டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் -2

1.வேலையை செய் பலனை எதிர்பாராதேன்னு சொல்லுது கீதை ஆனால்
நம்ம தத்துவம் கடமையை செய்யனும் பலனை அதிகமா எதிர்பார்க்கனும் ஏன்

சும்மா மாங்கு மாங்குன்னு உழைச்சு அடுத்த ஒருத்தன் இங்கிரிமெண்ட் வாங்க
நீங்க சாமியாராட்டம் இருக்கவா வேலைக்கு போறீங்க இல்லை

ஆகவே பலன்மேல பற்றுவைக்கனும் இதான் நிர்வாக கீதை

எப்படி வருடம் முழுதும் வேலை செய்தவுடன் பதினைந்து கேள்விகள் அடங்கிய ஒரு பேப்பர் தறுவார்கள் அல்லது அழைத்து பேசுவார்கள் அப்போது  நீங்கள் சொல்வதுபோல
எதாவது செய்து இருக்கவேண்டும் அதற்கென நீங்கள் யோசித்து சில வேலைகளை செய்து வைத்து கொள்ளுங்கள் .

எக்காரணம் கொண்டும் கம்பெனிமேல இறக்கம் காட்டி உங்கள் ஊதியத்தை குறைக்காதீர்கள் .

2.நீங்கள் செய்த சாதனைகளை புகழ்ந்து பேசும் நிர்வாகம் ஆனால் முக்கிய செயல்பாடுகளை நீங்கள் இல்லாமலேயே நடக்கும்படி இன்னொருத்தரை பயிற்றுவிக்கும்படி கோரும்போது அதை செய்யாதீர்கள் நுணுக்கமான சில வேலைகளை உங்கள் பிடிமானத்தில் இல்யென்றால் உங்கள் உதவியாளரே உங்களை மதிக்க மாட்டார்(இப்படி அனைவரும் நினைத்தால் கம்பெனி எப்படி நடக்கும் என்றால் அந்த கவலை முதலாளிக்கு வேண்டும் உங்களுக்கு எதுக்கு)

3.வேலை வாங்கும் இடத்தில் நீங்கள் இருப்பின் வேலையை சிறிதளவும் குறையாமல் வாங்க வேண்டும் இல்லையெனில் நீங்கள் அந்த வேலையை செய்ய வேண்டியது வரும்
இப்படி செய்பவருக்கு அலுவலகத்தில் இளிச்சவாயன் என பெயர்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post