குழுவாதம் மார்க்சியமா -சூறாவளி தோழர்களே

குழுவாதம் மார்க்சியமா -சூறாவளி தோழர்களே

link: சூறாவளி

//அன்பர்களுக்கு தோழமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.மார்சியத்தை வரட்டு சூத்திரமாக அல்லாது இயங்கியல் கோட்பாடாக சமூகவிஞ்ஞானமாக கற்றுத்தேறுங்கள்.இதன் மூலம் இந்தியாவில் புரட்சிக்கு தடைகற்களாக உள்ள அனைத்தையும் மக இக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அயாராது பாடுபட்டாலும்,குறிப்பிடும் படியான முன்னேற்றம் ஏதும் அடையவில்லை,இனியும் அடையாது என்று கருதுவோரின் கனவுகளை களைப்போம்.இவ்வமைப்புகளின் முன்னேற்றம் என்பது முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டதற்கான காரணத்தை கண்டறிந்து அவற்றை களைய பாடுபடுவோம்! புரட்சிகர பயணத்தில் முன்னேறுவோம்! //

மேற்படி ஒரு கட்டுரையில் எழுதுகிறார்கள் சூறாவளி தோழர்கள்

அவர்களே இன்னொரு இடத்தில்

//மேற்கண்ட எமது ஆசான் தோழர் மாவோ உருவாக்கிய கோட்பாட்டு ஒளியில்தான் மக இக-வையும் அதன் தோழமை அமைப்புகளையும் நாங்கள் எமது நிலைப்பாட்டை வரையறுத்தோம்.சமச்சீர் கல்வி விவகாரத்தில் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்திருத்தவாத பாதையில் செயல்படுகின்றன என்ற ஒரு அம்சத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த அமைப்புகளை புரட்சிகர சக்திகள் இல்லை என்று அறிவிக்கும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் கோட்பாட்டு ரீதியான வரட்டுவாதிகளோ,பத்தினிகளோ அல்லர்.அப்படி ஒரு முடிவுக்கு வருவது பாட்டாளிவர்க்க கண்ணோட்டமோ அணுகுமுறையோ அல்ல என்பதை நாங்கள் மிக நன்றாகவே அறிவோம்.//

இரண்டாவது போட்ட பாராகிராப் முதலில் எழுதுகிறார்கள்

அதாவது மக இக புரட்சிகர அமைப்பு இல்லைன்னு சொல்லவில்லை அப்படி திடீர்னு ஒரு முடிவுக்கு வருவதற்கு நாங்கள் வரட்டு வாதிகள் அல்லன்னு சொல்கிறார்கள் சரியப்பா இப்ப வினவு மக இக புரட்சிகர சக்திகள் அப்படிங்கிறயா இல்லைங்கிறயான்னு கேட்டோம்னா

//ற்கண்ட புரட்சிகர அமைப்புகளின் சீர்த்திருத்தவாத கண்ணோட்டம்,சமச்சீர்கல்வி விவகாரத்தின் மூலம் அப்பட்டமாக இப்போது வெளிப்பட்டுவிட்டாலும்,அவர்களின் இந்த சீர்த்திருத்தவாத கண்ணோட்டம்,இவ்விவகாரத்தில்தான் முதன் முறையாக ஏற்பட்டதாக நாங்கள் கருதவில்லை.இவர்களிடம் இச்சீர்த்திருத்தவாத சித்தாந்தம் எப்போது,எங்கிருந்து,எந்த வடிவத்தில் உள்ளே நுழைந்தது, அது தற்போது இப்புரட்சிகர அமைப்புகளில் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறது, இதற்கெதிராக இப்புரட்சிகர அமைப்புகளில் உள்ள உண்மையான,புரட்சிகர தோழர்கள் மத்தியில் இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.இதற்கெதிராக அவர்கள் உட்கட்சி போரட்டம் ஏதேனும் நடத்துகிறார்களா? என்பன போன்ற ஏராளமான விவரங்களை நாங்கள் சேகரிக்க வேண்டியுள்ளதோடு,இவர்களின் பல்வேறு கோட்பாட்டு முடிவுகளையும்,செயல்பாடுகளையும் இவர்களின் அதிகாரப்பூர்வ இதழ்களான புதியஜனநாயகம்,புதியகாலாச்சாரம்,வினவு ஆகிய ஊடகங்களில் வந்துள்ள கோட்பாட்டுரீதியான கட்டுரைகளையும்,செய்திகட்டுரைகளையும்,நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.அதற்கான பணியை நாங்கள் ஏற்கனவே துவக்கிவிட்டோம்.எமது இந்த ஆய்வுபணிக்கு இக்குறுகியகாலத்திலேயே மிகமுக்கியமான ஆதாரங்களை திரட்டியிருக்கிறோம்.எமது இந்த பணிக்கு உதவவிரும்பும் தோழர்கள் தம்மிடம் உள்ள ஆதாரங்களை எமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்குமாறு தோழமையுடன் கோருகிறோம்.//

நாங்க ஆய்வை துவங்கிட்டோம் எனவே ஆதரங்களை மெயில் பண்ணுங்கன்னு ஒரு கோரிக்கை வைக்கிறாங்க

என்னடாது ஆய்வை முடிக்காமல் வினவும் மக இகவும்
பற்றி இவ்வாறு எழுதுகிறார்கள்

//முதலாளிகள் தமக்கிடையில் தொழிற்போட்டியின் காரணமாக இருவேறு முகாம்களாக பிரிந்துகிடப்பதின் பிரதிபலிப்புகள்தான் வினவையும்,அதன் எதிர்ப்பாளர்களையும் அதிகாரவர்க்கம் என்னும் ஒரே சித்தாந்தம் வழி நடத்தினாலும் இருவரும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேருவதற்கான தேவை ஏதும் இப்போது இவர்களுக்கு எழவில்லை.ஒருவேளை மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் சமச்சீர்கல்வி விவகாரத்தில் மட்டுமல்ல அனைத்துவிவகாரங்களிலும் சீர்திருத்த பாதையில் முழுமுற்றாக மூழ்கி அதிகாரவர்க்கம் என்னும் ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாய் முற்றாகமாறிய பின்பு,இப்பிரிவினர்இருவரும் ஒன்றுசேர்வதற்கான தேவையும்,வாய்ப்பும் புரட்சிகர சக்திகள் தவிர்க்கவியலாத பெரும் சக்தியாய் ஆளும்வர்க்கத்தை முறியடிக்கும் அளவிற்கு பலம்பெரும் போது மட்டுமே ஏற்படும் என்பதை உலகின் பல நாட்டு பாட்டாளிவர்க்க வரலாறுகளில் நாம் பார்த்துதான் வருகிறோம்.//


எத்தனை முரண்பாடு அல்லது முரண்பாடுகளின் மூட்டை இந்த கட்டுரையில் இதை பிதற்றல் என சொல்லாமல் என்ன சொல்வது

இவர்களுக்கு வினவு அல்லது மக இகவுக்கும் எதோ வாய்க்கா தகராறு இருக்கிறது அதை தீத்துகொள்ள
மக இகவின் மீதும் வினவின் மீதும் எதையாவது ஒன்றை சொல்லி அதை ஆய்வுன்னு சொல்லி அந்த ஆய்வை இன்னும் முடிக்கவில்லைன்னு சொல்லிட்டு

இல்லை முடிச்சிட்டம்னு முதல் பாராவில் சொல்லி
இருக்கிற எல்லா பயலுகளையும் குழப்பிட்டு இருக்காங்க

அய்யா சாமி போதுமய்யா விடுங்க போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்க .

சாராம்சமாக

1.வினவு ,மக இகவுக்கும் இவர்களுக்கும் சித்தாந்த ரீதியாக எந்த வேறுபாடும் இல்லை என்கிற போது
வினவை இவர்கள் விமர்சனம் செய்வது வெறும் ஈகோ பிரச்சனையாக மட்டுமே தெரிகிறது

2.இன்னொன்று வினவு அல்லது மக இகவின் மீதான குறிப்பான விமர்சனம் என்று எதையும் இவர்கள் வைக்கவில்லை

3.சமச்சீர் கல்வியில் மக இகவின் நிலைபாடு என்பது எப்படி தவறானது என்பதை விளக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் முடியவில்லை ஏனெனில் இவர்களும் மக இகவின்
கொள்கையை ஏற்று கொண்டபோது சமச்சீர் கல்வி விவகாரமும் அதன் தொடர்ச்சியே இதை ஏற்கவில்லை என இவர்கள் கூறுவது முரணே

4.ஒரு புரட்சிகர சக்தி என்றால் முக்கியமான கொள்கை சம்பந்தபட்ட கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் அது இல்லை என்றாகிவிட்ட போது இவர்க்ளும் இரயாகரனும்
இன்னும் மக இகவை புரட்சிகர சக்திஎன வர்ணிப்பது
ஏன் என விளங்கவில்லை





--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post