சில விவாதங்களை தவிர((அன்புமணி மந்திரியாக இருந்தபோது போராடிய டாக்டர்மாணவர்களை அழைத்து ஐந்தாண்டுபடிப்பை ஆறாண்டாக மாற்றுவது சரியா என விவாதித்தார்கள் )
நீயா நானாவில் எழுப்பப்படும் பிரச்சனைகள் மிக மிக அற்பமானவையாகவும் அற்பதனத்தை
விவாதமாக்குபவையாகவும் இருக்கின்றன
நாள் முழுவதும் நுகர்வுவெறியை வளர்க்கும்
நாடகங்கள் மூலம் புத்தியை மழுங்கடிக்கும்
ஒரு சேனல் வாரத்தில் இரண்டுநாட்கள் மட்டும் சமூகமதிப்பீடுகளையும் சமூகத்தின்
பிரச்சனைகளையும் பேசுகிறதே என ஆச்சரியப்பட்டுபோய் தொடர்ந்து இந்த நீயாநானாவை பார்க்க ஆரம்பித்தேன்
மிக சிலதை தவிர பெரும்பாலும் அற்பமான விசயங்களை உடைஅணிவதில் யார் ரொம்ப உசத்தி ஆண்களா பெண்களா
வடகத்தியா தெக்கத்தியா
இப்படி விவாதங்கள் போக ஆரம்பித்தது
இப்போது பெண்களை எதிரே உக்காரவைத்து அவர்களின் எதிரே பையன்களை காதல்பார்வை வீச சொல்லி மார்க்போட வைக்கிறார் கோபி
இந்த நிகழ்ச்சியை பார்த்ததும் எப்படி இருந்தது பேசாமால் மானாட மயிலாட பார்த்து இருக்கலாம்
குத்தாட்டம் என சொல்லி குத்தாட்டம் ஆடுகிறார்கள்
இங்கே விவாதம் என சொல்லி வேற ஒன்றை செய்கிறார்கள்
நீயா நானாவில் தீப்பற்றி எரியும் தலைப்புகள் சிலவற்றை பேசட்டும்
1.கோவை குழந்தை கொலையாளி
என்கவுண்டரில் கொல்லப்பட்டது சரியா
2.அருந்ததிராயை கைது செய்ய முயற்சிப்பது சரியா
இதையெல்லாம் பேசினால் மக்களுக்கு பயன்படும் பேசுகிறார்களா பார்ப்போம்
மேலும் சில:
நீயாநானாவுக்கு அழைத்து பேசசொல்லி காசுகொடுக்காமல் அலைகழித்தார்கள் என்கிறார் சாருநிவேதிதா சுட்டி:
http://www.envazhi.com/?p=10289
நீயா நானாவுக்கு போய்வந்த இன்னொருவரின் பதிவு
http://arataiarangam.blogspot.com/2007/07/blog-post.html
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================