மதுரைக்கு போனேனுங்க

சொந்த ஊருக்கு போவதென்பது தும்மல் வருவதை போல நடக்கும் ஒரு சராசரி நிகழ்வுதான் எனினும் இந்த முறை எனது பயணமானது கிராமத்தை மைய்யமாக கொண்டதாக இருந்தது .

”திருப்பா சேத்தி “ அதை சுற்றி உள்ள ஊர்களுக்கு போவோம் என்பதை திட்டமிடவில்லை.

நாங்கள் ஊருக்குள் நுழையும்போது பெரிய கம்மாய் மதிலும் “மார்நாடு கருப்ப சாமி” கோவிலும்
கண்ணுக்கு தெரிந்தது . மார்நாடு சீமை என்பது மார்நாடு கம்மாயை நம்பி விவசாயம் செய்யும்
ஊர்களை உள்ளடக்கியது என்கிற புதிய தகவலை( எனக்கு) தந்தார் சகோதரர் .

இங்கே எல்லா விசயத்திலும் சாமியை முன்னிருத்தியே செய்யப்படுகிறது - மிக எளிமையானது இவர்களின் வழிபாடு கடாவெட்டி பொங்கள் வைப்பது வருடம் ஒருமுறையே நாங்கள் போனது திருவிழாவுக்கு அடுத்த நாளாக போய் விட்டதால் திருவிழாவின் மிச்ச சொச்சங்களும் ஊரில் எல்லாரும் விடுப்பு எடுத்த மாதிரியும் காணப்பட்டது.

நேத்து வந்திருக்கலாமே சார் நீங்க விசேசம் நல்லா இருந்தது என வெள்ளந்தியாக சொன்னார்கள்.

சாப்பிடும் நேரம் வந்ததும் என் வீட்டுக்கு உன் வீட்டுக்கு என போட்டி போட்டார்கள் உணவளிக்க

”கதவை சாத்திட்டு போய்விடும் நகரத்து சொந்தங்களை “ நினைத்து கொண்டேன்
ஏக்கர் கணக்காக வைத்திருந்தாலும் ஏழைகள் பலரை பார்க்க முடியும் தலைக்கு எண்ணெய்
வைக்காத பெண்களை பார்க்கலாம் . ஒரு ஏக்கருக்கு நெல் விளைவிக்க என்ன செலவாகிறது
என்று ஒரு பெண்ணிடம் கேட்க விபரங்களை சொன்னார் அவர் சொன்ன மாதிரி பார்த்தால் சுமார் 22 ஆயிரம் செல்வாகிறது அறுவடை என்பது 35 மூட்டைகள் என சொன்னார் முட்டை ஆயிரத்து நூறு என தமிழ்நாடு நேரடி கொள்முதல் நிலையத்தினர் வாங்கி கொள்கிறார்கள்

இதுவே வியாபாரிகளிடம் கொடுத்தால் மூட்டைக்கு ஆறுநூறு மட்டுமே கிடைக்கும் விதைச்ச காசு கூட வராது என்றார் அந்த பெண்.

வியாபாரிகள் விவசாயிகளை சுரண்டவில்லை என கூக்குரலிடும் மூடர்களே
இதை கேளுங்கள் வியாபாரிகளே சுரண்டி திண்கிறார்கள்

மேலும் எழுதுகிறேன்

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post