செக்ஸ் குறித்தான பார்வை

சுட்டி:வினவு கட்டுரை

//செக்ஸ்னா அது ஐஞ்சு நிமிசத்து மேட்டரு, வந்தமா, முடிச்சமான்னு போறதுக்கே ஜனத்துக்கு டைம் இல்ல, அதப்போயி இந்த நைனா 26மணிநேரமும் பேசிக்கினு, எழுதிக்கினு, போய் ஒரு நல்ல டாக்டரப்பாருயா வெண்ணை!////

வினவில் வந்த ஒரு கட்டுரையில் வந்த வரிகள் இவைதாம்

எல்லாமே பரிணாம வளர்ச்சியின் வழி வளரும் போது செக்ஸில் மட்டும் மிருக த்தின் உணர்வு அளவுக்கே தோழர்கள் சிந்தனை செய்வது வியப்பளிக்கிறது

நாம் தொடர்ந்து இவர்களை படித்து பார்த்து வருவது வேண்டுமென்றே நொட்டை சொல்வதற்கல்ல

மனிதனின் பல்வேறு உணர்வுகளுக்கு இவர்களின் பதில் என்னவாக இருக்கிறது என்பதை காணவே

சாரு நிவேதிதா அவரது தேகம் நாவல் இவற்றை விட்டு விடலாம் (அதை படித்து அதன் மீது விவாதிக்கலாம் )

ஆனால் கலவி என்கிற விசயத்தில் பார்பனியம் எத்தகைய  டக்குமுறைகளை கொண்டு இருந்ததோ மதம் எந்தமாதிரியான கருத்து கொண்டு இருந்ததோ அதையே ஒரு புரட்சிகர  கட்சியின் தோழர்களும் கொண்டிருப்பது
நம்பமுடியாத உண்மை

வந்தமா முடிச்சமா என ஐந்து நிமிட கலவி முடியும் வேலை என்கிற போது

அதை எந்த பரிணாமத்தில் சொல்கிறார்கள் என நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது

இன்றைய சூழலில் ஒரு தனிநபருக்கு மன உடல் ஓய்வுக்கான மிகப்பெரிய விசயமாக கலவி பார்க்கப்படும் சூழலில்

நிறைய பிரச்சனைகளுக்கு கலவி அருமருந்தாக அமைகின்ற வேளையில்

ஒரு விஞ்ஞானபார்வையே இல்லாத மடையர்களை போல பேசும் இவர்கள்

லீணாவின் கவிதையில் வெளிப்படும் எள்ளலை எப்படி புரிந்துகொண்டு இருப்பார்கள என நாம் யோசிக்க  தூண்டுகிறது

காதலை குறித்து முன்னர் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார்கள் அதை கொண்டே

அடுத்து ஒரு கட்டுரையில் முதலாளித்துவ உலகில் இருக்கும் அன்பு பாசம் போன்றவை எல்லாம் பொய் என்பதுபோல ஒரு கட்டுரையும் படித்து

புதிய கலாசார நோக்கில் இந்த உணர்வுகளை இவர்கள் எப்படி அனுகுவார்கள் என்கிற தோராயமான கருத்துக்கு வராவிட்டாலும்

மனித மனம் அதன் வெளிப்பாடுகள் அதன் ஏக்கம் தனிமனிதனின் விருப்பு வெறுப்புக்கள் அவனது வெளிப்பாடுகள்
அவனது இலக்கியம் அவனது தனிமை

இவற்றின் மீது வெறும்  வெற்றிடம் மட்டுமே கொண்டு கடந்து செல்கிறார்கள்

நாளைய மனிதனுக்கு இவர்கள் கொண்டு செல்வது வெறும் வறட்டு தத்துவம் தான் என்பது தெளிவாக விளங்கிட்டு 

1.மனிதனின் செக்ஸ் என்பது இவர்கள் சொல்வதுபோல இச்சை தீர்பதற்கு மட்டுமல்ல
(நான் காமத்திலிருந்து கடவுளுக்கு என போதிக்கவில்லை )என்றாலும்
காமம் அதன் பரிணாமத்தை புரிந்து கொள்ளாமல் உளரும் உளரல்களை கண்டிக்கிறேன்

2.இலக்கியவாதிகளின் அற்பதனத்தை விமர்சிக்கும் இவர்கள்
இலக்கியமே அற்பத்தனமானது என சொல்வதன் மூலம்
மீண்டும் இலக்கியத்தை குறித்த அறியாமையில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள்

3.சமகால இலக்கியத்தின் நிழலை கூட தொடாத இவர்கள்
வாழும் காலத்திலேயே பின்நோக்கியே செல்கிறார்கள்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post