முதலில் இந்த விவாதத்தை படிக்கவும்
சோசலிசம் என்றால் என்ன?
சோசலிசம் என்பது அனைத்து உற்பத்தி கருவிகள் , ஆலைகள்
அரசு ஆகியவை பாட்டாளி வர்க்கத்துக்கு சொந்தமாவதும் பாட்டாளிவர்க்கத்தால் உணர்வுபூர்வமாக விஞ்ஞான வழியில் நிர்வகிக்கப்படுவதும் ஆகும்
சோசலிசத்தில் எப்போது அடையப்பெறும் ?
அடிமையாக சுரண்டப்படுபவர்களாக பல்வேறு சாதியாலும் மத்தாலும் பிரிந்து கிடப்பவர்களான வெகுளியாக வாழும் இந்த
இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிவர்க்கம் ஆயுதம் தாங்கி போராடி
தனிசொத்துரிமையை ரத்து செய்து முதலாளி வர்க்கத்திடம் இருந்து அரசு, தனிசொத்து, ஆட்சி அதிகாரத்தை கைபற்றும் போது சோசலிசம் சாத்தியமாகும்
சோசலிசத்திற்கும் ,முதலாளித்துவத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ?
உழைப்பும் சமூக வயமாக மாறியது முதலாளித்துவத்தின் வெற்றி
அதாவது பெரிய தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான மக்களை இணைத்து நடத்தப்படும் ஆலைகள் ஆகியவற்றின் மூலம் உழைப்பு என்பது சமூகமொத்தத்தின் உழைப்பு என்பதை கொண்டு வந்தது முதலாளித்துவம்தான் ஆனால் இந்த மொத்த சமூக உழைப்பின் பயன் தனிநபரின் கையில் கொடுத்தது அதனுடைய முரண்பாடு அதை சோசலிசம் மொத்த சமூகத்துக்கும் மாற்றிவிடுகிறது
உற்பத்தி நடைமுறையில் சோசலிசத்துக்கும் ,முதலாளித்துவத்திற்கும் என்ன வேறுபாடு ? ஒரு உற்பத்தி நடைமுறை என்பது உற்பத்தி கருவிகள் உற்பத்தி சக்திகள் வினியோகம் ஆகியவற்றை கொண்டது .
முதலாளிட்துவ பாணியில் உற்பத்தி கருவி முதலாளிக்கு ந்தமாகும் (ஆலைகள் , கருவிகள்) உற்பத்தி சக்தியானது தொழிலாளிக்கு சொந்தமானதாகும் அதை விலைகொடுத்து முதலாளி வாங்குகிறான்
1.நாள் கூலி 2.மாத கூலி
வினியோகம் என்பது சந்தையை சார்ந்தது – சந்தை என்பது போட்டியில் நடப்பது .
உதாரணமாக ஆயிரம் பேர் வேலை செய்து எடுத்த ஒரு லட்சம் பனியன் களானது சந்தையின் போட்டியின் காரணமாக குறைந்த விலைக்கு போனால் அந்த நிறுவனம் மூடப்படுவதுடன்
தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது .
சோசலிசத்தின் உற்பத்தி கருவிகள் (ஆலைகள் உட்பட) அனைத்தும் தொழிலாளர்களுக்கு பாட்டாளி வர்க்கத்துக்கு சொந்தமானது .
ஒரு தொழிற்சாலையின் மொத்த உற்பத்தி திறன் கணக்கிடுவது அந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எட்டுமணி நேரத்துக்கு மிகாமல் வேலை செய்தால் உருவாகும் பொருட்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கில் கொண்டு அந்த தொழிற்சாலையின் யூனியனால் திட்டமிட்டு செய்யப்படும் பொருள் உற்பத்தியாகும் .
இங்கே தொழிலாளர்களே அந்த நிறுவனத்தை நடத்துவதால்
வேலை என்பது வெளியில் இருந்து திணிக்கப்படுவதாக இருக்காது அவர்களின் உணர்வு பூர்வமான விஞ்ஞான பூர்வமான் உழைப்பு என்பது வழங்கப்பட்டு பொருள் உற்பத்தியானது நடக்கும் .
மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதன் மொத்த உற்பத்தியை ஆகியவற்றை கூட்டினால் கிடைக்கும் கூட்டு தொகையே அந்த நாட்டின் அந்த நாளைய உற்பத்தி பொருள் ஆகும் இது கணக்கிடுவதும் திட்டமிடுவதும் மிக எளிதானதாகும் .
இதற்கான மிக சாதாரணமான அடிப்படைகளை ஏற்கனவே முதலாளித்துவம் வழங்கிவிட்டது. ஏனெனில் எந்த ஒரு முதலாளித்துவ நிறுவனமும் அதன் ஒரு நாளைய உற்பத்தியையும் ஒரு மாதத்தைய உற்பத்தியையும் செலவிடப்படும் மனிதன் உழைப்பை கூலி வடிவிலும் கணக்கிடாமல் ஒரு நாள் கூட தொழிற்சாலையை நடத்தமுடியாது என்கிற போட்டியில் விளைவாக அதன் உள்கட்டமைப்பை ஏற்படுத்தி விட்டன ( இதை மட்டுமே மைய்யமாக கொண்டு இங்கே விவாதிப்பவர்களுக்கு இந்த பதில் போதுமானது என கருதுகிறேன் சுட்டி: ) இதற்கான கூலி என்பது தொழிலாளியின் வேலை நேரம் மற்றும் அவனது ஆற்றலுக்கானதாகவும் அதற்கேற்பவும் இருக்கும்.
சோசலிச சமூக அமைப்பில் இப்போதுதான் முதலாளித்துவத்தின் வயிற்றில் இருந்து பிறந்துள்ள குழந்தை என்பதால் அதன் மிச்ச சொச்சங்களும் வர்க்க போராட்டமும் இன்னும் இருந்து வரும்
கம்யூனிசம் என்றால் என்ன சோசலிசத்தில் இருந்து அது எப்படி எப்போது அடையப்பெறும்?
1.தனியார் சொத்துரிமை , சுரண்டல் ஆகியவற்றை சோசலிசம் ஒழித்து விடுகிறது பதிலாக சமூகத்தின் சொத்துரிமை
அதன் அடிப்படையில் மக்களின் சோதர ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியை நிலைநாட்டுகிறது. தனியார் சொத்துரிமையில் இருந்து சமூகத்தின் சொத்து என்பது வளர முடியாது
( அரசுடைமை ஆக்கபட்ட தொழிற்சாலைகள் , சேவை நிறுவனங்கள் அரசின் கையில் இருக்கும் கனிம வளம் ஆகியவற்றை தனியாருக்கு கையளிப்பதன் மூலம் அரசு சொத்து தனி சொத்தாக மாற்றப்படும் தலைகீழ் நிலமையை இன்றைய இந்தியாவில் பார்க்கும் யாருக்கும் தனிசொத்து என்பது சமூக சொத்தின் நேர் எதிர் பாத்திரம் வகிப்பதை அறியமுடியும்)
2.மார்க்சிய கட்சியாளும் , சோசலிச அரசாலும் உணர்வு பூர்வமான நிர்வாகத்தின் மூலம் சோசலிசத்தில் இருந்து கம்யூனிசத்துக்கு செல்ல ஒரு சமூகம் தயாராகிறது
குறிப்பு: சோசலிச சமூகத்தில் தனிசொத்து ஒழிக்கப்பட்டாலும்
வர்க்க போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறவே செய்யும்
அந்த போராட்டத்துக்கு கட்சி பாட்டாளி மக்களை விஞ்ஞான பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் பண்பாட்டு ரீதியாகவும்
தயார் படுத்தியே தீரவேண்டும் ஏனெனில் இத்தனை நாள் ஆட்சியை , தனி சொத்தை அனுபவித்து வந்த சிறுபான்மை முதலாளித்துவ ஆளும் வர்க்கம் எந்த வகையிலாவது அதை மீட்டுவிட போராடும் .
2. கம்யூனிசத்துக்கான பொருளியல் தொழில்நுட்ப அடிப்படைகளை அமைப்பது மிக இன்றியமையாத தேவையாகும்
முதலாளித்துவத்தில் என்னதான் தொழில்நுட்ப அடிப்படைகள் வீச்சாக இருந்தாலும் அந்த தொழில்நுட்பங்களை உழைக்கும் வர்க்கம் அனுபவிக்க இயலாது . மேலும் கட்டற்ற போட்டி நிலவும் முதலாளித்துவத்தால் தொழில் நுட்பமானது மேலும் மேலும் ரகசியமாக குறுக்கப்படுகிறது (எப்போது ஒரு விசயம் ரகசியமாக குறுக்கப்படுகிறதோ அப்போது அதன் வளர்ச்சி தடைபடும்) – இத்தகைய ரகசியம் பேணுவதற்கு காரணமும் விளைவுமாக தனியார் லாபம் இருப்பதே காரணம்.
ஒரு உயர்தர கணினியையோ அல்லது உயர் தர செல்போனையோ கூட வாங்கும் வர்க்கம் பாட்டாளிவர்க்கமாக இருக்க முடியாது என்பது முதலாளித்துவத்தின் முரண்
சோசலிசத்தின் இந்த தொழில் நுட்ப அடிப்படைகளை இன்னும் அதிகமாக்குவதுடன்
மொத்த உழைப்பின் பயன் ஆனது சமூகத்திற்கே திருப்பி விடப்படுவதால் முன்பை காட்டிலும் பன்மடங்கு தொழில்நுட்ப மற்றும் பொருளாதாட அடிப்படைகளை வெகு விரைவாகவும்
விஸ்தாரமாகவும் பெறமுடிவதால் – சமூக வேகமாக கம்யூனிசத்தை நோக்கி செல்லும்.
மேலும் விஞ்ஞானத்தை மனித இனத்திற்கு எதிராகநிறுத்தும் போக்கை விட செய்து விஞ்ஞானத்தை மனித இனத்தின் விடிவுக்காக அதன் நன்மைக்கு பணிசெய்ய வைக்க ஒரு சோசலிச சிந்தனை பெற்ற சமூகத்தால் மட்டுமே இயலும்.
3.சோசலிசத்தால் புடம்போடப்பட்ட ஒரு சமூகத்தில் வெறும் புறப்பொருட்களின்றி மனிதனின் அகவயமான சிந்தனையும் வளர்ந்து அவனது பாண்பாட்டு ரீதியான நோக்கங்கள் வளர்ச்சி பெறும் போது " சோசலிச மனிதன் " உருவாகும் போது
அதாவது சமூகத்தின் நலனே தன் நலன் என்பதை உணர்வு பூர்வமாக மனிதன் உணர்ந்து கொள்ளும் போது .
ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களது ஆற்றலுக்கேற்ப உழைப்பு பெறப்பட்டு -
ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கு ஏற்ப பொருட்களை பெற்று கொள்ளும் சமூகம் எனப்படும் கம்யூனிச சமூகம் வயப்படும் .
தற்போதைய முதலாளித்துவ தனிமனித நோக்கு நிலையில் இருந்து இது ஒரு கற்பனையாக அடைய விரும்பு ஒரு கனவாக தோன்றினாலும் .
இந்த லட்சியம் உணர்வுபூர்வமான செயல்பாட்டின் அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்து பார்க்கும் விஞ்ஞான பூர்வ அடிப்படையில் – தன்னை போல் பிறரை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஏற்றுகொள்ள கூடிய தத்துவமே.
இந்த கட்டுரை உழைப்பு, உபரி மதிப்பு, கூலி விலை லாபம்
பொருள்முதல் வாத்ம ,இயக்கவியல் பொருள்முதல் வாதம் என வரிசையாக மார்க்ஸ் எங்கெல்சால் கொடுக்கப்பட்ட கருவிகளின் அடிப்படையில் எழுதப்பட்டதே. மேலும் இவை ஒவ்வொன்றையும் கவனமாக கற்றால் மட்டுமே மேற்கண்ட கட்டுரையை பயனுடையதாக நீங்கள் கருத முடியும்
கற்றலும் –உழைப்பும் –கம்யூனிசத்தை பற்றிய பாடமும்
உழைப்பில்லாமல் கற்றல் இல்லை உழைப்பினால் தான் சமூகம் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது . ஆகவே கம்யூனிச சித்தாந்தங்களை கற்றுகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அதற்கான உழைப்பை செலுத்திதான் கற்று கொள்ள முடியும் என்பதை உறுதியாக சொல்வேன் . அதை தவிர்த்து கம்யூனிசத்தை மேலோட்டமாக பார்த்து நானும் விமர்சிப்பேன் என கிளம்புபவர்கள் வீணர்களே இவர்களோட விவாதித்தலும் வீணே மேலும் இத்தகைய அக்கறை கொண்டோர் கம்யூனிசத்தை பேசும் எழுதும் நபர்களுக்கு தனிமடல் இட்டும் , புத்தகங்களை படித்தும் , விசயங்களை சேகரித்து மாதிரி கட்டுரைகளை எழுதி பார்த்தும் மிக சீரியசாக கற்று கொள்ள முன்வர வேண்டும்
விவாதத்தின் மூலம் கற்கலாம் என நினைப்போர் தவறு செய்பவர்களே தனக்கு யாராவது வாழைப்பழத்தை எடுத்து தோலை உரித்து ஊட்டவேண்டும் என நினைப்பவர்களே. இத்தகையவர்களால் அரைகுறையாக வீசப்படும் கேள்விகள் அவர்களின் அறிவைவிட அறியாமையை காட்டுகிறது என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் .
அறியாமை என்பது தவறல்ல ஆனால் அதை ஒரு தகுதியாக நினைப்பதே பெருந்தவறு .
உலகில் எங்கேனும் துன்பப்படுபவர்களை கண்டு உனது உள்ளம் கொதித்தால் நீயும் நானும் தோழனே என்கிற சேகுவேராவின் வார்த்தைகளுடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன்.
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================