தினமும் அல்ல என்றாவது மதிய நேரத்தின் போது எழும் விவாதங்களில் ஆதிக்க சாதியினர் சொல்லும் வாதங்கள்
எவ்வளவு தர்க்க ரீதியில் தவறானவை என்பதை பாருங்கள்
ஒருத்தர் சொல்கிறார் தாழ்த்தப்பட்டவர்களை தாழ்த்தபட்டவர் என சொன்னால் கேசு போடுகிறார்கள்
ஆனால் அதைச்சொல்லித்தானே சலுகை
கொடுக்கிறார்கள்
இவருக்கு ஏன் சொல்ல கூடாது என்பதை புரிய வைக்க சில உதாரணங்களை சொல்லி விளக்கியதும்
அப்படியே தாவுகிறார்கள் இருக்கிற அரசாங்க அதிகாரிகள் நிறைய பேர் தாழ்த்தபட்டவர்கள் தான் அவர்கள் மேலே வந்து விட்டார்கள் இனியும் சலுகை வேண்டாம் என்று
எத்தனை ஆண்டுகளாக சலுகை இருக்கு என்கிற கேள்வியும்
எத்தனை வருடமா ஒடுக்கப்பட்டார்கள்
என்பதை ஒப்பிட்டு பாருங்கள்
(இரண்டாயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்டவர்கள் 50 ஆண்டில் எப்படி முன்னேற்றத்துக்கு வந்து இருப்பார்கள்)
என சொன்னதும்
அடுத்த நாள்முதல் பேச்சை குறைத்து கொள்கிறார்கள்
ஆக இவர்கள் சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை உணராதவர்கள் ஆதிக்க சாதிகளின் முகம் தெரியாமல் பேசுகிறார்கள் அல்லது வேண்டுமென்றே
தெரியாததுபோல நடிக்கிறார்கள்
ஒதுக்கீட்டினால்தான் சாதி வாழ்கிறது என்பன போன்றவை இவர்களை மொண்ணை வாதத்தில் அடங்கும்
சமூக மாற்றம் என்பது சாதியை ஒழிப்பில்
அடங்கி இருக்கிறது அதற்கு போராடித்தான் ஆகனும்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================