தரகர்களின் ஆட்டம் -கேலிகூத்தான ஜனநாயகம்




தரகர்கள் ஆட்சி


விபசாரம் செய்யும் தரகனை  தமிழ் சினிமாக்கள் சித்தரிக்கும் விதத்தை பார்த்திருப்பீர்கள் கையில் ஒரு ஆல்பம் ,வெத்திலை டப்பாவை கக்கதில் இடுக்கி பட்டு வேட்டி பட்டு சிப்பா சகிதமா ஒரு கோண நடையை நடப்பார் ,தில்லாணா மோகனாம்பாள் நாகேஸில் இருந்து சமீபத்தில் வந்த படம் வரை இவர்கள் எல்லா பெரிய இடத்திலும் நுழைந்துவிடுவார்கள்

பதவி புரோக்கனை ஏனோ எந்த சினிமாவும் காட்டவில்லை .

இந்நாட்டின் பாராளுமன்றம் ஸ்தம்பிக்கிறது மக்கள் என்ன நடக்கிறதென்ற ஆவலுடனும் தானே தம்போக்கில் விசயங்கள் முடிந்துவிடும் என்ற அதே அசால்டான நடையுடனும் அன்றாட அலுவல்களை முடித்து கொள்கிறார்கள்

ஒரு உழவன் தான் நிலத்தில் விதைத்தது முளைக்குமா என்ற கவலையுடனும் ஒரு
தொழிலாளி இந்த மாதம் சம்பளாம் சிறிது கூட்டி கொடுப்பார்களா என்ற கவலையுடனும் முக்கால் வாசி இந்தியா அதே ஏழ்மை கோலத்தில் தினம் தினம்
இந்தியா உறங்க செல்கிறது .

இவர்களுக்கு ஓட்டு போட்ட அன்றைக்கிலிருந்து நாட்டை யாரோ பாத்துகொள்வார்கள் என்ற நப்பாசையும் தனக்கு தினம் சோறு கிடைப்பதில் சுணக்கம் இருப்பதில்லை என்ற நம்பிக்கையும் நாளை ஓட்ட போதுமானதாக இருக்கிறது

ஆனால் இதெல்லாம் தலைகீழாக நடக்கும் இந்தியா ஒன்று இருக்கிறது அதன் நடைமுறையே வேறு யாரை பதவியில் இருத்துவது ,யாரை இறக்குவது  முதலாளிகளையும் அரசியல் வாதிகளையும் இணைக்கும் புள்ளி எது ,அந்த புள்ளியை அணுக என்ன செய்யவேண்டும் தொடர்புகளை பராமரிப்பது எப்படி தொடர்புகளை பெறுவது எப்படி தொடர்புகள் மூலம் சாதித்து மீண்டும் தொடர்புகள் பெறுவது அதன் மூலம் லாபமடைவது எப்படி என
மக்கள் தொடர்புதுறையில் இருந்த ஒரு பெண் பெயர் நீரா ராடியா இந்தியாவின்
முக்கியமான பதவிகளுக்கு நியமணம் செய்வதில் ஈடுபட்டுள்ளார் அல்லது ,முக்கிய கண்ணியாக செயல்பட்டுள்ளார்

//இந்திய அரசியலைக் கலக்கி வரும் நீரா ராடியாவின் அரசியல் தொடர்புகள் தலையைச் சுற்ற வைக்கின்றன. அவருக்குத் தொடர்பு இல்லாத அரசியல் தலைவர்களோ, பிசினஸ் தலைவர்களோ இல்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய நெட்வொர்க்கின் பின்னணியில் செயல்பட்டுள்ளார் நீரா ராடியா//

இப்படி எழுதுகிறார்கள் இவருக்கு தொடர்பில்லாத அரசியல் வாதிகள் இல்லையாம்

---------------------------
(இந்த பகுதிகள் வேறொரு தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது )

முன்பு இவரது பெயர் நீரா சர்மா. இவரது தந்தை விமானத் துறையில் இருந்தவர். இவரது கணவர் பெயர் ஜனக் ராடியா. இவரை விவாகரத்து செய்து விட்டார். இவர் மூலம் மூன்று மகன்கள் உள்ளனர். ஜனக் ராடியா இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தகர் ஆவர்.

லண்டனில் செட்டிலாவதற்கு முன்பு கென்யாவில் இருந்தார் நீரா. பின்னர் 70களில் லண்டன் சென்றார். அங்கு பள்ளிப் படிப்பையும், வார்விக் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் முடித்தார்.

1995ம் ஆண்டு இந்தியா திரும்பினார். சஹாரா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கேஎல்எம், யுகே ஏர் ஆகிய நிறுவனங்களின் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றினார்.

2000மாவது ஆண்டு கிரவுன் ஏர் என்ற நிறுவனத்தைத் தொடங்கிஅதன் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவருடன் சகோதரி கருணா மேனன் பார்ட்னராக சேர்ந்தார்.

2001ல்தான் தற்போது நடத்தி வரும் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் நோயஸிஸ், விக்டம், நியூகான் கன்சல்டிங் ஆகியவற்றையும் தொடங்கினார். டாடா குழுமத்தின் 90 கணக்குகளை கையாளும் உரிமையைப் பெற்றார். 2008ல் இவரிடம் வந்து சேர்ந்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

2005ம் ஆண்டு மேஜிக் ஏர் என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கி முயற்சித்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதற்குக் காரணம், இந்திய குடியுரிமை இவரிடம் இல்லாததால்.

டாடா நானோ பிரச்சினை சிங்கூரில் வெடித்து வெளிக் கிளம்பியபோது அதைத் தணிக்கும் முயற்சியில் பல மாதங்கள் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வெறும் பிஆர் அதிகாரியாக இருந்து வரும் நீராவின் தொடர்புகளைப் பார்த்தால் மலைக்க வைக்கிறது. காற்று புக முடியாத இடத்திலும் கூட நீராவின் பேச்சு புகுந்திருப்பதை உணர முடிகிறது. அந்த அளவுக்கு பல்வேறு பிரமுகர்களுடனும் வெகு சரளமான தொடர்பைப் பராமரித்து வந்துள்ளார் நீரா.
------------------------------------------------------
இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடாவுடன் அவர் பேசிய பேச்சில், நமக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். சவாலான தருணங்கள் வந்து கொண்டுள்ளன என்று படு கூலாக கூறியுள்ளார் நீரா.

உண்மையில் இப்போது நீராவுக்குத்தான் நேரம் சரியில்லை. ஆனால் இது அத்தோடு நிற்காது போலத் தெரிகிறது. ராடியா பல்வேறு பிரமுகர்களுடன் பேசியதொலைபேசி அழைப்புகளின் 5800 பதிவுகளை அமலாக்கப் பிரிவு தோண்டி துருவிக் கொண்டிருக்கிறது.

50 வயதுகளில் இருக்கும் நீரா பஞ்சாபைச் சேர்ந்தவர். இவரது தந்தை சர்மா கென்யாவில் வசித்து வந்தார். 70களில் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். லண்டனில் இருக்கும்போதுதான் குஜராத்தைச் சேர்நத் ஜனக் ராடியாவை மணந்து கொண்டார் நீரா. பின்னர் அவர் மூலம் மூன்று மகன்கள் பிறந்த பின்னர் விவாகரத்து செய்து விட்டு இந்தியா திரும்பினார். நீராவின் மகன்களில் ஒருவரான கரண், கடந்த 2003ம் ஆண்டு இந்தியா மீடியாக்களில் பரபரப்பாக அடிபட்டவர் ஆவார். அப்போது நீராவின் பிசினஸ் பார்ட்னரான தீரஜ் சிங் என்பவரால் கரண் கடத்தப்பட்டார். தீரஜ் சிங், மறைந்த ஹரியானா முதல்வர் ராம் பிரேந்தர் சிங்கின் பேரன் ஆவார். அன்று முதலே மீடியா வெளிச்சத்தில் விழுந்தார் நீரா.

2003ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் நெருங்கும் வாய்ப்பு நீராவுக்குக் கிடைத்தது. கர்நாடக மாநிலம் பெஜாவார் மடாதிபதியுடன் அவருக்கு ஏற்கனவேஅறிமுகம் இருந்ததால் அதை வைத்து வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டச்சார்யாவுடன் நெருங்கினார் நீரா.

அதேபோல பாஜகவைச் சேர்ந்த ஆனந்தகுமாரும்நீராவின்நெருங்கிய நண்பர் ஆவார். அப்போது ஆனந்த் குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில்தான் ஆனந்த்குமாருடன் நீரா நட்பை ஏற்படுத்திக் கொண்டார். நேரடியாக ஆனந்த்குமாரை போய்ப் பார்க்கும் அளவுக்கு அவருடன் நட்பு கொண்டிருந்தார் நீரா. உண்மையில் ஆனந்த்குமார் மூலமாகத்தான் பெஜாவர் மடாதிபதியின் நட்பு கிடைத்தது நீராவுக்கு.

கூறப்படுகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துடனும் அவருக்கு நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டது. அதன் மக்கள் தொடர்புப் பணிகளையும் நீரா கவனிக்க ஆரம்பித்தார். அதேசமயம், அனில் அம்பானியின் வில்லியாக மாறிப் போனார். டாடா குழுமமும், ரிலையன்ஸும் இணைந்து வருடத்திற்கு ரூ. 30 கோடி கட்டணத்தை நீராவுக்குத் தருவதாக கூறப்படுகிறது.

இப்படி இந்தியாவின் பெரும் பெரும் புள்ளிகளுடன் வெகு சரளமானநட்பையும், தொடர்புகளையும் ஏற்படுத்தி வைத்திருந்த நீரா முன்பு இன்று ஏகப்பட்ட கேள்விகள் வரி சை கட்டி காத்துள்ளன. ஆனால் இதில் நீராவை மட்டும் சேர்த்துப் பார்க்க முடியாது. மிகப் பெரிய புள்ளிகள் எல்லாம் இதில் தொடர்பு கொண்டுள்ளனர். நீரா ஒரு கருவி மட்டுமே.ஆனால் அவரை முன்னிறுத்தியது, அவரை பயன்படுத்திக் கொண்டது யார் என்பதையும் சேர்த்துப் பார்த்தால்தான் இதன் விஸ்வரூபம் தெரிய வரும் என்கிறார் இந்த விவகாரத்தில் அனுபவமுடைய ஒருவர். மேலும் ஆடியோ டேப்புகளை கோர்ட்டில் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியாது. அதேசமயம், நீரா மிகப் பெரிய சிக்கலில் உள்ளார் என்பது மட்டும் உண்மை என்றும் அவர் கூறுகிறார்.
//

மேற்கண்ட விபரங்களில் இருந்து அவர் ஒரு கருவியாகவும் செயல்பட்டுள்ளார்

ஆனால் மிக எளிதில் நுழையும் பேச்சு திறமை உள்ள கருவி இவருக்கு பின்னே பெரிய திமிங்கலங்கள் இருக்க கூடும் .

கனிமொழிக்கு பதவி கிடைக்கவில்லையா இவர் ஆறுதல் கூறுகிறார்

ராசாவுக்கு பதவி போகுமா இல்லையா என்பதை இவர் ஆருடம் கூறுகிறார்

என்ன நடக்கிறது இங்கே ;மொத்தமாக ஒரு இரயிலை மறைக்கிறேன் என சொல்லும் ஒரு மேஜிக்காரனை நான் நம்புவேன் அவனை விட திறமையாக அரசியல் வாதிகள் ஊழலை மறைக்கிறார்கள் .

மக்கள் பாவம்

இதோ ஆட்சியை நாமதான் தேர்ந்தெடுத்தோம் தப்பு நடந்தால் நாம்தானே பொறுப்பென்று அப்பாவியாக நம்பிக்கொண்டுள்ளார்கள்


சினிமா திரை விலகும் போதும் விலகியது உண்மை திரை இல்லை
என நம்ப வைக்கப்படுகிறார்கள் .



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post