why this kolaveri di பாடல் பிரசித்தம் என்ன சொல்லுது

ஒரு பாடல் அது தரும் இன்ப நுகர்வை காட்டிலும் அது சமூகத்தில் ஏற்படுத்தும்
தாக்கத்தையும் ஏன் அந்த தாக்கம் ஏற்படுகிறது என்பதையும் பார்க்கவேண்டும்
எந்த காரணமும் இல்லாமல் ஒரு பாடல் வெற்றி பெறுகிறது எந்த காரணமும் இல்லாமல் ஒரு பாடல் ஒரு படம் தோல்வி அடைகிறது என மண்டையை போட்டு உடைத்து கொள்பவர்களுக்கு இணையம் மூலம் ஹிட்டான இந்த பாடல் மேலும் மண்டையை உடைக்க வைக்க போகிறது


Yo boys i am singing song
Soup song...
Flop song ...
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Rhythm correct
Why this kolaveri kolaveri kolaveri di
Maintain this
Why this kolaveri..aaa di.


Distance la moonu moonu moonu coloru whiteu
white background nightu nigthu
nightu coloru blacku
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

White skin-u girl-u girl-u
Girl-u heart-u black-u
Eyes-u eyes-u meet-u meet-u
My future dark
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di


Maama notes eduthuko
Apdiye kaila snacks eduthuko
Pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
Sariya vaasi
Super maama ready
Ready 1 2 3 4

Whaa wat a change over maama
Ok maama now tune change-u
Kaila glass only english
Hand la glass
Glass la scotch
Eyes-u full-aa tear-u
Empty life-u
Girl-u come-u
Life reverse gear-u
Lovv-u lovv-u, oh my lovv-u
You showed me bouv-u
Cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u

This song for soup boys-u
We dont have choice-u
Why this kolaveri kolaveri kolaveri di [x4]
Flop song
--

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த பாடலின் ஒரு மொழியாக்கம்
இதோ
//தமிழ்ல பாடுங்க பிளீஸ் :)

ஏனிந்த கொலைவெறி கொலைவெறி பெண்ணே
ஏனிந்த கொலைவெறி கொலைவெறி பெண்ணே
ஏனிந்த கொலைவெறி கொலைவெறி பெண்ணே

தூரத்தில நிலா நிலா நிலா வண்ணம் வெள்ளை
வெள்ளை பின்னாடி இரவு இரவு
இரவின் வண்ணம் கருப்பு
ஏனிந்த கொலைவெறி கொலைவெறி பெண்ணே
ஏனிந்த கொலைவெறி கொலைவெறி பெண்ணே

வெள்ளை தோலு பொண்ணு பொண்ணு
பொண்ணு மனசு கருப்பு
கண்ணும் கண்ணும் மோதி மோதி
என் எதிர்காலமாச்சு கருப்பு
ஏனிந்த கொலைவெறி கொலைவெறி பெண்ணே
ஏனிந்த கொலைவெறி கொலைவெறி பெண்ணே

கையில் கிண்ணம்
கிண்ணத்தில் சரக்கு
கிண்ணம் முழுசும் கண்(நீரு)
வெத்து வாழ்க்கை
பொண்ணு வருது
பின்னாடி சுழலும் வாழ்க்கை

காதல் காதல் என்னோட காதல்
நீ காட்டின பவ்வு
கவ்வு கவ்வு புனித கவ்வு
நீ கேட்டே ஆகனும் கவ்வு

நான் காதலில் சாகிறேன்
அவளோ சந்தோசத்தில் எப்படி

ஏனிந்த கொலைவெறி கொலைவெறி பெண்ணே
ஏனிந்த கொலைவெறி கொலைவெறி பெண்ணே// (மொழிபெயர்ப்பில் குறை இருக்கலாம் பொறுத்தருள வேண்டும் :)

சாராம்சமாக பெண்களால் வாழ்க்கை இருட்டில் தள்ளப்படுவதாக
இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது .

பெண் என்பவள் எப்போதுமே அடங்கி கிடந்த காலங்கள் போய்விடும் போது
பெண்களும் வேலைக்கு போய் தனது சுய சம்பாத்தியத்தில் நிற்கும் போது அவர்களின்
காதல் திருமணம் போன்ற பசப்பு வார்த்தைகளின் மேல் மிக நன்றாக புரிதல் வந்து விடுகிறது
சமூகத்தில் கட்டுபெட்டியாக இருக்கும் பெண்களை ஏமாத்த முடிந்த ஆணால்
கல்வி பெற்று சிந்திக்கவும் விவாதிக்கவும் தெரிந்த பெண்ணை அவ்வளவு
சீக்கிரம் வலையில் வீழ்த்த முடிவதில்லை என்பது உலகம் பூராவும்
ஒன்றாக அமைவதால் உலகம் பூராவும் ஆண்களுக்கு ஏற்படும் தோல்வியே
இந்த பாடலின் சோசமாக அமைவதால் ஒரு வேளை இந்த பாடல் ஹிட்டாகி இருக்கலாம்

லேசா எடுத்துகொள்வது :

வாழ்க்கை , தத்துவம் , சோகம் எல்லாவற்றையும் சிரிப்பாகவும் லேசாகவும் எடுத்து கொள்ளும்
ஒரு மனநிலை இந்த பாடலில் மூலம் வெளிவருகிறது .

எனவே வாழ்க்கையில் ஏற்படும் சோகத்தையும் அதன் காரணத்தையும் ஆராய தேடி களையாமல்
அதை ஜோக்காக மாற்றி நகரும் மனநிலை ஒரு மந்தமான மனநிலையே

விட்டு விடுதலையாகி ஒரு சிட்டு குருவியை போல:
--------------------------------------------
பாரதி சொல்லும் இந்த சிட்டு குருவி மனநிலையும் மேலே சொல்லப்பட்ட லேசா எடுத்து கொள்ளும் மனநிலையும் ஒன்றல்ல போராடி தீர்த்த பின் வருவது இந்த சிட்டு குருவி மனநிலை போராட்டதிலிருந்து விலகுவதால் வருவது வை திஸ் கொல வெறி மனநிலை

பெண் மீதான தாக்குதலின் வடிவமல்ல என்பவர்களுக்கு :’

நேராக பெண்ணை தாக்கி எடுக்கப்பட்ட “ கட்டவண்டி கட்ட வண்டி “ “கார்ல போவா ஊர சுத்துவா காப்பி குடிப்பா” என்கிற பாடல்கள் எல்லாம் முடிந்து பெண் மீதான எள்ளலே தெரியாத வண்ணம்
எழுதுவது என்பதும் ஒரு தாக்குதலே

ராக்கிங்க் செய்ய பயன்படுத்த மாட்டார்களா :

நாள் தோறும் நொடிதோறும் எதாவது ஒரு சினிமா பாடல் பெண்களை கிண்டலடிக்க பயன்படுவது போல இது பயன்படாது என சொல்ல முடியாது இதுவும் அதற்கு பயன்படும் .

எந்த பெண்ணுக்கும் டி போட்டு பேசினால் பிடிக்காது ஆனால் இந்த பாடலின் முக்கால் சதவீதம் டிதான்

உலக பிரசித்தம் என்கிற மாய வலை :
--------------------------------
ஒரு விசயம் உலக பிரசித்தம் ஆனாலே அது நல்லது போற்றதக்கது என்று பொருளல்ல அது போலத்தான் இந்த பாடலும் அதன் பிரசித்தி காரணமாக போற்றுவது செம்மறி ஆட்டின் மனநிலையே

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post