கம்யூனிச விவாதம்

என்னிடம் வைக்கப்பட்ட கேள்விகள் அதற்கு நானளித்த பதில்களும் இதோ :

-------------------------

//1. கம்யூனிஸத்தில் தனிநபர் திறமைக்கு மதிப்பு இருக்கிறதா?

//

கம்யூனிசத்தில் தான் தனிநபர் திறமைக்கு மதிப்பும் உரிய வெகுமதியும் கிடைக்கும்

//2. 8 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணிநேரத்திற்கு உழைக்கும்

தொழிலாளி கூடுதலாக பணம் சேர்க்க முடியுமா இல்லையா?

//

கண்டிப்பாக கூடுதல் பணம் கிடைக்கும்

//3. அப்படி பணம் சேர்க்கும் தொழிலாளி அந்த பணத்தை மேலும் பெருக்குவது தவறா? (நான் கொள்ளையடிக்கும் முதலாளிகளைப் பற்றி பேசவில்லை)//

தனி உடமையை பற்றி பேசும்போது கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மூலதனமாக மாற்றப்படாத தனி உடமையை எதிக்கவில்லை மாறாக எந்த ஒரு பணமும் முதலீடாக மற்றவனை சுரண்ட அனுமதி இல்லை

//4. கம்யூனிஸம் என்பது முதலாளிகளுக்கு எதிரானதா அல்லது பணத்திற்கு எதிரானதா? //

கம்யூனிசம் என்பது முதலாளித்துவத்தில் இருந்து பிறக்கும் குழந்தை முதலாளித்துவம் முற்போக்கானது நிலவுடமையை பார்க்கும் போது அதை விட முற்போக்கானது சோசலிசம்

//5. நல்ல முறையில் தொழில் செய்து ஒருவர் பணக்காரர் ஆக முடியாதா? //

நல்ல முறையில் என்றால் என்ன?

//6. ஏழைகள் எல்லாம் பணக்காரர்கள் ஆக முடியுமா அல்லது முடியாதா? //

ஏழை பணக்காரன் என்கிற இரட்டிப்பு பெரும் பிளவுகள் இருக்கும் சமூகத்தில் இருந்து கொண்டு இதை கேட்கிறீர்கள் ஏழை இருந்தால்தான் பணக்காரன் இருக்க முடியும் பணக்காரன் இருந்தால் ஏழை கண்டிப்பா இருப்பான் என்கிற காரணத்தால் - ஏழைகள் இருக்க மாட்டார்கள் பணகாரர்களும் இருக்க மாட்டார்கள்

//7. பணம் என்பது ஆதிக்க சக்தியா அல்லது ஆக்க சக்தியா? //

பணம் சமூக உற்பத்தியில் ஆக்கசக்தியாகவும் தனிநபர் சுவீகரிப்பினால் அழிவு சக்தியாகவும் இருக்கிறது

//எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய தத்துவமே. ஆனால் அந்த எல்லாருக்கும் எல்லாரும் உழைக்க வேண்டும். அவர்களுக்காக கூடுதலாக உழைப்பவர்களை தடை செய்ய முடியாது. அது உழைப்பை முடக்கும். வளர்ச்சியை முடக்கும். //

இது சரியே

//கம்யூனிஸம் என்பது தற்போதைய உலகிற்கு ஏற்ற கருத்தல்ல என்பதை கம்யூனிஸ நாடுகளே நிருபித்து வருகின்றன? நம்ம ஊர் கம்யூனிஸமும்தான் (மே.., கேரளா).//

மேற்கண்டவை எல்லாம் கம்யூனிச ம் உருவான மாநிலங்கள் அல்ல

கம்யூனிஸ்டு கட்சி பேனரில் ஒரு முதலாளித்துவ கட்சி ஆண்ட மாநிலங்கள்

தொடர்ச்சி :

திரு .தேவனால்என்னிடம் கேட்கபட்ட கேள்விகளும் அதற்கு எனது பதில்களும்

-------------------------------------------------------------------------------------------------------

/தனி உடமையை பற்றி பேசும்போது கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மூலதனமாக மாற்றப்படாத தனி உடமையை எதிக்கவில்லை மாறாக எந்த ஒரு பணமும் முதலீடாக மற்றவனை சுரண்ட அனுமதி இல்லை //

//திரு தியாகு அவர்களே,

தனி உடமையை ஒருவர் ஏன் முதலீடாக மாற்றக் கூடாது? பணம் அவன் தன் உழைப்பால் சம்பாதித்த பணம்தானே? அதாவது அவன் தான் உழைக்கும் திறனை பணமாக மாற்றியுள்ளான். அந்த திறனை ஏன் மேலும் பெருக்கக் கூடாது?//

ஒரு பொருளின் உற்பத்தியில் உழைப்புக்கு செலுத்தியது போக மிச்சம் உள்ள உபரிதான் லாபமாக முதலாளிகளால் திரட்டப்படுகிறது

இதை அவனது திறமைக்கான பரிசாக கொள்ள முடியாது

//கம்யூனிசம் என்பது முதலாளித்துவத்தில் இருந்து பிறக்கும் குழந்தை முதலாளித்துவம் முற்போக்கானது நிலவுடமையை பார்க்கும் போது அதை விட முற்போக்கானது சோசலிசம் //

ஜனநாயக நாடுகளில் கம்யூனிஸம் விரும்பப் படுவதில்லை. கம்யூனிஸ நாடுகளில் ஜனநாயகம் இருப்பதில்லை, ஏன்?//

ஜனநாயகம் நாடுகளில் முதலாளித்துவ உற்பத்தி முறை இருப்பதால் தான் கம்யூனிசம் விரும்பபடவில்லை முதலாளிகளால்

இந்த விருப்பங்கள் உருவாக்கும் இடத்தில் முதலாளிகளே இருக்கிறார்கள் ஊடகங்களில் அதான் காரணம்

//முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிஸம் எப்படி பிறக்கிறது? சீனா ஒரு கம்யூனிஸ நாடா? முதலாளித்துவ நாடா?

//நல்ல முறையில் என்றால் என்ன?//

முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளை வளர்க்கிறது வளரும் உற்பத்தி சக்திகள் சமூக உற்பத்தியை அதாவது அனைவரும் ஒன்றாக சேர்ந்து பொருளை உற்பத்தி செய்வதை கோருகிறது ஆனால் லாபம் என்ற வகையில் அதன் பயன் ஒரு தனிநபரின் பாக்கெட்டுக்குள் போவதை சமூகம் விரும்பாத போது முரண்படுகிறது (அப்போது சமூக வளர்ச்சி தடைபடுகிறது) எனவே உற்பத்தி உறவுகளை மாற்றி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது

//மும்பையில் தலைச்சுமையாக இட்லி விற்று பணக்காரர் ஆன தமிழர்கள் ஏராளமாக உள்ளனர். இவர்களது வாழ்க்கை செக்கு மாட்டு வாழ்க்கை போலத்தான். கணவன் மனைவி என இருவருக்குமே சரியான வேலை இருக்கும். தனிநபர்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டும். //

மும்பையில் இட்லி சுடுபவன் எல்லாருமே ஏன் பணக்காரர்களாகவில்லை ஒரு சில உதாரணங்கள் சமூகத்தை பிரதிபலிக்குமா

//இப்படிச் சம்பாதிக்கும் ஒருவர் இட்லிக் கடை போடுகிறார். நாளடைவில் அவருக்கு விழாக் காலங்களுக்கான ஆர்டர் கிடைக்கிறது. இப்படி ஒருவர் (நல்லமுறையில்) முதலாளி ஆவது தவறா?//

விழா காலங்களில் ஆடர் கிடைத்தால் அவரே உக்கார்ந்து விழாவுக்கு முழுக்க இட்லி சுட முடியுமா அப்போ வேலைக்கு அமர்த்துகிறார் அதன் மூலம் அவர்களின் உழைப்பை சுரண்டித்தான் பணக்காரர் ஆகமுடியும்

//ஏழை பணக்காரன் என்கிற இரட்டிப்பு பெரும் பிளவுகள் இருக்கும் சமூகத்தில் இருந்து கொண்டு இதை கேட்கிறீர்கள் ஏழை இருந்தால்தான் பணக்காரன் இருக்க முடியும் பணக்காரன் இருந்தால் ஏழை கண்டிப்பா இருப்பான் என்கிற காரணத்தால் - ஏழைகள் இருக்க மாட்டார்கள் பணகாரர்களும் இருக்க மாட்டார்கள் //

//கம்யூனிஸ நாடுகளில் இந்த இரண்டு பிரிவுகளும் இருப்பதில்லையா? அந்த சமூகத்திற்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? சோவியத் வீழ்ந்த உடனே மக்கள் எப்படி பிச்சைக்காரர்கள் ஆனார்கள்? கம்யூனிஸ ஆட்சியின் நிர்வாகிகள், அதிகாரிகள் மட்டும் எப்படி பணக்காரர்கள் ஆகிறார்கள்? ஏழை பணக்காரர் ஆக முடியும் என்பதை நம்புகிறீர்களா? //

சோசலிசம் நிலவிய நாட்டை கம்யூனிசம் என நினைப்பதே முதலில் தவறு சோவியத் வீழ்ச்சி முன்னரே மாவோவால் எச்சரிக்கை செய்யப்பட்டதுதான் வாசிக்கவும் மாபெரும் விவாதம் (புத்தகம் )

1956 ல் அனைத்து மக்களுக்குமான ஆட்சி என குருசேவ் கொண்டு வந்ததும் வர்க்க போராட்டத்தை கைவிட்டதும் பிரதான காரணம்

//ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக உள்ளதா? அனைவரும் ஒரே உற்பத்தி திறன் கொண்டவர்களா? அதிக உற்பத்தி திறன் கொண்டவருக்கு கம்யூனிஸத்தில் என்ன பாதுகாப்பு உள்ளது?//

ஐந்து விரல்களும் ஒன்று போல் இல்லை என்பதையே அளவு கோலாக கொண்டு சுண்டு விரலை சுரண்டி கட்டை விரல் வீங்குவதால் ஒரு கட்டத்தில் சுண்டு விரல் செத்து மடிகிறது - வளர்ச்சி என்பது சம தர்மத்தி நடக்கவேண்டும் சமமான தர்மமே நிலவ வில்லை என்றால் சமத்தை பற்றி எப்படி பேசுவது

//பணம் சமூக உற்பத்தியில் ஆக்கசக்தியாகவும் தனிநபர் சுவீகரிப்பினால் அழிவு சக்தியாகவும் இருக்கிறது //

//பணம் தனிநபர் உற்பத்தியில் எப்படி அழிவு சக்தியாகிறது? அப்படி ஆனால் அதை தடுக்க கம்யூனிஸத்தை விட்டால் வேறு வழி இல்லையா?

//

பணம் மூலதனமாகிறது மூலதனம் சும்மா இருக்க முடியாது அது எப்படியாகினும் சுரண்டவே வேண்டும் இல்லாவிட்டால் மூலதனம் மரணிக்கும்

மூலதனம் உயிர்வாழ சுரண்டியாக வேண்டிய சூழலில் அது பாட்டாளிகளை அதிகளவு உற்பத்தி செய்கிறது

இந்த பாட்டாளி வர்க்கமே மூலதனத்திற்கு சவ குழி தோண்டுகிறது

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post