தாய் தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்வது ஏன்

தாய் தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்வது ஏன்



செய்திதாளின் மூன்றாம் பக்கத்தில் போகிற போக்கில் எழுதப்பட்டுள்ளது இந்த செய்தி சேலத்தில் பெண் தற்கொலை தனது இரண்டு குழந்தைகளை சேலையில் கட்டி கொண்டு கிணற்றில் குதித்தார் காரணம் காசநோய்

1.தற்கொலை செய்துகொள்ள காரணம் காசநோய் அவருக்கு
2.குழந்தைகளை கொல்ல காரணம்

முதல் விசயம் ஏற்கமுடியாது என்றாலும் அவரால் நோயிலிருந்து விடுபட இயலவில்லை தற்கொலை செய்து கொண்டார் என எடுத்து கொண்டாலும் (தற்கொலையை
நாம் எதன் அடிப்படையிலும் ஏற்றுகொள்ள முடியாது)

இரண்டாவது விசயமே இங்கு பிரதானமாக படுகிறது

ஏன் தன் குழந்தைகளை கொல்ல வேண்டும்

அதுவும் சேலையில் தன்னுடன் கட்டி

"அந்த தாய் தனக்கு பின் தன் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை என கருதி இருக்கிறார் "

இது நமக்கெல்லாம் மிகவும் வெக்கமும் வேதனையையும் தரப்படவேண்டிய ஒரு செய்தி

இதற்குமேல் சமூகத்தின் முகத்திரை கிழிய வேறு ஒரு செய்தி தேவையே இல்லை

இந்த சமூகத்தில் குடும்ப அமைப்பை தவிர எந்த ஒரு பாதுகாப்பும் குழந்தைகளுக்கு இல்லை என்பது

இந்த குடும்ப அமைப்பை போற்றி பாதுகாப்பவர்களும்

இந்த முதலாளித்துவ அமைப்பை போற்றி புகந்து தள்ளுபவர்களும் சிந்திக்க வேண்டியது இல்லையா


இது ஏதோ தற்செயல் நிகழ்வா இல்லை கடந்த 5 ஆண்டுகளில் நடந்த பெண் தற்கொலையின் போதெல்லாம் எடுத்து பார்த்தீர்கள் என்றால் அவர்களுடன் குழந்தைகள்
கொல்லப்பட்டு இருப்பது தெரியும்

இது இலங்கை கடலில் ஆதரவற்ற நிலையில் சுட்டு கொல்லப்படும் தமிழ் மீனவனின் பிரச்சனையை காட்டிலும்
விஸ்வரூபமானது அதன் சமூக காரணிகளின் அடிப்படையில் .

நாம் அனைவரும் வாழும் இந்த சமூகம் அந்த தாய்க்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை

எனவே சங்ககாலத்தில் 

ஈன்று புறந்தருதல் என்தலை கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே

நன்நடை நல்கல் வேந்தர்க்கு கடனே

வேள்வடித்து கொடித்தல் கொல்லர்க்கு கடனே

ஒளிருவாள் அறிஞ்சமம் முறுக்கி

களிறெறிந்து பெயர்தல் காளைக்கு கடனே!

 அகநானூற்று பாடலின் தாயின் குரல்

 இப்போது  என்ன ஆயிற்று ஈன்று புறம் தருதல் மற்றும்

தான் சாகும் போது உடன் கொண்டு போதன் தனது கடன்

என நினைக்க ஆரம்பித்து விட்டால் அந்த தாய்

ஏனெனில் மித்த மூவரின் கடன் மேல் நம்பிக்கை இல்லை

இனிமேலும் இனிமேலும் தாய்கள் சாகும் போது இந்த நம்பிக்கை இல்லாமலேயே இறப்பார்கள் எனில்

இந்த சமூகத்தின்  பரிணாமத்தை புரிந்து கொள்ளாத நமது மூடத்தனத்தை நினைத்து வெக்கப்படவேண்டும்




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post