மார்க்சியமும் செயமோகனின் கட்டுரையும்

சுட்டி: http://www.jeyamohan.in/?p=10813


//ஒருவேளை மார்க்ஸிய இலட்சியவாதம் மற்றும் தத்துவத்தின் பங்களிப்பு காலம்செல்லச் செல்லக் குறையலாம்.
ஆனாலும் மானுடச் சிந்தனையின் வளர்ச்சியில் அதன் பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது// ஜெயமோகனின் கட்டுரை இந்த இடத்தில் முடிகிறது இவ்வாறு விசயங்களை பிரித்து பிச்சி போடுகிறது

மார்க்சியத்தை இலட்சியவாதம் என சொல்வதும் மதம் என சொல்வதும் ஒன்றுதான்

நடைமுறைக்கு ஒத்துவராத எதுவுமே மார்க்சியமல்ல நாம் நடைமுறைக்கு ஒத்துவருவதாக எதை கோருகிறோம் என்பது அவர்கள் எதை கோருகிறார்கள் என்பதும்தான் இங்கே வேறுபாடு தவிர மார்க்சியத்தில் எந்த வேறுபாடும் இல்லை

பாட்டாளி வர்க்கமே இழப்பதற்கு ஏதுமில்லாத வர்க்கம் என்ற நிலையில் அதன் முன்னனி பங்கை வகிக்கிறது புரட்சிகர மாறுதல் மூலமே நிலவும் ஒடுக்குமுறையான அரசை ஒடுக்கும் வர்க்கங்களை ஒடுக்கமுடியும் என்பதை இலட்சியவாதம் என சொல்லிவிட்டு

அதற்கான செயல்முறையை செய்த செய்துகாட்டிய மார்க்சியத்தை வளர்த்தெடுத்த லெனின் ,ஸ்டாலின் , மாவோ வை மறுக்கும் இவர்கள் வேறொரு நடைமுறையை முன்வைக்கவேண்டும்

இனியும் ஒரு காலத்தில் அமையும் சமூகம் கூட மார்க்சியத்தை புறந்தள்ள முடியாதென ஆருடம் கூறுபவர் ஏன் நடைமுறையை ஏற்றுகொள்ளவில்லை

ஏனெனில்  தத்துவத்தின் உரைகல் நடைமுறைதான் சொகுசாக பேசி திரிய இன்றைக்கு பலநூறு தத்துவங்கள் இருக்கலாம் ஆனால் அதனுடன் வைக்கப்பட்டு பூசிக்கப்பட வேண்டியதல்ல மார்க்சியம்

அடுத்து

//மார்க்ஸ் சொன்ன மார்க்ஸியம் என்பது ஒரு வரலாற்றுவாதம். அன்றைய சமூகவியல் தரவுகளின் அடிப்படையில் மனித குலத்தின் வரலாற்றை ஒட்டுமொத்தமான நகர்வாக உருவகித்துக்கொண்ட மார்க்ஸ் அந்த வரலாற்றுக்குள் உள்ளுறையாக ஒரு வளர்ச்சிப்போக்கு இருப்பதாக ஊகித்தார். அது பழங்குடி வாழ்க்கையில் இருந்து நிலப்பிரபுத்துவத்துக்கும் அதில் இருந்து முதலாளித்துவத்துக்கும் நகர்கிறது.//

மார்க்சியத்தின் இரு பெரும் பிரிவுகள் அல்லது விளக்கங்கள் என நாம் மார்க்ஸ் முன்னிருத்தியது

வரலாற்றியல் பொருள்முதல்வாதம்
அடுத்து இயக்கவியல் பொருள்முதல்வாதம்

வரலாற்றை புரிந்துகொள்ளவே மார்க்சுக்கு உதவியது இயக்கவியல் பொருள்முதல்வாதம் எனும் நிலையில்

காலை மறுத்து இவர் தலையை மட்டும் பார்க்கையிலெயே தெரிகிறது மார்க்சியத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு இருக்கிறார் அல்லது
கபடமாக மார்க்சியத்தை திரித்து சொல்கிறார் என்பதே

இயக்கவியலின் படி ஒரு பொருளுக்குள் உள்ளுறைந்த முரண்பாடுகளே அதன் வளர்ச்சிக்கு காரணம் அது அனுவானாலும் அண்டமானாலும் சரி என்கிற கோட்பாட்டில் இருந்தே

அதை வரலாற்றுக்கு பொருத்தி பார்த்து வரலாற்றில் இந்த முரண்பாடு வர்க்க முரண்பாடாக இருப்பதை உரைக்கிறார்

முதலாளியும் தொழிலாளியும் நிலவுவது சமூகத்தின் முரண் இயக்கமே என்பதை நாம் மறுத்துவிட்டு மார்க்ஸ் சொல்லும்
தத்துவத்தை சரி என எப்படி சொல்வது
சொல்கிறார் அதுதான் ஜெயமோகன்

//லெனின் ருஷ்யாவின் அன்றையநிலைக்கு ஏற்ப ஒரு விளக்கம் அளித்தார். அன்று அரசு பலவீனமானதாக இருந்தது. படைவீரர்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தார்கள். அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவர்கள் விரும்பிய கோஷத்தை எழுப்பிச் சட்டென்று தலைநகரைத் தாக்கி அரசைக் கைப்பற்றினார் லெனின். உற்பத்தி சக்திகளில் உற்பத்தி உறவுகளில் எந்த மாற்றமும் உருவாகவில்லை. //

ஒரு பெரிய புரட்சியையே மறுத்தலிக்கும் இவர் சொல்கிறார் அவர்கள் விரும்பிய கோசத்தை சொன்னால் புரட்சி வந்துவிடுமாம் இதைவிட கேலிகூத்து இருக்குமா

இந்தியாவில் ஆர் எஸ் சின் கோரிக்கையை ஏற்றுகொண்டதாக சொல்லி கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை பிடிக்க முடியுமா ?

//அரசைக் கைப்பற்றியபின் இந்த மாற்றங்களை அரச அதிகாரத்தின் துணையுடன் மேலிருந்து கீழே கொண்டு செல்லலாம் என்றார். அதாவது மார்க்ஸ் சொன்னதற்கு நேர் தலைகீழ். இதுவே லெனினியம். லெனின் செய்தவற்றை மார்க்ஸ் அறிந்தால் கல்லறையில் நெளிவார் என்ற ஃபூக்கோவின் சொற்றொடரின் பின்புலம் இதுவே.//

மேலிருந்து செயல்பட வேண்டிய அவசியத்தை லெனின் ஏன் வலியுறுத்தினார்

கீழிருந்து அரசதிகாரம் கட்ட முடியாமல் இருப்பதன் காரணம் என்னவென நாம் ஆராயாமல் கீழிருந்து கட்ட சொல்வது சரியல்ல

நிலவுகிற சமூகத்தின் அதிகாரத்தை மாற்றி பாட்டாளி வர்க்கத்தின் கையில் கொடுப்பதே கீழிருந்து அதிகாரத்தை மாற்றுவதுதான்

அதல்லாமல் மேலே வேறு யார் இருப்பார்கள் என ஜெமோவுக்கே வெளிச்சம்

நாளையே புரட்சி நடத்தான் பாட்டாளி வர்க்க படை ஆட்சியை கைபற்றி ஆவண செய்யும் இதற்கு மேலிருந்து கீழிருந்து என் பாகுபாடில்லை

அறிவில் சிறந்த பாட்டாளிகளை மூட்டை சுமக்க வைப்பது என கம்யூனிசத்தை புரிந்து கொண்டால் உங்களை ஒரு முட்டால் என துணிந்து கூறலாம்
ஏனெனில் மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்கும் வித்தியாசத்தை கலைந்த நிலையில் ரெடிமேடாக இருக்கவில்லை புரட்சி நடந்து முடிந்தவுடன் அந்த அரசு

அது நீண்ட கால போராட்டத்தின் பிரசவித்த குழந்தை அதன் கைகளிக் அம்பாரத்தை ஏற்ற இயலாது

மார்க்சிய தத்துவம் , லெனின் அரசியல் , ஸ்டாலினின் அரசமைப்பு எல்லாமே மார்க்சியத்தின் வழியமைக்கப்பட்ட வடிவங்களே ஒன்றை ஏற்றுகொண்டு மற்றொன்ற தள்ள முடியாது

நமக்கு ஸ்டாலின் மேலும் மற்றவர்களின் மேலும் விமர்சனம் இருக்கு என்பது மார்க்சியத்தின் மீதான விமர்சனம் அல்ல

முடிவாக ஒரு சமூக மாற்றத்தை விஞ்ஞான ரீதியாக அமைக்கையில் அது தோற்று போவதற்கான வாய்ப்புகளை கம்யூனிச மூலவர்கள் அறிந்தே இருந்தார்கள்

அது தோற்று போவதில் பெரும்பங்கு வகிப்பது எதிர்புரட்சி மற்றும் மற்ற முதலாளித்துவ நாடுகளின் சதி உள்ளடங்கியதாகும்

இவரை போன்ற வலதுசாரிகள் இதை முழுக்க மறைத்து மொத்தமாக சோசலிச கட்டமைப்பு என்பதே ஒத்துவராது எனத்தான் சொல்லி திரிகிறார்கள்

ஒரு ராக்கெட்டை ஏவுதல் என்பது ஒரு மின்னனு சாதனைத்தை படைத்தல் என்பது எப்படி தவறு நேராமல் செய்ய முடியாதோ அதைபோலவே ஒரு விஞ்ஞான அடிப்படை யான சமூகத்தின் விசயத்தில் நூற்றுக்கு நூறு சரியாக நடக்கவேண்டும் என சொல்வது சிறுபிள்ளைத்தனம்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post