நீதியை நோக்கி

என்கவுண்டர்களை ஆதரிக்கிறோமா?


குழந்தைகள் கடத்தல் கற்பழிப்பு கொலை என்பது என்னமோ மிக சாதாரணமாகி போனது .

குழந்தைகள் இந்த உலகின் செல்வங்கள் சமூகத்தின் கறைபடியாத பூக்கள்

அவர்களை கொல்வது மன்னிக்க முடியாத  குற்றம்

சில மாதத்துக்கும் முன்பு கள்ள காதலனை பழிவாங்க அவனது குழந்தையை கடத்தி கொன்றாள் ஒரு பெண் அவளை அந்த சிறையின் கைதிகள் தாக்கினார்கள் .

இப்போது இரண்டு குழந்தைகளை கடத்தி  கற்பழித்து கொன்ற இரு கயவர்களில் ஒருத்தனை போலீஸ் என்கவுண்டரில் போட்டு தள்ளி இருக்கிறது .

இதில் சிலர் இந்த என்கவுண்டர் சரிதான் என்றும் இதுவே இம்மாதிரி கடத்தல்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் என்றும் வாதிட

இன்னும் சிலர் இது போலீஸின் கையில் நீதியை தரும் அடாவடி செயல் என எதிர்வாதம் செய்கிறார்கள்

ஒரு போரில் கூட குழந்தைகளையும் பெண்களையும் தாக்க கூடாதென விதி இருக்கிறது . ஆனால் எல்லா போர்களிலும்  தாக்கபடுவதும்குழந்தைகளும்,கற்பழிக்கப்படுவதும் பெண்களும்தான்

தன்மீதான வன்முறையை தடுக்கும் அல்லது எதிர்க்கும் வல்லமை அற்ற சிறுவர்களின் மீது வன்முறையை உபயோகிப்பதற்கு ஒரு மனவக்கிரம் வேண்டும் இந்த வக்கிரக்கார்களை மன்னிக்கவே முடியாது என்றல்ல கூடாது என்கிறது மக்களின் மனம்

ஒரு வயதுவந்த நபரை கற்பழிப்பவனையும் கொலை செய்பவனையும் பற்றிய செய்திகள் மக்கள் மனதில் பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்துவதில்லை

ஆனால் இதுவே குழந்தைகள் விசயத்தில் நடக்கும் போது மக்கள் இயல்பாகவே பொங்குகிறார்கள்

அந்த உணர்வின்மீது நாம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பலாம் ஏன் ஜெயேந்திரன் கொலை செய்த போது பொங்கவில்லை ஏன் தா கிருஸ்ணன் கொலையாளிகள் விடுதலை செய்த போது பொங்கவில்லை என
ஆனால் இவை எதிர்வாதமும் தர்க்கவாதமும் செய்யவே உதவும் .

குற்றம் வேறு மன்னிக்க முடியாத குற்றம் வேறு

மறுபுறம் போலீஸ் கையில் தண்டனை கிடைத்ததை வைத்து பேசினால் போலீஸ் எல்லாம் ரொம்ப சுத்தமா அன்றாடம் ஐந்துக்கும் பத்துக்கும் லஞ்சம் வாங்க நாம் எதற்காவது காவல் நிலையம் சென்றால் பேப்பர் வாங்கிவா பேனா வாங்கிவா
என விரட்டும் போலீஸ் ஒழுக்கமா என கேட்கலாம்

போலீஸ் என்கவுண்டரை ஆதரிக்கும் அளவு மக்கள் இந்த விசயங்களை வெறுக்கிறார்கள் என புரிந்துகொள்வது சரியா

அல்லது மக்கள் மழுங்கிபோய் சுயநலமாக
இந்த விசயத்தில் போலீஸ் என்கவுண்டரை ஆதரிக்கிறார்கள்

தார்மீக நியாயம் தெரியாத ஒருஅமைப்பிடம் போய் சரணடைகிறார்கள் என்பது சரியா

ஒரு விசயத்தை மன்னிக்க முடியாத அளவு வக்கிரமும் ,கேவலமும் நிறைந்த ஒரு விசயத்தை ஒருவன் செய்யும்போது
அதற்கு தண்டனை கொடுத்தவனை மக்கள் கண்ணைமூடி கொண்டு ஆதரிப்பது உணர்வு பூர்வமானது அது சரியல்ல

ஆனால் அந்த உணர்வு அவர்களுக்கு வந்ததற்கு காரணம்

நாள்தோறும் செத்துவரும் மனிதாபிமானம்

சகமனிதனை நேசிக்க வேண்டும் என்ற கோரிக்கை மறைந்தை

சகமனிதனை வெறுக்காமலாவது இருக்கனும் என்ற நிலைக்கு வந்து

சகமனிதனை கொலைசெய்யாமலாவது
இருக்கனும் என்ற நிலைக்கு போய்

சகமனிதனை கூட அல்ல அவனது குழந்தையாவது கொல்லாமல் இருக்கவேண்டும் என்ற குறைந்த பட்ச கோரிக்கையாகி விட்டது

எப்போது சமமான நீதியும் சகமனிதனின் மேல் நேசமும் பிறக்கும்

மறுபுறம் ஏன் மற்றவிசயங்களின் மீதும் சமூகத்தின் பார்வை படவில்லை சமூகம் மெளனித்து இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புவோர் .

சமூகம் கேள்வி எழுப்பும் விசயங்களை புறக்கணிப்பதன் மூலமாக கேள்வி எழுப்பாத அல்லது மெளனம் காட்டும் விசயங்களை கேட்பதன் மூலம் அல்லாமல்

சமூகம் கேள்வி எழுப்பும் விசயங்களை ஆராய்வதன் மூலமாக கேள்வி எழுப்பாத அல்லது மெளனம் காட்டும் விசயங்களை கேட்கலாம் .

என்கவுண்டர் சரியா தவறா என்ற விவாதமானது

நீதி சரியா தவறா என்பதில் இருந்து
நீதிபதி சரியா தவறா என்கிற கேள்விக்குள் சிக்கி தவிக்கிறது

நீதியை சரி என்போருக்கு எதிர்வாதம்
நீதிபதி தவறு என்பதல்ல

நீதிக்கும் நீதிபதிதான் என்பதை நேராக பொறுத்துவதற்கு சமூகமாற்றம் ஒன்றே முக்கிய தேவையாக இருக்கிறது


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post