சமச்சீர் கல்வி அரசியலும் அரசியலுக்கு அப்பாலும்


ஒரு பக்கம் அரசு உதவி பெறும் பள்ளிகூடங்கள் இன்னொரு பக்கம் தனியார் நடத்தும் பள்ளி கூடங்கள் அரசு கல்விக்கான சிலபஸ் தனியார் பள்ளிக்கான சிலபஸ்

என பிரிந்து கிடப்பதை ஒன்றாக்குவதிலும் எல்லாருக்கும் ஒரு உயர்ந்த கல்வியை அளிப்பதிலும் முன்னால் கம்யூனிஸ்டு இன்னாள் சோசலிஸ்டுமான கருணாநிதி(?)

அயராத பாடுபட்டு ஒரு கல்வி கொள்கையை வகுத்து அதற்கு சமச்சீர் கல்வி என பெயரிட்டுள்ளார்

அவரது கடமைதவறாத உணர்ச்சியை நாம் பாராட்டித்தான் ஆகனும் ஏனென்றால் அண்ணா சொன்ன கடமை கண்ணியம் கட்டுபாடு இதில் கொஞ்சமும் விலகாதவர்

கருணாநிதி ?

கல்வி என்பது எந்த பாகங்களை அடிப்படையாக கொண்டது

1.பாடதிட்டம் (எளிதாகவும் ஆழமாகவும் புரியும்படியும் உலகதரத்திலும் )

2.ஆசிரியர் களின் தரம் (பாடதிட்டத்தில் இருப்பதை விடஒரு பங்கு அதிகமான அறிவுத்திறன் , கல்வி போதிப்பதில் தனியாத தாகம், நயா பைசா கணக்கு

பார்க்காமல் கல்வியை அதன் பயனுக்காகவே போதித்தல்)

3.பாடசாலைகளின் கட்டமைப்பு(ஆய்வகம், கக்கூஸ் , குடிநீர்,காற்றோட்ட வசதி)

4.மாணவர்கள் கல்வி பெறும் சமூக பொருளாதார சூழல் (இந்த வரிசை என் அறிவுக்கு எட்டியது)

இந்தியாவில் அனைவரும் கல்வி பெறும் உரிமையே 2009ல் தான் வந்துருக்குன்னு காறி துப்புகிறார் ஒரு தோழர் அது இருக்கட்டும் .

சமச்சீர் கல்வி என்பது இருக்கிற அரசு பள்ளி மாணவர்களை தனியார் பள்ளி மாணவர்களுடன் சமமாக்குவது அதாவது பாடத்தை அப்படியே சமமாக்குவது

ஒரு கேள்வி ஏன் தனியார் பாடதிட்டங்கள் வளர்ந்தது ஏன்னா வளர்ந்து இருந்தால்தான் அவன் மார்கெட்டில் நிக்க முடியும் என்கிற அடிப்படை சந்தை பொருளாதார விதியால்

வளர்ச்சிக்கான போட்டியால் வளர்ச்சி அடைந்தான்

அப்படியே கேமராவை நாம் அரசு பள்ளிகளுக்கு திருப்புவோம் என்னாகிறது

கல்வி போதிச்சு காசு சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை மாசாமாசம் மணியடிச்சா சம்பளம் வந்துடும் எனவே போதிச்சாலும் போதிக்காட்டாலும் வேலைக்கு

பங்கமில்லை எனவே நினைச்சா வாத்தியாரு பாடம் நடத்துவாரு நினைக்கா விட்டால் இல்லை அவரை கேள்வி கேட்டும் டி வருடம் ஒருமுறை வருவாறு பிரியாணி வாங்கி சாப்பிட்டு இந்த பள்ளியின் கல்வி தரம் சூப்பருன்னு எழுதிட்டு போயிடுவாரு

ஏனெனில் சர்வைவல் ஆப் பிட்னெஸ் அவருக்கு பொருந்தாது ஒருவகையில் இதை நாம் எதிர்க்கனும்தான் ஆனால் பாருங்கள் இந்த முதலாளித்துவ உற்பத்தி நடக்கும்

சூழலில் கல்வி ஒரு பண்டமாகி போன சூழலில் கல்வியை ஒரு தேவையாக கருதி அதை படிப்பிப்பதை ஒரு கடமையாக உணர்வு பூர்வமான வேலையாக செய்யும் ஆசிரியர்களை நீங்கள் அரசு பள்ளியில் எதிர்பார்ப்பது சமூகத்தை கணிக்காத நோக்குன்னு

சொல்வேன்

ரைட்டு இப்ப நாம பேசிட்டு இருக்கிறது இரண்டாவது பாயிண்டுதான் ஆனால் நம்ம கம்யூனிச சிந்தாந்தி முன்வைக்கும் விசயம் முதலாவது அதாவது பாடதிட்டம்

சரி 1 க்கும் 2 க்கும் சம்பந்தம் இல்லையான்னு நீங்க

கேட்கலாம் முழிச்சிட்டு இருந்தா கேட்பீங்க இல்லைன்னா போலி கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து கோசம் போடுவீங்கமுதலாவது பாடதிட்டம் இரண்டாவது ஆசிரியர்களின்

தரம்னு சொன்னோம் இல்லையா பாடதிட்டத்தை மாற்றிவிட்டால் கல்வி வளர்ந்திடும்

என்கிறார் நம்ம கருணாநிதி இது முழுக்க முழுக்க கருத்துமுதல் வாதம் .

ஏனெனில் சமூகத்தின் வாழ்நிலையே சமூகத்தின் உணர்வை தீர்மானிக்கிறது அப்படின்னு கிழவன் மார்க்ஸ் சொன்னதை உள்ள புகுத்தி பார்த்தால்

பள்ளிகூடம் என்கிற சமூகம் அரசு பள்ளிகூடம் என்கிற சமூகம் பயனற்றதாக எந்த முன்னேற்றமும் அற்றதாக நாளுக்கு நாள் மாறிவரும் சூழலில்

அதன் கருத்து என்பது மாறவே மாறாது கொப்புறான சத்தியமா இதான் உண்மை

மூணாவது பாயிண்டு கல்வி சாலைகள் வசதி இதெல்லாம் பேச போனா நம்ம காம்ரேட் யாரோ வீடியோ எடுத்து வரும் அது

ஒழுகும் கூரை , அறைகள் இல்லாத வராந்தா எழுபது வாத்தியாருக்கு ஒரு ஆசிரியர் இதெல்லம் கல்வியை பாதிக்கும் அடுத்த காரணிகள்

அடுத்து இருப்பது 300 மில்லியன் பேர் ஸ்கூலுக்கு போகிறான் ஆனால் காலேஜுக்கு போகலை ஏன் போகலை படிக்க வசதி இல்லை

இதுவும் கல்வியை பாதிக்கும் ஒரு காரணிதான் இப்ப நம்ம சகாக்கள் வைக்கும் வாதம் என்னான்னா 1991 க்கு அப்புறம் தான் கல்வி தரம் அதாவது அரசு பள்ளிகளின் தரம் தாழ்ந்தது என்கிற வாதம் ஒப்புக்கு கூட சரியில்லாதது ஏன்னா

1950 இல் இருந்து லிட்ரசி என்பது வருசத்து 10 சதவீதம் மட்டுமே கூடி இருக்கு குறையவோ அதிக வளர்ச்சி அடையவோ இல்லை

சுருக்கமா என்ன சொல்றாங்கன்னா கல்வி தனியாருக்கு போனதால அரசாங்க வாத்தியாருங்க ஒழுங்கா நடத்தலையாம்

இதில ஒரு வக்கத்த நிலமை தெரியுதா அதான் அரசு பள்ளிகளில் கல்வி போதனை சரியில்லைன்னு சொல்லி போராட முடியாத வக்கத்த நிலை இது ஒரு முரண்பாடு என்னன்னா ஆசிரியர்களாகிய தொழிலாளர்களை தொழிலாள்ர்களாகிய பொதுமக்கள் தரும அடி கொடுக்கும் முரண் அது

அதை எப்படி தீர்க்கலாம் அரசு பள்ளிகளில் கல்வியை எப்படி வளர்க்கலாம் என்பதற்கெல்லாம் தீர்வு சொல்லாமா

நேரா சமச்சீர் கல்வியை ஆதரிச்சு பிரசாரம் செய்தால் எல்லாம் சரியாபூடும் என்று நம்புவது மதவாதம்

அரசு பள்ளிகளில் என்ன நடக்குதுன்னா ஜனநாயகமற்ற கல்வி போதனை அதாவது நான் சொல்வேன் நீ கேட்கனும் என்பது ஒருவழிப்பாதையான கல்வி

அங்க கல்வி வளரவே முடியாது

இதே தனியார் பள்ளிகளிலும் அதான் இருக்கு ஆனால் இங்க மார்க்கை நோக்கிய உந்துதல் இருக்கு மார்க்கு எடுக்க வைக்கனும் என்கிற உந்துதல் அதுவும் ஜனநாயகம் இல்லை

சரி இப்ப வந்திருக்கிற சமச்சீர் கல்வி சரியா இல்லையா தரமா இல்லையா அதை பேசுன்னு கேட்கிறாங்கன்னு வச்சிக்குவோம் இவங்களும் மற்ற மூன்று பாயிண்டுகளை பேசாம கலைஞரின் பீரங்கி மாதிரி பாடதிட்டத்தை மட்டும் பேசுவது ஏன்

சரி அதை விடுங்க

இப்ப இருக்கிற அரசு பாடதிட்டத்தை விட சமச்சீர் பாடதிட்டங்கள் உயர்ந்தவைதான் அதில் பிழை இருப்பதாக நக்கீரன் பாணியில் சொல்லி பிழை இல்லைன்ன உடனே ஜெயாவின் கட்சி தோற்குது

(ஜெயா செய்வதும் சொந்த ஈகோ அரசியல்தானே தவிர நான் மேலே சொன்ன அந்த மூன்று காரணங்களுக்காக அல்ல )

ஜெயலலிதாவுக்கு கல்வியை வளர்க்கனும் என்கிற சமூக சிந்தனை துளிகூட இல்லையோ அதை போல கருணாநிதிக்கும் இல்லை

கருணாநிதி ஓட்டு வங்கிக்காக சமச்சீர் கல்வியை கொண்டு வந்தால் அதை தடுக்கனும் என்கிற ஒரே நோக்கம்தான் ஜெயாவுக்கு இருக்குமே தவிர கல்வியின் மீதான பெரிய உயர்ந்த கண்ணோட்டம் எல்லாம் இல்லை அதான் கேஸ் தோற்குது

அடுத்து இதனுள் உள்ள கேள்வி ஏன் இல்லாதவன் படிச்சிட்டு போகிறானேன்னு

இல்லாதவனின் கல்வி வாய்ப்பை உண்மையில் உயர்த்துவதில் நமக்கு மாறுபட்ட கருத்து இல்லை

ஆனால் காசு கொடுத்து படிக்கும் மாணவனின் கல்வியை பறிப்பதிலும் நமக்கு உடன்பாடு இல்லை

மேலும் பேசுவோம்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post