ச்சியாக திடீர் வேலை நிறுத்தம் செய்து மக்களிடையே டாக்டர்கள் அதிருப்தியை சம்பாதித்து கொண்டார்கள்
தனியார் மயம் தாராளமயம் உலகமயம்:
அரசு தனியார் மய கொள்கையை கொண்டுள்ளதால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு மூடுவிழா நடத்துகிறது என ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதகதையா கதைக்கிறார்கள் இந்த டாக்டர்கள் அரசு வேலை பார்த்துட்டே தனியார் மருத்துவமனை நடத்தும் இவர்களில் பெரும்பான்மையானோர் அரசின் தனியார் மயத்தை கேள்வி கேட்பது சிரிப்பான உண்மை .
உண்மையில் இவர்கள் அரசின் தனியார் மய கொள்கையை எதிர்க்கனும்னா தனியா கிளினிக் திறப்பதை இவர்கள் சங்கம் கூட்டம் போட்டு தடை செய்யனும் அரசு மருத்துவமனையில்ஓவர் டைம் பார்க்கனும்
மக்கள் பிரச்சனைக்கு களமிறங்காதவர்கள் :
எப்போதுமே டாக்டர்கள் ஸ்டிரைக் என்பது தங்களது சொந்த வர்க்கத்தை காப்பாத்தவே இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனைக்கு ஆர்பாட்டம் கூட நடத்த மாட்டார்கள் இந்த மருத்துவர்கள் ஆனால் மக்களுக்கு சேவை செய்ய அரசு வேலை கேட்பதாக சொல்வது ஒரு தந்திரமே பிரச்சனை தனியார்மயம் என்றால் அதற்கு காரணம் இந்த டாக்டர்களே .