மூளையை கழுவுங்கள் தோழர்களே

//நூறு கோடிக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்த நாட்டில் ஊடகங்களுக்கு பத்து நாட்கள் வேறு செய்தியே கிடைக்கவில்லை. எங்கள் சானல் வழியாகத்தான் அண்ணா ஹசாரே மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம்கூடத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டன. முதலில் இதுவே மிகப்பெரியதொரு ஊழல். ஊடகங்களுக்கு உரிமம் கொடுத்திருப்பது செய்திகள் தருவதற்கு; யாருக்காகவோ பிரச்சாரம் செய்வதற்கு அல்ல. பிரச்சாரம் செய்வது என்றே கொண்டாலும், எல்லா சானல்களும் அதைச் செய்யக் காரணம் டி. ஆர்.பி ரேட்டிங்க்தான். அதுதான் விசயம் என்றால் நீலப்படங்களைப் போட்டு சம்பாதிக்க வேண்டியதுதானே"  அருந்ததி ராய் (ஜன் லோக்பால் குறித்த பேட்டி, சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி)//

நல்ல கேள்வி அன்னா ஹசாரேவின் போராட்டத்தை இழிவு படுத்த இதைவிட பெரிய அவதூறு  எதையும் சொல்லமுடியாது

ஒருத்த்தன் உண்ணாவிரதம் இருக்கிறான் என்றால் அதை மீடியா கவர் செய்கிறது என்றால் அதுவே அவன் உண்ணா விரதம் இருக்கும் ஆதார கோரிக்கையை தீர்மானிக்கும்
மிக மூலாதாரமான விசயம் என கூவுகிறார் அருந்ததி ராய்

என்ன மகா மட்டமான சிந்தனை இப்படி சிந்தித்தால் எந்த போராட்டத்தை செய்ய இயலும் அய்யோ மீடியா காரன் படம் புடிப்பானே அவன் புழைப்பு ஓட கூடாதே என்கிற கவலையை பட்டு பட்டு அன்னா உயிரை விட வேண்டும் என்பது அருந்ததிராயின் நோக்கமல்ல தோழர்களே ஆனால் அனனாவின் கோரிக்கையை அவரது போராட்டத்தை வேறு எப்படி நிராகரிப்பது என்கிற கவலை அருந்ததி ராய் உட்பட மாவோயிஸ்டுகளுக்கு வந்துவிட்டது


அடுத்த கண்டு பிடிப்பு

//இப்பேர்ப்பட்ட  யோக்கியர்கள் திடீரென்று ஒரு 'மாபெரும்' ஊழல் ஒழிப்பு இயக்கத்தை ஸ்பான்சர் செய்கிறார்கள் எனும்போது சந்தேகப்படவேண்டியிருக்கிறது. குறிப்பாக அலைக்கற்றை ஊழலின் நீதிமன்ற விசாரணையில் அம்பானி, டாடா, மன்மோகன் போன்றோரைக் குறித்த செய்திகள் அடுத்தடுத்து அம்பலத்துக்கு வந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான், குறிப்பான அந்த விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழலை முன்னிலைப்படுத்துகின்ற ஹசாரே பிரபலப்படுத்தப் பட்டிருக்கிறார்//
அதாவது முதலாளிகளின் ஊழலை வெளியே தெரியாமல் காப்பாற்றவே அரசியல் வாதிகளின் ஊழலை எதிர்க்க அன்னா போராடுகிறார் என்கிறது புதிய ஜனநாயகம்

இதில் என்ன முரண்பாடென்றால் இந்த அரசியல் வாதிகள் தான் முதலாளிகளாக இருக்கிறார்கள் என்று வேறொரு கட்டுரையில் தனது ஆய்வா(யாக)க கொட்டுகிறது வினவு

இதே ஊடகங்கள் தானே அரசியல்வாதிகளின் ஊழலை வெளியே கசியவிட்டது அப்போது ஊடகங்கள் புத்தராகிவிட்டாகளா அவர்கள் காசு சம்பாதிக்க இதை செய்தார்கள் என சொல்லவில்லையே இவர்கள்

அப்போ ஊடகங்கள் சொல்வதெல்லாம் காசுக்காக என்கிறா அருந்ததி ராயின் வாதம் அவுட்

இவர்களது மூளை செல்லும் திசை வழி இதுதான்

ஊழலுக்கு எதிராக போராடுகிற எல்லா பேருமே முதலாளித்துவத்தை பாதுகாப்பவர்கள்

அடுத்து தனியார் மயத்தை காப்பாத்தவே ஊழலை
ஒழிக்க நினைக்கிறார்கள்

சபாஸ்

இதல்லவோ கண்டுபிடிப்பு அட மூட முட்டாள்களே அரசு முதலாளித்துவத்தில் ஊழல் உருவாகி குட்டி போட்டு வளர்ந்து அதில் ஒன்றும் பெரிதாக வளரமுடியாதபோது

அடுத்த அவதாரமாக தனியார் மயத்துக்கு போகிறது

இந்த அவதாரங்களை கண்டு மயங்கி எதிரியை கோட்டை விடுகிறீர்கள்

யார் எதிரி முதலாளித்துவம் என்கிற இந்த உற்பத்தி முறையும்
அரச முதலாளித்துவத்தின் வடிவில் இருக்கும் முதலாளித்துவமும் இரண்டுமே எதிரிகள் தாம்

ஆகவே மூளையை பினாயில் போட்டு கழுவுங்கள்



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post