சுட்டி:http://www.jeyamohan.in/?p=7305
தெரிந்தோ தெரியாமலோ சாதிய கலாசாரத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் ஆனாலும் படித்து நாகரீகமாக வாழும் நம்மிடம் நமது சொந்த சாதி பற்றிய பெருமையோ தாழ்மையோ வேண்டாம் என ஒதுக்கி இருக்கிறோம் .
சாதி மூலம் நமக்கு ஏதும் வரலாறு இருந்தால் அது தேவையற்றது . ஏனெனில் சாதி ஒழிக்கப்படவேண்டிய
இடத்துக்கு நாம் வந்துவிட்டோம் ஆனால் செயமோகன் போன்ற வலதுசாரிகளுக்கு அது பிடிப்பதில்லை
நாலுபேர் கூடுமிடத்தில் சாதியை சொல்லாமல் உரையாடுவது முட்டையை கக்கத்தில் இடுக்கிட்டு பேசுவது போல
இருக்கிறது என்கிறார்.
ஒருவேளை தனது சொந்த அனுபவத்தில் அப்படி சொல்லலாம் அவர் ஆனாலும் தமிழகத்தின் நாலுபேர்
கூடுமிடங்களில் சந்திப்புகளில் சாதியை சொல்லிவிட்டு அறிமுகம் செய்வது முட்டையை அல்ல கோழியை கக்கத்தில்
இடுக்கிட்டு பேசுவது போலத்தான் ஏனெனில் இறங்கிய இரண்டு கோழிகளும் சண்டைபோட ஆரம்பிக்கும்
பிறகு அது மனிதர்களுக்கிடையேயான சண்டையாக மாறிவிடும் .
//ஆனாலும் சாதி சார்ந்த இழிவு, மேன்மை இரண்டில் இருந்தும் எளிதில் விலகிவிட முடியாது. அது மனப்பழக்கமாக அடிமனத்தில் நீடிப்பது. அதை வெல்ல மிகச்சிறந்த வழி என்பது அதை கேலியாக, பகடியாக ஆக்கிக்கொள்வதே. ஒளித்து வைப்பதல்ல.//
சாதிசார்ந்த தாழ்மை ,உயர்வு என்பது மனபழக்கமென்றால் அதை பகடியாக்கி பேசுவதும் மனபழக்கமாகிவிடும்
ஜெயமோகன் சொல்கிறார் சாதியை ஒழிப்பதற்கான மனபழக்கத்தை அல்ல அதை தொடர்வதற்கான மனபழக்கத்தை குறித்து
சிகரெட்டை குறித்து நமக்கு மன பழக்கம் இருக்கலாம் கஞ்சாவை குறித்து மனபழக்கம் இருக்கலாம் அதற்காக விளையாட்டாக
கஞ்சா குடிப்பது அதிலிருந்து மனபழக்த்தை விடுவிக்காது மற்றொரு பழக்கமாக்கிடும்
அடுத்து சாதி குறித்த ஜெயமோகன் நினைப்பதை அனைவரும் நினைக்க இயலாது அவர்கள் சாதி குறித்து கட்டமைத்த பிம்பம் மட்டுமே இருக்கும் குறிப்பாக செயமோகன் இப்படி சொல்கிறார்
//சாதி சார்ந்து புறவயமாக ஆராயும் ஒருவர் இரு விஷயங்களில் இருந்து எளிதில் விடுபட முடியும். ஒன்று சாதிமேன்மை அல்லது கீழ்மை என்பது வெறும் ஒரு பொருளியல் கட்டுமானமே. நிலத்தை அடைந்த சாதி மேல்சாதி. இழந்த சாதி கீழ்சாதி. இந்த மிக எளிமையான வாய்ப்பாடு சாதிகளின் அடுக்கதிகாரத்தை எளிதில் விளக்குகிறதென்பதை காணலாம். இந்த அடுக்குமுறைக்கு இன்று பொருளே இல்லை.
//
நிலத்தை இழந்த சாதி கீழ் சாதி என்றால் அவன் இழந்த நிலத்தை பெறாமல் கருத்து ரீதியாக விடுபட முடியாது
அதற்கு போராடவே செய்வான்
போராடுபவனுக்கு சாதி பற்றிய பேச்சு ஒரு பகடி அல்ல அது இரத்தத்தில் எழுதப்பட்ட வரலாறு
கக்கூஸ் அள்ளுபவன் சாக்கடை சுத்தம் செய்யும் சகோதரனுக்கு சாதி பேச்சு மாலை நேர விருந்தில் தெரிக்கும் பகடியாக இருக்காது ஆக இந்த மனிதர்களுக்கு செயமோகன் பேசவில்லை அவர் மேல் சாதியிலேயே சம அந்தஸ்தில் இருக்கும் சாதிகளை கலந்துறவாட சொல்கிறார்.
எப்படி சாதி குறித்து கேலி பேசிக்கொண்டு சாதியை தக்கவைப்பது என்பதே அது
ஏன் சாதியை தக்க வைக்கனும் சாதியை தக்கவைக்காமல் பார்பனியத்தை தக்கவைக்க முடியாதெனும் கவலை ஜெயமோகனுக்கு
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================