முதலாளித்துவத்தில் குடும்பத்தின் நிலை



தற்போதைய குடும்ப அமைப்பானது ஒரு முதலாளித்துவ
சமூகத்தின் அனைத்து கேடான அமசங்களையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்

மனிதன் சந்தையில் கிடைக்கும் பண்டமாகிவிட்ட சூழலில்
அவனது அக புற  தேவைகளே அவனது திறமையை சார்ந்து வெளிப்படும் அல்லது சந்தையால் பாதிக்கப்படும் சூழலில் குடும்பம் மட்டும் அதன் முந்தைய வடிவில் ஒரு
சமத்துவத்தோடு அதற்கே உரிய அன்போடோ இயங்கும்
என கருதுவது அறீவினம் அல்லது இயக்க மறுப்பியல் வாதமாகும் .

குடும்பத்தை சார்ந்து தனிமனிதன் இயங்கிய நிலவுடமை சூழலில் தனிமனிதனை சார்ந்து குடும்பம் இயங்கும் சூழல் மாறும் போது அதன் உள்ளடகக்மான மதிப்பீடுகள் மாறிவிடுகின்றன

அப்படி என்ன மாற்றங்கள் வந்துள்ளன குடும்பத்தில்

1.கூட்டு குடும்ப அமைப்பு இல்லாமல் போனது
2.நிலவுகிற குடும்ப அமைப்பு பணத்தை சார்ந்து இயங்குவது

இந்த இரண்டுக்கும் பொதுவாகவே பணம் முக்கிய பங்காற்றுவதை காணலாம்

பணம் என்றால் உற்பத்தி உறவுகள் என முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்

முதலாளித்துவ உற்பத்தி சக்திகள் தோன்றும்போது பாட்டாளி வர்க்கம் இயல்பாகவே அதன் முந்திய வடிவ குடும்பத்தில் இருந்து மாறிவிடுவது இயல்பு

ஆனால் அந்த மாற்றம் முற்போக்காக அமையாமல்
ஒரு முதலாளித்துவ கருத்தோட்டதில் அமைகிறது

ஒரு கணவன் ஒரு மனைவியிடம் இருந்து வரதட்சனை எதிர்பார்ப்பது என்பதெல்லாம் இந்த லாபநோக்க சிந்தனையின் வெளிப்பாடே.

குடும்பத்தின் புனிதத்தை காக்க பிரம பிரயத்தனம் படும்
இவர்கள் பண்ட உற்பத்தி சமூகத்தின் மனபோக்கில்
குடும்பத்தை படைக்கும் போது அந்த குடும்பத்தின் உறவுகளில் எப்படி உண்மையான அன்பை எதிர்பார்க்க இயலும்

பெண்களின் மீதான ஒடுக்குமுறையை கையாளும் போது
ஒரு ஆண் ஒரு முதலாளியை விட மோசமாக நடந்து கொள்கிறான் அவரை ஒரு சக ஜீவியாக பார்பது இல்லை என்கிற போது மொத்த சமூகத்தின் விடுதலை எப்படி சாத்தியம் அதாவது நீ ஒரு பெண்ணை ஒடுக்கும் போது உனக்கு எப்படி விடுதலை கிடைக்கும் அல்லது சமத்துவத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும்

அதே நேரத்தில் பெண்களுடைய ஒத்துழையாமையே
அவர்களுக்காக போராட்டமாக்கி குடும்ப அமைப்பின் வடிவத்தை சிதைப்பதோ அல்லது தற்போது ஆண்கள் இருக்கும் முதலாளித்துவ சிந்தனையை பெண்களுக்கு புகட்டுவதோ உண்மையான குடும்ப அமைப்பை ஏற்படுத்த உதவாது

முதலாளித்துவ நுகத்தடிக்குள் இருந்து கொண்டு ஆதர்ச
குடும்பத்தை படைக்க முடியாது

அதாவது சமூக மாற்றத்தை கோராமல் குடும்ப மாற்றம்
சாத்தியமல்ல

சமூகமாற்றத்தை கோரும் ஒவ்வொரு செயல்பாடுகளின் பின்னாலும் குடும்பத்தின் மாற்றத்திற்கான அடிப்படைகள் நிறுவப்பட வேண்டும்

அந்த அடிப்படைகள்தான்

ஜனநாயகம் , சமத்துவம் , பொருட்பற்றின்மை , அன்பு


அன்பின் அடிப்படையில் இவற்றை புரிந்து கொள்ளும் போது மாற்றத்தை ஏற்படுத்துவது மிக எளிது

குடும்பத்திலும் சமூகத்திலும்




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post