சமிருதிகள்
பின்னும் சமிருதிகள் செய்தார் - அவை
பேணும் மனிதர் உலகினில் இல்லை
மன்னும் இயல்பின வல்ல - இவை
மாறிப் பயிலும் இயல்பின ஆகும்
காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் - எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை
சூத்திர னுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடு மாயின் - அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம் ! -பாரதியார்
(இதில் எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்று இல்லை என்கிறார் பாரதி ஆனால் வள்ளுவம் எந்த காலத்துக்கும் பொருந்தும் என்கிறார்கள் வள்ளுவர் பக்தர்கள் )
எல்லா கருத்துருவாக்க காரர்களை போலவே அந்த சமூகத்தின் உற்பத்தி உறவுகளை காப்பாற்ற முயன்றவர்தான் திருவள்ளுவரும் ஒரு சமூகத்தின் உற்பத்தி உற்பத்தி உறவுகளை அடிகட்டுமானம் என்றால் அதன் மேல்கட்டுமானம் அதை ஒட்டியே இருந்து வருகிறது - நிலவுடமை சமூகத்தை பாதுகாக்கவே பார்பனர்கள் கருத்து உற்பத்தி செய்தார்கள் என சொல்பவர்களில் பெரும்பான்மையினர் வள்ளுவரும் அதைத்தான் செய்தார் என்பதை சொல்ல
தயங்குகின்றனர் ஒரு சிலர் இன்னும் மேலே போய் என்றைக்கும் பொருந்தும் குறள் என சொல்ல துணிகிறார்கள்.
இரு வேறு பட்ட வர்க்கங்கள் நிலவும் ஒரு சமூகத்தில் அரசு நிச்சயம் நிலவும் அந்த அரசை பாதுகாப்பதாகவே கருத்துருவாக்கம் இருக்கும் என்கிற வர்க்க அடிப்படை இல்லாமல் பொதுவான இலக்கியம் என திருக்குறளை
இயக்கவியல் சாராத இயக்கமறுப்பியல் பார்வையில் பார்ப்பது அபத்தமானது மார்க்சிய வழிக்கு முரணானதாகும்.
வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூகம் நிலவுடமை சமூகம் என்பதால் அந்த சமூகத்துக்கென நிலவ வேண்டிய அறத்தை போதிப்பவராகவே அவர் வாழ்ந்தார் மேலும் தற்கால சமூகத்தில் எதனால் சமூக முரண்பாடு
எழுகிறது என்பதை பொருள்முதல்வாத நோக்கில் ஆராய்ந்த பின்னும் கருத்துமுதல்வாத நோக்கில் விசயங்களை ஆராயும் குறள் சரியானதென பகர்வோர் ஏற்றத்தாழ்வுகளை ஏற்று கொள்ளும் பிற்போக்குவாதம் பேசுபவர்களே
ஒரு குறளில் :
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
-இதான் அறம் என சொல்லவேண்டாம் பல்லக்கில் உக்கார்ந்து செல்பவன் பல்லக்கை தூக்குபவனிடம்
இங்கே ஒரு கருத்து வருகிறது அறத்தை பல்லக்கு தூக்கும் பணியாளரிடம்
பல்லக்கில் பயணிக்கும் நபர் சொல்ல கூடாது என்ற அறிவுரை .
ஏற்றத்தாழ்வு உள்ள சமூகத்தில் அறம் இப்படித்தான் நிலவ முடியும்
ஆக அங்கு அறதாறு இதுவெனவேண்டாம் என்று சொல்வதே திருவள்ளுவரின் அறமாகிறது
அதாவது பல்லக்கு தூக்கிட்டு போறவனும் உக்கார்ந்து போறவனையும் பார்த்தாலே தெரியும் அறத்தின் பயன் என சொல்றாருன்னு வச்சிட்டா என்ன சொல்லவருகிறார். அறம் செய்தவன் பல்லக்கில் உக்கார்ந்து போவான் செய்யாதவன் அவனை தூக்கிட்டு போவான்னு சொல்றாரு - பல்லக்கு தூக்குபவர்கள் அடிமைகள் அல்லது பணியாளர்கள் என வச்சி கிருவோம் பல்லக்கு தூக்கும் ஏழை அவன் பிழைப்புக்காக அதை செய்யும் போது
அது அறமற்ற செயலாகிறது -என்கிறார் வள்ளுவர்
இன்னொரு குறளில் - பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் - எல்லா உயிரும் பிறப்பில் ஒன்னுதாண்டா ஆனால் சிறபொவ்வா செய்தொழில் வேற்றுமையான் அப்படின்னா செய்கிற வேலையை வச்சி சிறப்பு வருதுன்னு சொல்றாரு
ஆக செய்தொழில் வச்சி சிறப்பு வருதுன்னு இன்னொரு இடத்தில் பல்லக்கு தூக்குபவனிடம் அறத்தாறு பேசாதேன்னு சொல்வதன் மூலம் ஏற்றத்தாழ்வு மிக்க ஒரு சமூகத்தை அப்படியே பேணிகாக்கும் ஒரு கருத்துருவாக்குபவரின் பணியை செம்மையே செய்கிறார் வள்ளுவர் .
இந்நிலையில் வள்ளுவம் என்பது சமூகமாற்றத்திலும் மாறாத ஒரு கருத்துநிலை
என சொல்வது சரியான பார்வை இல்லை