வேலை ஏன் சுமையாகிறது

வேலை ஏன் சுமையாகிறது

நாம் எதாவது ஒரு வேலை செய்ய கடமைபட்டிருக்கிறோம் 8 மணிநேரம் ஒரு வேலையை செய்தாக வேண்டும் நேற்று செய்த அதே வேலை மணிக்கணக்காக ஆனால் எத்தனை பேர் மிகவும் சந்தோசமாக வேலையை செய்கிறோம் என்றால் விரல் விட்டு எண்ணிடலாம் இது ஏன் ? ஒரு பக்கம் வேலை கிடைக்கவில்லை இன்னொரு பக்கம் வேலை சுமையாக அழுத்து கிறது .

பெரிய பெரிய கம்பெனிகள் கிளப்புகள் அல்லது வார இறுதி கொண்டாட்டங்களில் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முயன்றாலும் மன அழுத்தமும் வேலை சார்ந்த மன இறுக்கமும் நாள் தோறும் அதிகரிக்கிறது தவிர குறையவில்லை .

ஆன்மீக வியாபாரா தளகளில் தியானம் , யோகா , மூச்சு பயிற்சி ஆகியவை கற்று தந்து வேலை அழுத்தத்தை குறைக்க பார்க்கிறார்கள் .

சினிமா, இதழ்கள் , விளையாட்டு என்ற பொழுது போக்கு சாதனங்களோ மேலும் மேலும் மனிதனை தன்னிலை உணர்விலிருந்து மழுங்கடிக்க வடிக்கப்பட்ட சாதனங்களாகிவிட்டன .

வேலை ஏன் சுமையாகிப்போனது :

திரும்ப திரும்ப செய்யப்படும் வேலையை குறிப்பிட்ட ஒரு அளவு மட்டுமே ஒரு மனிதன் செய்ய முடியும் பெரும்பாலும் தனக்கு பிடிக்கிறதோ இல்லையோ சந்தை விதிகளில் உந்தபட்ட ஒவ்வொருவரும் ஒரு வேலையை அடைகிறார்கள் தங்களது வாழ்நாள் முழுக்க அந்த வேலையை கட்டி அழவேண்டி இருக்கிறது இதன் காரணம் தனிதிறமைகளை வளர்த்து பொருளுற்பத்தியில் தனிதிறமைகளின் மூலம் உற்பத்தியை பெருக்கும் லாபநோக்க (முதலாளித்துவ) உணர்வே காரணம்.

ஒரு நாட்டின் தேவைக்காக உற்பத்தி செய்யப்பட்டால் அந்த நாட்டின் சட்டைகளின் எண்ணிக்கையை ஒரு வாரத்தின் அந்த நாட்டின் துணி மில்கள் அடைந்து விடும் என்றால் மிச்சம் இருக்கும் மூன்று வாரங்களை விடுமுறைக்கு விடலாம் அல்லது வேறு தொழில்களில் அந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தலாம் ஆனால் மில் முதலாளியின் லாபநோக்கத்திற்கான உற்பத்தியினால் கசக்கி பிழியப்படும் ஒரு தொழிலாளி தனது உயிர்சக்தியால்(உழைப்பு)முதலாளியின் பாக்கெட்டை நிரப்பும் போது -தனது சொந்த வாழ்க்கையை நமுந்து போவதை உணர்கிறான் ஆனால் இந்த உணர்வின் மூலம் அவனால் எதுவும் செய்ய இயலாது .

தனிதிறமை நல்லதா கெட்டதா?

ஒரு துறையின் தனி திறமையாளன் அந்த தொழிலில் அதிக உற்பத்திக்கு உதவுவான் உதாரணமாக
பத்து ஆண்டுகள் லேத்து பட்டறையில் இருந்த ஒரு மனிதன் ஒரு மணி நேரத்தில் நூறு நட்டுகளை கடைய முடியும் ஆனால் ஒரு ஆண்டு அனுபவம் மிக்கவன் 50 நட்டுகளே கடைய முடியும் என்பதால் ஒரே வேலையில் அனுபவம் பெற பெற அவனது சம்பளம் அதிகரிக்கும் என்ற காரணத்தால் ஒரே வேலையை செய்கிறான் தொழிலாளி அதே நேரத்தில் ஒரு பணியில் ஒரே தொழிலாளியை நியமிக்கும் ஒரு முதலாளிக்கு நிறைய நட்டுகளை செய்வதால் கிடைக்கும் லாபமே முக்கியம் இந்த லாபநோக்கத்தில் உந்தபடும் ஒரு தொழிலில் தனிநபர் மட்டும் எப்படி தப்பித்து தனது மனதிருப்திக்காக வேலையை செய்ய முடியும் அவ்வாறு செய்யமுடியும் என பேசுவதும்
ஒரு ஏமாற்றே .

தனிநபர் திறமை நல்லது ஆனால் அதை உபயோகிக்கும் முறையே தவறு திறமை என்பது திறமையாளனின் கழுத்தை சுற்றி சுத்தப்பட்ட சுருக்கு கயிறாகிவிட்டது வேதனை

உழைப்பு சக்தி ஒரு சந்தைபொருள்:

ஒரே மாதிரியான கணக்கெடுக்கும் பணி அல்லது கணக்கெழுதும் பணி அல்லது நிரல் எழுதும் பணியை என்னால் மணிக்கணக்கில் செய்ய இயலாது என சொல்வீர்கள் ஆயின் அடுத்த நிமிசமே
வரிசையில் உங்களுக்கு பின்னால் நிற்கும் நபரால் உங்கள் வேலை தட்டி பறிக்கப்படுவதை உணர்வீர்கள் ஏனெனில் உங்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம்பெற்றுகொண்டு தனது உழைப்பு சக்தியை வழங்க அங்கே பலபேர் வரிசையாக நிற்கவைக்கப்படுகிறார்கள் .

உற்பத்தி பொருளும் சந்தைக்கு உழைப்பு சக்தியும் சந்தைக்கு என்பதில் உழைப்பு சக்தி என்பது
உயிர்சக்தி என்ற கருணை எல்லாம் இல்லாமல் சந்தைக்குட்பட்ட விதிபடி இயங்கும் போது
எங்கிருந்து உழைப்பு சக்தியின் சுதந்திர செயல்பாடு பிறக்கும்

திறமை வளர்கிறது என்பது உண்மையா?

அழகான கட்டிடங்கள் , நுட்பமான அறிவியல் பொருட்கள் ,மிக அதிசயமான உலகம் என கண்முன்
விரிந்த உலகமோ ஒடுக்கப்பட்டு வேலை வாங்கப்பட்ட தொழிலாளர்களின் திறமையால் ஆனது
இந்த திரைக்கு பின்னே எத்தனையோ கோடி தொழிலாளர்களின் உழைப்பு சக்தி இருக்கிறது .

சந்தைக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட ஒரு மோட்டார் பைக்கின் நல்ல அம்சங்களினால் கிடைக்கும் லாபம் முதலாளியின் பாக்கெட்டுக்கு போகும் போது அதில் கிடைத்த கூலி மட்டுமே
அந்த டெக்னீசியனுக்கு போகிறது கூலிக்காக திறமையை விற்கும் அவனைவிட இன்னொரு கூலி குறைவான திறமைகாரன் வரும்போது இவனது திறமை விலக்கப்படும் .

மிக விரைவில் ஓடும் மோட்டார் சைக்கிள் என்பது மொத்த சமூகத்தின் தேவையை கருதி உற்பத்தி
செய்யபடுவதில்லை அதற்கு இருக்கும் மார்கெட் அந்த மார்கெட் முடிந்தததும் இன்னொரு பைக்
மார்கெட்டில் இன்னும் விலை குறைந்து கிடைக்கும் போது இந்த திறமை மதிப்பிழந்து போகிறது
இப்போது இந்த தொழிலாளிக்கு வேலை இழப்பு அல்லது கூலி இழப்பு வந்து வாய்க்கிறது.

திறமையை மட்டும் கொண்டுள்ள இந்த டெக்னீசியன் சந்தை விதிகளால் பந்தாடபடுகிறான் .

ஆக மார்கெட்டுக்கான திறமை என்பதே குறைபாடனாது தேவைக்கான திறமையே சரியானது .

200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல விரும்பும் ஒரு சில நபர்களுக்காக உற்பத்தி செய்வதை விட
அநேகமாக எல்லாரும் அதிகபட்சம் 100 கிலோமீ வேகத்திலும் எரிபொருளை குறைவாகவும்
பெற்று ஓடும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பது மொத்த சமூகத்தின் தேவையா என கணித்து
அதை உருவாக்க தேவைப்படும் திறமையே சரியான திறமையாக நாளும் மெருகேரும் திறமையாக
அமையும்

தனது உழைப்பில் இருந்து அந்நியமாதல்:

தான் கட்டிய கட்டடம் ஆகட்டும் தான் நெய்த பட்டாடை ஆகட்டும் எந்த தொழிலாளிக்கும் வாய்ப்பதில்லை ஏனெனில் அவனது கூலியை கொண்டு அதை வாங்க இயலாத நிலைமையே காரணம் - தனது உழைப்பின் பயனை தான் அடைய முடியாத போது தனது சொந்த உழைப்பு எப்படி வெளிப்படும் .

கடனே என வேலை செய்வதுதான் மிஞ்சும் , இந்த கடன் வேலை என்பது சுமைதான் நேரத்தை கழிக்க பணிமனைக்கு செல்லும் ஒவ்வொரு தொழிலாளியும் தனது வாழ்நாளை வீணாக கழிக்கிறான் . தானே தனக்கு பொருளற்றவன் ஆகிறான்

பயன் மிக்க உழைப்புக்கு என்ன செய்ய வேண்டும் :

சந்தைவிதிகளால் இயக்கப்படும் இந்த சமூக அமைப்பை மாற்ற வேண்டும் . தேவைக்கு ஏற்ற உற்பத்தி மிச்ச நேரத்தில் பயன்மிகு கலைகள் ஓய்வு என மனிதன் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் . அதற்கு சமூகத்தில் உழைப்பை வெகு அதிகமாக்கி அனைவரையும் (பணக்காரர்கள் உட்பட) உழைப்பில் ஈடுபடுத்துவதன் மூலம் சமூகத்தின் மொத்த செல்வ வளத்தை அதிகபடுத்தினால் மட்டுமே முடியும் அந்த மொத்த சமூகத்தின் செல்வம் சமூகத்தில் பங்கிடப்படும் போது வேலை என்பது ஒரு சில மணி நேரங்களில் செய்தாலே போதுமானதாக அமையும்

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post