அன்னாஹசாரே அவர்களின் போராட்டம் என்பது இளைஞர்களிடையே இந்தியா முழுவதும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியதை மறுக்க இயலாது. ஆனால் இதை இடதுசாரிகள் என தங்களை அழைத்துகொள்ளும் கட்சிகள் எப்படி பார்த்தன; அவர்கள் பார்ததற்கும் அவர்களின் சொந்த நலனுக்கும் உள்ள சம்பந்தம் என்ன இதன் மூலம் அவர்கள் எப்படி அம்பலபட்டார்கள் என்பதை தோலுரிக்கும் கட்டுரை இது.
லஞ்ச ஊழல் நாட்டின் பிரச்சனையா என்பதில் என்ன கருத்து வேறுபாடு இருக்க முடியும் என்பதை கலைக்டர் ஆபிசில் மனுகொடுக்க காத்திருக்கும் சாமானியர் முதல் அனைவருமே இந்திய ஆளும் வர்க்கத்தின் அமைப்பான அரசின் அங்கத்தை பற்றிய கசப்பான உண்மைகளை சீரணித்தும் ஒன்றும் செய்ய முடியாதவர்களாய் வாழ்ந்துதான் வருகிறோம்.
47 க்கு பிறகு சுதந்திரம் என்ற இந்திய முதலாளிகளுக்கான சுதந்திரத்தில் இந்திய முதலாளிவர்க்கமும் அரசாங்க அதிகாரிகளும் பின்னி பிணைந்து உருவாக்கி வளர்த்துள்ள இந்த ஊழல் மரத்தின் கிளையை வெட்ட கோடாலி எடுத்து வரச்சொன்னதுமே இளைஞர்கள் கிளம்பி விட்டார்கள். கிளையை வெட்டக் கிளம்பியவர்கள் எங்கே மரத்தையும் அதன் ஆணிவேரான முதலாளித்துவ அமைப்பையும் சேர்த்து வெட்டி விடுவார்களோ என்ற பயம் ஆளும் வர்க்கத்திற்கு வந்துவிட்டது. அன்னா ஹசாரே அதை நோக்கிப் போகமாட்டார். ஆனால் போராட்ட வெற்றியின் ருசி கண்ட படித்த இளைஞர்கள் லோக்பால் வந்த பின்னும் ஊழல் ஏன் தீரவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தால் அவர்களில் ஒருபகுதியினராவது அதை நோக்கிச் செல்வார்கள் என்பது அந்த அளவிற்கு புத்திக் கூர்மை இல்லாத கம்யூனிஸ்டுகளுக்கு தெரியாமல் போனாலும் அதிபுத்திசாலியான ஆளும் வர்க்கத்திற்குத் தெரிந்து விட்டது. அதனால் கடும் முயற்சி செய்து அந்தப் போராட்டத்தை தோல்விடைய செய்து விட்டனர்.
ஆனால் அந்த போராட்டம் தோல்வி அடைய காங்கிரஸ் மட்டும் முயற்சி செய்யவில்லை கம்யூனிஸ்டுகளும் தான் ( போலி - தீவிர போலி) முயற்சித்தார்கள். ஊழல் என்பது எந்த வர்க்கத்தின் ஆதாய நோக்கு என்பதை அம்பலபடுத்த வேண்டிய கம்யூனிஸ்டுகளே ஊழல் எதிர்ப்பு என்பதே போலித்தனம் என வியாக்கியானம் கொடுத்தார்கள். சிபிஎம் சிபிஐ என்கிற இரண்டு பெரிய கட்சியுமே தாராளமயம்தான் ஊழல் பெரிகியதற்கு காரணம் என சொல்லி அதன் ஊற்றுக்கண்ணாகிய முதலாளித்துவத்தையும் அதில் நன்மை அடையும் முதலாளி வர்க்கத்தை மறைத்தார்கள். இன்னொரு புறம் தாராள மயத்தின் மூலம் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க அரசு அதிகாரிகளை உபயோகபடுத்த முடியாது என்பதால் அன்னா ஹ்சாரே ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை நடத்துகிறார் என சப்பை கட்டு காரணம் சொல்லி மக இக உள்பட நக்சல்பாரிகளும் ஊழல் எதிர்ப்பை எதிர்த்து காங்கிரசுக்கு சேவை செய்தார்கள்.
தாராளமயத்தை சிகப்பு துணி போட்டு மறைத்தால் அது மறைந்துவிடும் என கற்பனை செய்தார்கள்.
இதுவரை தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டி புரட்சி செய்ய போவதாக சொல்லி இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பிடித்த சிபிஎம்மோ இந்த பாராளுமன்ற வாதமே தீர்வு தரும் என நம்பிக்கொண்டு அதிலேயே உக்கார்ந்து பதவி சுகம் கண்டதால் பாராளுமன்றத்திற்கு தீங்கு செய்வதாக அன்னா வின் மேல் குற்ற்சாட்டுகளை அடுக்கினார்கள். அவர்களது குற்றச்சாட்டு இதுதான் பாராளுமன்றமே சட்டங்களை இயற்ற வேண்டும் அன்னா யார் அதற்கு உத்தரவு போட. அடுத்து இவர்களது தொழிற்சங்க வாதம் என்பது அனைத்து தொழிலாளர்களுக்கும் என்ற நிலையிலிருந்து மாறி அரசு தொழிலாளர்களுக்கு மட்டும் என்பதாலும் அரசு தொழில்கள் தனியாருக்கு கையளிப்பதை தடுப்பதே தலையாய நோக்கம் என்பதால் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தாராள மயத்துக்கு துணைபோவதாக கருதி இந்த போராட்டத்தை கண்டுக்காமல் விடுவது அல்லது இதற்கு காரணம் கற்பித்து மலடாக்குவது . இதை செய்யத்தான் மிகவும் பிரயாசை பட்டது காங்கிரஸ் அரசு அந்த வேலையை சுளுவாக்கும் பணியை செவ்வனே செய்தார்கள் நமது போலி காம்ரேடுகள் .
அருந்ததி ராய் போன்ற அறிவுஜிவிகளோ நாட்டின் சட்டம் இயற்றும் உரிமையையும் தனியாருக்கு கொடுப்பதே இதுன்னு ஓவராக பில்டப் கொடுத்தார்கள் நாட்டின் அனைத்து துறைகளும் செயல் இழந்து லஞ்ச ஊழல் எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலை யாராலும் புரிஞ்சிக்க முடியும் போது அதை எதிர்த்த போராட்டத்தை ஒரு அரசாங்கம் ஒடுக்குவது புரிஞ்சுக்க கூடிய விசயம். ஆனால் இந்த அரசமைப்பை தூக்கி எறிய இருப்பதாக மார்தட்டும் கம்யூனிஸ்டுகள் இத்தகைய எழுச்சியை கைப்பற்றி அரசுக்கு -அரசமைப்புக்கு -முதலாளித்துவத்துக்கு எதிராக திருப்ப முயலாமல் இந்த போராட்டத்தின் தலைமையின் மேல் விமர்சனம் வைத்து கொண்டு "சும்மா" இருந்தார்கள்.
இவர்களுடைய பலமான தலைமையின் கீழ் மக்கள் ஏன் திரளவில்லை என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்களையும் பார்க்கலாம். முல்லை பெரியாறு விசயத்தில் ஓட்டு கட்சிகள் அம்பல பட்டு போனதும் மக்கள் தன்னெழுச்சியாக போராட ஆரம்பித்தார்கள் அதை போலத்தான் இந்த ஊழலுக்கு எதிரான போராட்டமும் ஆனால் அங்கே பானி பூரி விற்பதையும் பரதநாட்டியம் ஆடுவதையும் குறைகூறிக்கொண்டு உக்கார்திருக்கும் இவர்களே மக்களின் ஒரே பிரதிநிதியென சுவர்களில் தனியார் மயம் தாராள மயம் உலகமய எதிர்ப்பை எழுதி எழுதி எதிர்க்கிறார்கள்.
கண்ணிருந்தும் குருடர்களாய் காதிருந்தும் செவிடர்களாய் போன இவர்களை மார்க்சின் ஆவிகூட மன்னிக்காது நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக போராட்டத்துக்கு காரணம் தேடி அந்த போராட்டம் தங்களால் நடத்த முடியாத போது சீச்சீ என்று புளிப்பதாக சொன்னார்கள்.
1) ஊழல் புகாரில் இருந்து தப்பிக்கவே இந்த போராட்டத்தை காங்கிரஸ் தூண்டுவதாக ஒரு கருத்தும்
2) தாராளமயத்தினை தாராளமாக்கவே ஊழலை ஒழிக்க கிளம்பியதாக ஒரு கருத்தும்
3) மசோதாக்களை வரைவது தனிநபர் கைக்கு போவதை எதிர்ப்பதாக ஒரு கருத்து என்றும் பல்வேறு கருத்துக்களை உருவாக்கி அதற்கு கண் காது மூக்கு வைத்து நடமாட விட்டார்கள்.
4) அன்னா ஹசாரே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றது ஆளும் காங்கிரஸ் கட்சி; ஆமாம் அன்னா ஹசாரே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று தாளம் போட்டார்கள் போலி கம்யூனிஸ்டுகளும் தீவிர போலி கம்யூனிஸ்டுகளும். அன்னா ஹசாரே ஆர்.எஸ்.எஸ்.காரர் சரி; அவர் பின்னால் திரண்ட அத்தனை இளைஞர்களும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களா?
5) அன்னா ஹசாரே டிரஸ்டிற்கு கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பணம் வருகிறது என்றது ஆளும் காங்கிரஸ் கட்சி; ஆமாம் கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு ஊழலை எதிர்க்கிறார் என்று பின்பாட்டுப் பாடினார்கள் போலி கம்யூனிஸ்டுகளும் தீவிர போலி கம்யூனிஸ்டுகளும். அன்னா ஹசாரே கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு ஊழலை எதிர்க்கிறார் சரி; அவர் பின்னால் திரண்ட அத்தனை இளைஞர்களும் கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டா ஊழலை எதிர்க்கின்றனர்.
6) அன்னாவின் பின்னால் திரண்டிருக்கும் இளைஞர்கள் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதிக்காதவர்களா என்றது ஆளும் காங்கிரஸ் கட்சி; ஆமாம் இவர்கள் யோக்கியதை தெரியாதா, நேற்றுவரை இல்லாத அக்கறை இன்று இவர்களுக்கு திடீரென்று எப்படி வந்தது என்று சிந்தனையைத் தூண்டும் கேள்வியை எழுப்பினார்கள் போலி கம்யூனிஸ்டுகளும் தீவிர போலி கம்யூனிஸ்டுகளும். பிறக்கும் போதே போராட்டத்திற்கு வராதவர்கள் பின்னாளில் வரக்கூடாது என்பது இவர்கள் சட்டம் போலும்.
7) ஆளும் காங்கிரஸ் கட்சி அன்னாவின் போராட்டத்தை எதிர்ப்பது ஆச்சர்யமானதல்ல. ஆனால் போலி கம்யூனிஸ்டுகளும் தீவிர போலி கம்யூனிஸ்டுகளும் அன்னாவின் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி எடுத்துக் கொடுக்கும் அதே வாதங்களை வைத்து எதிர்ப்பது ஏன்? இவர்களின் எஜமானன் காங்கிரசும் மன்மோகன்சிங்குமா? இவர்களில் தீவிர போலி கம்யூனிஸ்டுகளின் எஜமான விசுவாசம் இன்னும் அதிகம். இவர்கள் காங்கிரசையும் தாண்டி அன்னாவையும் அவரது ஆதரவு இளைஞர்களையும் நக்கலும் நையாண்டியும் செய்து போராட்டத்தின் மீதான தங்கள் வக்கிரமான விமர்சனங்களை வெளிப்படுத்தினார்கள்.
இவற்றின் மூலம் ஒரு போராட்டத்தை கொன்றுவிட்டார்கள். இதுவரை அரசியலே பிடிக்காது என்று சொன்ன நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் இந்த போராட்ட உணர்வை ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளும் ஓட்டுப் பொறுக்காத அக்மார்க் அரசியல் கட்சிகளும் சேர்ந்து மழுங்கடித்து விட்டனர். அவர்களது "எனக்கு அரசியல் பிடிக்காது " என்ற தங்களது முந்தய உணர்வு சரிதான் என்று அவர்களை நினைக்க வைத்து மீண்டும் வீட்டிற்குள் தள்ளி அடைத்த்து விட்டார்கள். இதனால் ஆளும் வர்க்கங்களுக்கும் அதன் அரசியல் கட்சிகளுக்கும் ஆதாயம். கம்யூனிஸ்டுகளுக்கு என்ன பலன்?
இனி இந்த போலி கம்யூனிஸ்டுகளும் தீவிர போலி கம்யூனிஸ்டுகளும் ஊழலை ஒழிக்க என்ன செய்ய போகிறார்கள் என்று பார்த்தால் அவர்களது தனிதனியான நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவார்களே அன்றி ஊழலின் நிழலை கூட தொடமாட்டார்கள்.
சி.பி.ஐ. யும் சி.பி.எம்-மும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒழித்து விடுவோம் என்று ஓட்டு சேகரிக்க கிளம்பி விடுவார்கள். தீவிர போலிகம்யூனிஸ்டுகள் என்ன செய்வார்கள்? தனியார்மயம், தாராளமயம், அந்நிய மூலதனத்தை எதிர்த்து புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்திவிட்டால் ஊழலை ஒழித்து விடலாம் என்று போகாத ஊருக்கு வழி சொல்வார்கள். அதைச்சொன்ன கையோடு நடுத்தர வர்க்கத்தை புதிய ஜனநாயகப் புரட்சியின் நேச சக்தியாக அணிசேர்க்க செயல்தந்திரம் வகுப்பதற்காக ரூம் போட்டு யோசிப்பார்கள். ஆனால் அதே நடுத்தர வர்க்கம் அன்னாவின் பின்னால் அணிதிரண்டு போராட வந்தபோது அணிசேர்க்கை செயல்தந்திரம் எதுவும் இல்லாமல் செயல் இழந்து நின்று விட்டு இப்போது கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறோமே ஏன் என்பது மட்டும் அவர்களுக்கு தோனவே தோனாது. இதன் மூலம் எதிர்புரட்சி வேலையையே செய்கிறார்கள் இந்த துரோகிகள்.
இயக்கம் தளத்தில் இது தொடர்பாக வெளி வந்துள்ள விரிவான ஆழமான கட்டுரையின் சுட்டி இதோ:
http://ieyakkam.blogspot.com/2012/01/blog-post_05.html
Pasted from <http://mail.google.com/mail/?ui=2&view=bsp&ver=ohhl4rw8mbn4>