கல்வெட்டுக்கு பதில்

நண்பர் கல்வெட்டு எழுதிய பதிவை படித்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்

அதில் காணப்படும் வரிகள் தாம் இவை

http://kalvetu.blogspot.com/2010/10/blog-post.html

//கம்யூனிச‌ அடிப்படையானது, தொழிலாளர்கள் அதாவது மூலதனம் என்ற‌ ஒன்று இல்லாமல் உடல் உழைப்பால் வாழ்பவர்களின் நலன் சார்ந்தது. இயந்திரங்களின் பங்கு பஞ்சாலைகளில் அதிகமான போது உண்டான சித்தாந்தம் இது. இந்த சித்தாந்தம் தோன்றிய கால‌கட்டத்தை ஆராய்வது  இதன் அடிப்படையைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமானது. கம்யூன் என்பது (நிலப்பிரபுக்களை எதிர்த்து உண்டான ..ஏறக்குறைய கம்யூனிட்டி என்ற அர்தத்தில்) கம்யூனசித்தின் முன்னோடி எனலாம்.

உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட தொழிலாளர்களின் நலனுக்காக உண்டாக்கப்பட்ட நல்லதொரு கோட்பாடு கம்யூனிசம். கம்யூனிச‌ சிற்பியான மார்க்ஸ் மற்றும் எங்க்கெல்ஸ் இணைந்து தோற்றுவித்த இந்த 68 பக்க மேனிவஸ்ட்தான் கம்யூனசத்தின் பைபிள் என்று சொல்லலாம்.//


கல்வெட்டு கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையையும் எப்படி பைபிள் என சொல்லலாம்

மிக தவறான புரிதல் .

உலகை புரிந்து கொண்டால் மற்றும் போதாது அதை மாற்றவேண்டும் என சொன்ன
மார்க்ஸ்
உலகை உன்னால் புரிந்து கொள்ள முடியாது அதற்கு அடங்கி போ நீ பாவி என சொல்லும்
மதங்கள் எங்கே

மதம் என்பது ஒரு அபினி என சொன்ன மார்க்சியத்தை நீங்கள்
மதம் என சொல்வதன் மூலம் யாருக்கு ஆதரவாக போகிறீர்கள்

உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் சரி முதலாளிவர்க்கத்துக்கும் சரி
சரியான தீர்வை வழங்கியது கம்யூனிச சிந்தனைகளும் மார்க்ஸ் வகுத்தளித்த
பொருளாதார கோட்பாடுகளும்தான்

உங்கள் கருத்துக்களை மறுபரிசீலனை செய்யுங்கள் அல்லது விவாதம் செய்து
நிரூபியுங்கள்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post