கையாலாகாத அரசியலும் ஆட்டோ வாடகையும்


இந்த நாட்டின் உபயோகமான பல பொருட்களை உற்பத்தி செய்துவிட்டு குறைந்த கூலியை பெற்று மேலும் மேலும் ஏழைகளாகி வாழ வழியற்றவர்களாக நாள் தோறும் செத்து செத்து பிழைக்கும் பாட்டாளி வர்க்கத்தை திரட்ட முடியாத ஒரு வக்கற்ற தனம் என்ன செய்கிறது .

குட்டி முதலாளிகளையும் , லும்பன்களையும் பாட்டாளிவர்க்கத்தின் முன்னனி படையாக

சிருஷ்டிக்கிறது. அதன் காரணமாக மார்க்சியத்தை திருத்தி அமைக்கிறது - கமிசன் மண்டி காரனால் விவசாயி சுரண்ட பட்டால் அது சுரண்டலே இல்லை என்றும் ஆட்டோ காரனால் மக்கள் பாதிக்கப்பட்டால் அதிகமாக கேட்கப்பட்ட பத்து ரூபாய் ஒரு சுரண்டலே இல்லை என்றும் சொல்லி இந்த நாட்டில் புரட்சிக்கு ஆள் சேர்க்க படும் சூழலில்தான் ஒரு கம்யூனிஸ்டு கட்சி இருக்கிறதென்றால் அது மக இகவை தவிர வேறொன்று இருக்க முடியாது

விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு கிடைக்காத விலைக்கு காரணம் அரசின் கொள்கைகள் மட்டுமே அதஎன்றும் கமிசன் மண்டி காரன் - கந்து வட்டிகாரனின் சுரண்டலே ஒரு பெரியவிசயம் இல்லை என்றும் கூறியும் புதிதாக அந்நிய முதலீடு வந்தால் மட்டுமே விவசாயிகள்

சுரண்டப்படுவார்கள் என சொல்வதன் மூலம் ஏற்கனவே சுரண்டிக் கொண்டிருக்கும் உள்நாட்டு முதலாளி வர்க்கத்தை காப்பாற்றும் இவர்கள் ஆட்டோ தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு ஆட்டோ

ஓட்ட வருவதற்கு காரணமே இந்த முதலாளித்துவ அமைப்பு தொழில்களை உருவாக்க வக்கற்ற அரசுதான் என்பதை கூறாமல் அந்த ஆட்டோ காரர்கள் பொதுமக்களின் மேல் சுமத்தும் சுரண்டலை

நியாயப்படுத்துவதன் மூலம் நாட்டின் பெருவாரியான உழைக்கும் மக்களின் அரசியலை கை மாற்றி விடுகிறார்கள்

பாட்டாளிகளை தேட முடியாது சாதிகளாக மதங்களாக பிரிந்து கிடக்கிறார்கள் என காரணம் சொல்லும் இதே நபர்கள் அதே சாதிகளாகவும் மதங்களாகவும் பிரிந்து கிடந்தாலும் தன்னுடைய வாழ்நிலைமைக்காக அணி சேர்ந்துள்ள தனது சொந்த நலனை முன்னிருத்தும் வணிக‌ வர்க்கத்தை பாட்டாளி வர்க்கத்தின் படையாக எந்த நிபந்தனையும் இன்றி ஆதரிப்பதுடன் ஏற்கனவே அணிதிரண்டுள்ள வணிக‌ வர்க்கம் அணிதிரட்டபடாத பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கையை பேசுமா என்றும் , அணி திரட்டுவதற்கான குறைந்த பட்ச நிபந்தனையாவது ஏற்று கொள்ளுமா என்றும் கேட்கப்பட்ட நமது கேள்விகளை ஒதுக்கி தள்ளுவதுடன் மட்டுமின்றி புரட்சிக்கான அணி சேர்க்கைக்காக என காரணம் சொல்லி சுரண்டலுக்கான புதிய வியாக்கியானம் படைக்கிறார்கள்

அதில் இரண்டு முக்கிய விசயங்கள்

1. சரவணா ஸ்டோரில் வேலைபாக்கும் தொழிலாளிக்கு இழைக்கப்படும் ஜன்நாயகமற்ற திட்டுகளை நியாயப்படுத்தவும் அவன் இன்னொரு முதலாளியாக உருவாகலாம் என தைரியம் கொடுத்து சாக்கு சொல்லவும் செய்து உள்நாட்டு முதலாளித்துவத்துக்கு ஜால்ரா தட்டுவதும்

2.//அப்புறம் திரும்பப் பேசி எடுத்து 75,000 ரூபாய் தந்தான். ஏதோ 1000 2000 கழிச்சுக்கிட்டு டுப்பான்னு பாத்தா இப்படி ஒரேயடியாக 7,500 ரூபாய் அடிச்சுட்டான் சார். இப்படி சும்மா இருந்துகிட்டே சம்பாதிக்கிறானுங்க சார். நீ உருப்படவே மாட்டே என்று சொல்லிட்டுத்தான் வந்தேன். இப்படி சம்பாதிக்கிறவனுங்க, ஆட்டோல ஏற வந்தா பேரம் பேசுவானுங்க, இவ்வளவு தூரத்துக்கு 40 ரூபாயா, கொஞ்சம் நியாயமா, தருமமா கேளுப்பான்னு சொல்லுவானுங்க!//

ஆட்டோவில் ஏறும் எல்லாருக்குமே அதிகமாக பத்துரூபாய் வசூலிக்கும் லும்பதனத்துக்கு

வக்காலத்துதான் ஒரு நாளில் ஏறும் நபர்களில் வட்டிகடைக்காரன் எத்தனை

பேர் சாதாரண பொதுஜனம் எத்தனை பேர் உழைக்கும் வர்க்கம் எத்தனை பேர் என்பதையெல்லம் அனுசரித்து எந்த ஆட்டோகாரரும் தனது கட்டணத்தை நிர்ணயிப்பதில்லை என்கிற அடிப்படை விசயத்தை கூட மறைத்து அரசியல் பேசும் அவசியம் ஏன் வந்தது

அதுதான் பாட்டாளிகளை மறுத்து குட்டி முதலாளிகளை வைத்து அவர்களே முன்னனி பாட்டாளிவர்க்கமாக திரித்து புரட்சியை நடத்திவிட முயலும் திரிபு வாதம் .

3.அதிகமாக வசூலிக்கும் 10 ரூபாயே சரியென வாதிடும் ஒரு வர்க்கம்தான் புரட்சியின் முன்ன்னி படை என இவர்கள் அறிமுகம் செய்வதும்

4.விவசாயிகளுக்கு விற்கும் உரத்தை பதுக்கி அதிகலாபத்துக்கு விற்கும் வியாபாரிதான் நேச்சக்தி என்று சொல்வதும்

5.அணிசேர்க்கையில் மாவோ அல்லது லெனின் சொன்ன எந்த நிபந்தனையும் பேசப்பட மாட்டாது என்பதை தெள்ள தெளிவுற காட்டுகிறது

6.இவர்கள் செய்வது குட்டிமுதலாளித்துவ கோரிக்கைக்கு அடியாளாக பாட்டாளிகளை அணுப்புவதுதானே தவிர - பாட்டாளிகளுக்கான போராட்டமோ புரட்சியோ இல்லை

எனவே இவர்கள் பேசுவது கம்யூனிசம் என்ற பேரில் குட்டிமுதலாளிகளின் அரசியலே. குட்டிமுதலாளிகளுக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே நேசசக்தி என்ற பெயரில் வர்க்க சமரசம் செய்து வைக்கின்றனர். அதைத்தான் குட்டிமுதலாளிகளுக்கு சி.பி.ஐ., சி.பி.எம் செய்கிறது. பெரிய முதலாளிகளுக்கு திமுக அதிமுக மதிமுக தெமுதிமுக எல்லாம் செய்கிறது. என்ன ஒன்னு அவர்கள் ஓட்டு வாங்கி செய்கிறார்கள் இவர்கள் ஓட்டு வாங்காமல் செய்கிறார்கள் அவ்ளோதான் வித்தியாசம். ஓட்டுக்காக வர்க்கப் போராட்டத்தை கைவிடுவதும் வர்க்க சமரசவாதம்தான்; கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்காகவும் நிதி வசூலுக்காகவும் வர்க்கப் போராட்டத்தை கைவிடுவதும் வர்க்க சமரசவாதம்தான்.

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post