ஜெயமோகன் கோரும் உண்மை எது ?

இணையம் பலரை எழுத வைக்கிறது அதில் எழுத்தாளனும் அடக்கம் ஏன் இப்படி கூறுகிறேன் என்றால் எழுத்தாளர்களும் அறிவு ஜீவிகளும் மட்டுமே பகிர்ந்து கொள்ள கூடியதான விசயங்களும் அதற்கான தளமும் மட்டுமே எண்பதுகளில் அதற்கு முன்பு இருந்தது .

பல்வேறு அரசியல் சமூக தனிமனித விருப்பு வெறுப்புக்களை கொட்டும் இடமாக தீர்வு தேடும் அதை அடிப்படையாக கொண்டு விவாதிக்கும் இடமாக இணையம் உருவாகி கிடப்பதை ஜெயமோகன் போன்றவர்கள் ரசிப்பதில்லை என தெரிகிறது http://www.jeyamohan.in/?p=10748

ஏனெனில் இவற்றுள் எழுப்பப்படும் பல கேள்விகள் இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாயையை உடைக்கிறது இந்திய தேசம் , மகாத்மா காந்தி பாரதி போன்ற எந்த கருத்து நிலையிலும் கட்டமைக்கப்பட்ட பிம்பமானது உடைகிறது .

இவற்றை யார் விரும்புவதில்லை என்றால் வலது சாரிகள் விரும்புவதில்லை
அவர்களுக்கு இந்த வாழ்க்கையே போதுமானதாக மாலை நேர விருந்தாக அமைகிறது

புரட்சி பத்தி பேசுவது பீர் புரட்சியாக நக்கலடிக்கப்படுகிறது காரணம் இணையத்தில் எழுதுபவர்களின் சம்பளம் ;ஐம்பதினாயிரம் சம்பளம் வாங்குபவன் புரட்சி பத்தி பேசகூடாதென தடைவிதிக்கிறார்கள்.

ஏன் பேச கூடாது எனும் கேள்வி ஒரு புறமும் ,ஏன் பேச வேண்டும் என்ற கேள்வி இன்னொரு புறமும் எழுப்புவோம் பொதுவுடமை புரட்சி வர்க்க , சாதி ஒழிப்பு இவை எல்லாம் அனைவருக்கும் பொதுவானவை .

சிந்தனை என்பது எப்படி மூளை இருக்கிற எல்லா மனிதனுக்கும் வேண்டுமோ அதை போல மாற்றம் கோரும் புரட்சிகர கருத்துக்கள் எல்லா மனிதனுக்கும் வேண்டும் வாங்குகிற சம்பளமா ஒரு மனிதனின் வர்க்க சார்பு நிலையை தீர்மானிக்கிறது ? இல்லை அவரது செயல்பாடுகள் ஆமாம் இணையம் செயல்பாடுகளை கண்காணிக்க கூடிய முறையில் அமைக்கப்பட்டதல்ல .

அப்படியே இதழியலை எடுத்துகொண்டாலும் எத்தனை எழுத்தாளர்களின் வாழ்க்கை பொதுவெளியில் வந்துள்ளது என்பது கேள்விக்குறி ;வாங்குகிற சம்பளம் தீர்மானிப்பதில்லை என்ற முடிவுக்கு பிறகு நாம் அடுத்த கேள்விக்கு போனால்

ஏன் பேச வேண்டும் என்ற கேள்வியை எதிர்கொள்கிறோ ம்தற்போது இணையத்தில் இருக்கும் நண்பர்களும் தோழர்களும் யார் ?

அவர்கள்  எல்லாம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கி கொண்டு இருந்தவர்கள் தான் தனது திறமையால் ஐம்பதாயிரம் வாங்கிறார்கள் .

இவர்கள் சம்பளம் அதிகமானவுடன் தனது அரசியல் சார்பு நிலையை மறந்து
பூர்வா தன்மை ஆனாதால் தவறே ,

ஆனால் தனது சார்பு நிலையை மாற்றி கொள்ளாமல் இருப்பதற்காக இவர்களை நாம் பாராட்ட வேண்டும்
//இவர்கள் எழுதுவதை அப்படியே விழுங்கி அதே மனநிலையை பங்குபோட்டுக்கொள்ளும் நடுத்தர, உயர்நடுத்தர வாசகர்கள் நம் சமூகத்தில் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். இந்துவிலோ டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலோ அவுட்லுக்கிலோ ஒரு மாவோசஆதரவுக் கட்டுரையை வாசித்து ஆவேசமாக ஆதரித்து பேசிவிட்டால் தங்களை முற்போக்கினராக எண்ணி நிறைவுகொள்ளக்கூடியவர்கள் இவர்கள்.//

அறிவு பூர்வமாக பேசவேண்டிய இடத்தில் ஏன் இந்த எழுத்தாளன் மனநிலை உணர்வு என போகிறான் உணர்வு பூர்வமாக பேசவேண்டிய இடத்தில் கலை எழுத்து என்ற போர்வையில் தப்பிக்கிறான் என்பதெல்லாம் அவர் வலதுசாரியாக இருக்கிறான் என்பதே காரணம்

ஒரு மனநிலையை பங்கு போட்டு கொள்ளா முடியுமா முக்கியமாம மாவோயிசத்தை எல்லாம் மனநிலை சார்ந்த விசயமாக பார்க்கவே முடியாது
அதில் பங்கு போட்டு கொள்ள என்ன இருக்கிறது

"உலகில் எங்காவது ஒரு மூலையில் துயரபடுபவர்களுக்கு ஆதரவாக எவன் சிந்தித்தாலும் அவன் என் தோழனே "

என்ற சேகுவேராவின் வரிகள் எதை பங்கு போட சொல்கிறது

உதவும் மனப்பான்மையை அன்பைத்தானே தவிர மனபான்மை என மூடி மறைக்கும் ஒரு ஹிப்பி மனநிலையையா சொல்கிறது அப்படி சொல்லி தப்பிப்பதுதான் ஜெயமோகன் போன்றவர்களது வேலை .


ஆக செயமோகன் கோரும் உண்மை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது
ஒடுக்கும் வர்க்கத்தின் கட்டமைப்பை பாதுகாக்கு வகையானது .

எந்த தகுதியின் அடிப்படையில் இதை கோருகிறார்

அரசியல் வாதியாக இல்லாமல் வழிப்போக்கனாக இல்லாமல்
எழுத்தாளனாக இதை எப்படி பிரிக்கமுடியும் யாருக்காவது கடமையில் படிநிலைகள் பொறுப்பு கூட குறைய இருக்கிறதா

இந்த இடத்தில் தான் தனது அரசியல் சார்பு நிலையை மறைக்கிறார் செயமோகன்

எழுத்து என்பது எப்படி வர்க்க சார்பற்றதாக இருக்க முடியாதோ அப்படியே எழுத்தாளன் என்பவனும் வர்க்கசார்பற்றவன் இல்லை

ஆகவே வர்க்க சார்பு இல்லாதா எழுத்தில்லை என முடிவான பின்பு

வர்க்க சார்பற்ற எழுத்தாளன் என்பது கற்பனையே

செயமோகன் குட்டி பூர்சுவா என்பது
அவரது சார்புநிலையில் விளைவுதான்

அவர் கோரும் உண்மை என்பது நடப்பில் இருக்கும் ஒடுக்குகிற உண்மை
ஆனால் அது பல வேடம் தாங்கி வருகிறது



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post